லிஜோ ஜோஸ் இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டி.!

லிஜோ ஜோஸ் இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jallikattu 2019 movieலிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய மலையாள திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமாத் & சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் இந்திய திரைப்பட கூட்டமைப்பு (எப்.எப்.ஐ) சார்பில் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு எருமையை ஒரு கிராமம் அதைப் பிடிக்க முயற்சிக்கிறது. இது மனித நாகரிகம் பற்றிய ஒரு உருவகக் கதையாகும்.

இந்த இயக்குனர் இயக்கிய 7வது படம் இது.

இதற்கு முன்பு ஆமென், அங்கமாலி டைரிஸ் மற்றும் ஈ.மா.யு போன்ற இவரது படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை.

கடந்தாண்டு 2019 ஆம் ஆண்டு சோயா அக்தரின் கல்லி பாய் படம் தேர்வானது.

இதில் ரன்வீர் சிங் & ஆலியா பட் ஆகியோர் நடித்து இருந்தனர்.

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு இந்தியன், நியூட்டன், பார்பி, பீப்லி லைவ் போன்ற திரைப்படங்கள் முந்தைய ஆண்டுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை, எந்த இந்திய படமும் சிறந்த சர்வதேச பிரிவில் விருதை வென்றவில்லை.

குரு (1997) மற்றும் ஆதாமின்டே மகன் அபு (2011) ஆகிய படங்களுக்கு பிறகு அகாடமி விருதுகளுக்கு இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டது.

தற்போது 3வது திரைப்படம் ஜல்லிக்கட்டு (மலையாளம்) ஆகும்.

93 வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 25, 2021 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

Jallikattu by Lijo Jose is india’s official entry to the oscars 2021

யார் நீங்க..? உங்க படம் பார்த்ததில்லையே.. மிஷ்கினை அடையாளம் தெரியாத தியேட்டர் முதலாளி

யார் நீங்க..? உங்க படம் பார்த்ததில்லையே.. மிஷ்கினை அடையாளம் தெரியாத தியேட்டர் முதலாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மிஷ்கின் சினிமா மீது கொண்டிருக்கும் அளவில்லாத காதல், சினிமா மீதான பெரும் வேட்கை மற்றும் மரியாதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பல பொது இடங்களில் அவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் உண்மையான காதலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.

இயக்குநர் மிஷ்கின் தனது ‘பிசாசு 2’ படத்திற்காக திண்டுக்கல் மாநகர் பகுதியில் லொகேஷன் பார்க்க சென்ற இடத்தில், பல வருடங்களுக்கு முன்னர் தன் சிறு வயதில் தனது தந்தையுடன் சென்று திரைப்படங்கள் பார்த்த திரையரங்கை சென்று பார்வையிட்டுள்ளார்.

அங்கிருந்த வயதான தியேட்டர் முதலாளி இயக்குநர் மிஷ்கினை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

யார் நீங்க..? உங்க படங்கள பார்த்ததில்லையே என தெரிவித்துள்ளார்.

இதில் தன் ஆணவம் உடைந்து போனதாக தெரிவித்தார் மிஷ்கின்.

பின்னர் தியேட்டரை பார்வையிட வந்ததை கேட்டு மகிழ்ந்து, மரியாதை நிமித்தமாக தியேட்டரை சுற்றி காட்டியதுடன், சில காட்சிகளை தியேட்டரில் திரையிட்டு காட்டினார்.

சிறு வயதில் கண்ட அதே உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் அக்காட்சிகளை கண்டு மகிழ்ந்தார் மிஷ்கின்.

தியேட்டர் முதலாளியின் மகன்களால் அவர் அடையாளம் கண்டுக்கொள்ளப்பட்டு அவர் வந்ததில் பெருமையடைந்து அவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் இந்த நேரத்தில் அந்த தியேட்டர் இன்னும் சில காலங்களில் இடிக்கப்படவுள்ள செய்தி கேட்டு மனம் வருந்தினார் மிஷ்கின்.

பிரபலங்கள் களத்தில் இறங்கி திரையரங்குகளை பார்வையிட்டு திரையரங்குகளுக்கு ரசிகர்களை கூட்டி வர வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த கடினமான காலத்தில் திரைப்படங்களுக்கு செய்யும் மிகப்பெரும் மரியாதையாக, பிரபலங்கள் ஒன்று சேர்ந்து திரையரங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். அது ஒன்றே இப்போதைய அவசிய தேவை” என்று அவர் நம்புகிறார்.

NVGP theatre

Director Mysskin emotional post about NVGP theatre

எங்ககிட்ட கஜானா இல்லை.. எங்களால முடிஞ்சது செய்றோம்..; நிவர் நிவாரணம் குறித்து கமல்

எங்ககிட்ட கஜானா இல்லை.. எங்களால முடிஞ்சது செய்றோம்..; நிவர் நிவாரணம் குறித்து கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகாரைக்காலை மையம் கொண்டு வந்த நிவர் புயல் திடீரென வடக்கு நோக்கி கடலூர் & புதுச்சேரிக்கு சென்றது.

