ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsகோவையில் புதிதாய் உருவாகியுள்ள பிரின்ஸ் ஜீவல்லரியின் புதிய கிளையை திறந்து வைக்க சென்றார் தனுஷ்.

எனவே அவரை பார்க்க கட்டுங்கடங்காத கூட்டம் கூடியது.

இதுகுறித்து தனுஷ் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“திறப்பு விழாவுக்கு வந்தபோது என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.

உங்களை சந்திக்க விரும்பினேன். ஆனால் விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதாலும் வேலையின் அவசரம் காரணத்தினாலும் விரைந்து செல்ல நேரிட்டது.

எனவே உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

அஜித்-சூர்யாவுடன் நடிக்கும் கமல் மகள்களுக்கு ஒரே கேரக்டராம்

அஜித்-சூர்யாவுடன் நடிக்கும் கமல் மகள்களுக்கு ஒரே கேரக்டராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruthi haasan and akshara haasanஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர் இப்படத்தில் ஹீரோவுக்கு உதவும் பத்திரிகையாளராக நடிக்கிறாராம்.

அதுபோல் அஜித்தின் ஏகே 57 படத்தில் நடிக்கும் அக்ஷராஹாசனும் ஹீரோவுடன் பயணிக்கும் பத்திரிக்கை தொடர்பான கேரக்டரிலும் நடிக்கிறாராம்.

சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த நெருப்புடா அருண்ராஜா காமராஜ்

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த நெருப்புடா அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and arun raja kamarajஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்குகிறார்.

இது ஜிவி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் 8வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடங்காதே என்று பெயரிடப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

இவர்களுடன் வைபவி சந்தில்யா, தம்பி ராமையா உள்ளிட்டோர் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அஜித்தின் படம் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்

அஜித்தின் படம் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala 57 movie stillsஅஜித் மற்ற நடிகர்களைப் போல் அடிக்கடி வெளியில் தலை காட்டமாட்டார்.

பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் வரமாட்டார். தேர்தல் சமயத்தில் ஓட்டு போட வந்திருந்தார்.

இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளுக்கு மட்டுமே அவர் பொது இடங்களுக்கு வருவார்.

எனவே அவரது போட்டோக்கள் அதிகம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் அவர் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு ஆஸ்ட்ரியாவில் நடந்து வருகிறது.

அப்போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜோக்கர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

ஜோக்கர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth praises joker filmராஜீமுருகன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஜோக்கர் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் தனுஷ் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும பல பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில், இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இப்படக்குழுவினரை பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில், அருமையான படம் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது வாரத்திலும் இப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹீரோக்களில் சிவகார்த்திகேயனுக்கு 4வது இடம்; ரசிகர்களுக்கு நன்றி

ஹீரோக்களில் சிவகார்த்திகேயனுக்கு 4வது இடம்; ரசிகர்களுக்கு நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanஹீரோக்களின் நடிப்பையும் அவர்களின் ஸ்டைலையும் பின்பற்றிய ரசிகர்கள் தற்போது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களை பாலோ செய்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தற்போது 4வது இடத்தில் இருக்கிறார். அதாவது 2 மில்லியன் பாலோயர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

அதற்காக தன் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று இடங்களை பிடித்த ஹீரோக்கள் யார்?

1) ரஜினி 3.39 மில்லியன்

2) தனுஷ் 3.17 மில்லியன்

3) சித்தார்த் 2.28 மில்லியன்

இவர்களை அடுத்து மற்ற இடங்களை பிடித்துள்ள ஹீரோக்கள் யார்?

5. மாதவன் – 1.54 million

6. ஜி.வி.பிரகாஷ் – 1.37 million
7. சிம்பு – 1.34 million
8. பிரகாஷ்ராஜ் – 1.33 million
9. ஜெயம் ரவி – 1.21 million
10. சூர்யா – 1.12 million

(இத்தகவல் ஆகஸ்ட் 18, 2016 வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது)

More Articles
Follows