அதன்பின் தீவிரப்புயலாக வலுவிழந்து இரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 2.30 மணிக்குள் நிவர் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது,

இதனால் கடற்கரையோரத்தில் இருந்த குடிசைகள், மரங்கள், விசைப்படகுகள் உள்ளிட்டவை சின்னபின்னமாயின.

மேலும் சென்னையிலும் சில பகுதிகளில் சேதம் அடைந்துள்ளன.

பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.

எனவே புயல் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசனும் சைதாப்பேட்டையில் உள்ள நிவாரண முகாமில் மக்களை சந்தித்து வருகிறார்.

அங்குள்ள 250 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் அவர் பேசியதாவது…

“விளம்பர பலகைகள் விழுந்து ஏற்படும் மரணம் இன்னமும் நடைபெறுகிறது.

நாங்கள் அரசு கிடையாது. அரசிடம் உள்ளது போல் கஜானா எங்களிடம் இல்லை.

எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். நிவாரணம் என்பது இந்த வருடத்திற்கானது. எனவே முடிவு செய்து நிரந்தரமான நிவாரணம் அளிக்க வேண்டும்” என பேசினார்.

Kamal Haasan says his motive is good things sould happen for public

விஷால் & ஆர்யா இருவரையும் ‘எனிமி’ ஆக்கிய நோட்டா டைரக்டர்

விஷால் & ஆர்யா இருவரையும் ‘எனிமி’ ஆக்கிய நோட்டா டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு விஷால் & ஆர்யா மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதில் மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை இருமுகன், நோட்டா படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் அண்மையில் முடித்தனர்.

இந்த நிலையில் விஷால் – ஆர்யா இருவருமே இணைந்து தங்களின் படத்துக்கு ‘எனிமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார்.

நடிகர் தனுஷின் பழைய மேலாளரான வினோத் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

விஷால் & ஆர்யா இருவரும் சினிமாவைத் தாண்டி நெருக்கமான நட்பில் உள்ளவர்கள். அவர்களின் படத்திற்கு ‘எனிமி’ என்று பெயரிட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vishal and Arya reunite for Anand Shankar’s Enemy
Tamil film Enemy

கார் ப்ரேக் டவுன்… மெட்ரோவில் பயணித்து ப்ளைட்டில் பறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

கார் ப்ரேக் டவுன்… மெட்ரோவில் பயணித்து ப்ளைட்டில் பறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya rajeshநிவர் புயல் வருகையால் சென்னையில் ஓரிரு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளே தெரியாத அளவுக்கு மழை நீர் வெள்ளமாக தேங்கிநிற்கிறது,

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹைதராபாத் செல்வதற்காக, சென்னை விமானம் நிலையத்திற்கு காரில் செல்ல விரைந்துள்ளார்.

ஆனால் சாலைகளில் வெள்ளம் & போக்குவரத்துக்கு நெரிசலால் அவரது கார் சிக்கிக்கொண்டுவிட்டது.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா, மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

பின்னர் விமானநிலையத்தை அடைந்துள்ளார்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Nivar forces actress Aishwarya Rajesh to take public transport

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி.. ‘மொட்டை’ ராஜேந்திரனின் ‘தகவி’

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி.. ‘மொட்டை’ ராஜேந்திரனின் ‘தகவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Motta Rajendran in Thagaviஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை.

அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் ” த க வி”.

“ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ….. உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.. என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற ஜீவனான கருத்தை கொண்டு ஒரு படத்தை உருவாக்கி வருகிறோம்.

இதில் பவாஸ். குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன் ” நான் கடவுள் ராஜேந்திரன் கும்மாளமிட்டு கலகலப்பு ஊட்டும் காட்சிகளை சமீபத்தில் சேலத்தில் படமாக்கினோம்.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழியில் நடக்க செய்வது ஒரு சவாலான காரியம். இதை சவாலாக ஏற்று ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்.” என்று கூறுகிறார் இயக்குனர் சந்தோஷ்குமார் .
சிவகுடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார் தயாரிக்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரனுடன், சிங்கம் புலி , அஜய் ரத்தினம், வையாபுரி மற்றும் ராகவ் , ஜெய் போஸ் இருவரும் நாயகன்களாக நடிக்க இவர்களுடன் சாப்ளின் பாலு, பயில்வான் ரங்கநாதன், தேவி, உமா, ஜீவிதா, ஐந்து கோவிலான், கிங்காங், விஜயபாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

சேலம், ஏற்காடு, ஒடஞ்ச பாலம், விநாயகம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, உட்பட அதனை சுற்றி உள்ள இடங்களில் படம் வளர்ந்துள்ளது.

அரிகாந்த் கேமராவையும், கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசையையும், எம்.சக்திவேல் கதை, வசனத்தையும் , டாக்டர் .சி.சரவண பிரகாஷ் இணைத்தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.

எஸ். நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தை சந்தோஷ்குமார் . ஜெ. திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

பின்னனி இசைச் சேர்ப்பு நடைபெற்று வரும் இப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

Motta Rajendran’s Thagavi will release on January 2020

More Articles
Follows