தனுஷின் மாஸ் அறிவிப்பு இதுதான்…

தனுஷின் மாஸ் அறிவிப்பு இதுதான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushசில தினங்களுக்கு முன்பு மாஸான அறிவிப்பை ஒன்றை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார் தனுஷ்.

இதனிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை நவம்பர் 9ஆம் தேதி காலை 9.10 மணிக்கு அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என நேற்று நள்ளிரவில் தெரிவித்திருந்தார்.

Dhanush ‏@dhanushkraja
Announcement will happen tom morning 9:10 am .. super excited and thrilled.

தற்போது அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது…வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை கலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரிக்கிறார்.

இதை சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார்.

அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இருவருமே இசையமைக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகுகிறது.

இதன் சூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது.

‘கறுப்பு பணம் ஒழிப்பு..’ உங்க ஸ்டார்ஸ் என்ன சொல்றாங்க…?

‘கறுப்பு பணம் ஒழிப்பு..’ உங்க ஸ்டார்ஸ் என்ன சொல்றாங்க…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijaykanth dhanush nayanthara rj balajiஇந்தியா சுதந்திரம் அடைந்த அன்று ஏற்பட்ட புத்துணர்ச்சியை போன்று இன்று நம் நாடெங்கிலும் மற்றொரு புரட்சியை காண முடிகிறது.

கறுப்பு பணம், ஊழல் மற்றும் கள்ள நோட்டு ஒழிப்பு திட்டத்தை குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்புதான் இந்த எழுச்சியை உருவாக்கியுள்ளது.

ரூ. 500, 100 நோட்டுக்கள் இனி செல்லாது என்பது குறித்த விவாதங்களை விடிய விடிய பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

மேலும் பிரபலங்களும், நட்சத்திரங்களும் மோடிஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில…

Dhanush ‏@dhanushkraja
Fabulous move #ModiJi. Historical. Respect #Jaihind #Swachbharat!! #ProudIndian

Nayanthara✨ ‏@NayantharaU
Fab and Intelligent move #ModiJi Much needed step in eradicating black money#SwachhBharat #BlackMoney

N.Nataraja Subramani ‏@natty_nataraj
Clean India no black money….:)))

vijayantony ‏@vijayantony
Thank you @narendramodi sir

ஆர்.ஜே.பாலாஜி இது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோல் பங்குகள் பொதுமக்கள் கொடுக்கும் ரூ. 500, 1000 நோட்டுக்களை வாங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

soundarya rajnikanth ‏@soundaryaarajni
#ModiJi #Jaihind #Swachbharat

Kabir Duhan Singh ‏@Kabirduhansingh
I will miss you …. Rip
அஜித் வில்லன் கபீர் துகான் சிங்… ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்து கொண்டு அழுவது போல படம் பிடித்து, ஐ மிஸ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ்.. ஐ லவ் மோடி என மோடியின் படத்தை பதிவிட்டுள்ளார்.

Vijayakant ‏@iVijayakant
#கருப்புபணம்_ஒழிப்பு_நடவடிக்கை பிரதமர் மோடி அவா்களின் நடவடிக்கையை மனதார வரவேற்கிறேன். லஞ்சம் ஊழலை ஒழிக்க #தேமுதிக என்றும் உறுதியாக இருக்கும்.

சாமான்ய மக்களுக்கு ஒன்றிரண்டு நாட்கள் குழப்பமாகவும், ஊழல்வாதிகளுக்கு போிடியாகவும் இருக்கும்.

‘புதிய இந்தியா பிறந்தது…’ மோடியை வாழ்த்திய ரஜினி

‘புதிய இந்தியா பிறந்தது…’ மோடியை வாழ்த்திய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini modiபாரத பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபின் சுத்தமான இந்தியா உள்ளிட்ட பல ஆரோக்கியமான விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 8, 2016) கள்ள நோட்டை ஒழிக்கும் விதமாக ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுக்கள் செல்லாது என இரவு 8 மணிக்கு திடீரென அறிவித்தார்.

இது இந்தியளவில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது… ”

“வாழ்த்துகள் மோடி. புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth ‏@superstarrajini
Hats off @narendramodi ji. New India is born #JaiHind

ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் கறுப்பு பணத்தை ஒழிக்கும் கேரக்டரில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘பாம்பு சட்டை’க்கு கை கொடுக்கும் விஷால்

‘பாம்பு சட்டை’க்கு கை கொடுக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal bobby simha keerthy sureshஇயக்குனருமான நடிகருமான மனோபாலா தயாரித்துள்ள படம் பாம்பு சட்டை.

நீண்ட காலமாக பல பிரச்சினைகளால் முடங்கி கிடந்த இப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

அறிமுக இயக்குநர் ஆடம்தாசன் இயக்கியுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர்.

அஜேஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

இதை நடிகர் விஷால் நாளை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடுகிறார்.

‘பாம்பு சட்டை’ படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கும் ‘சினிமா சிட்டி’ கே கங்காதரனோடு இணைந்து, அபி & அபி நிறுவனத்தின் இப்படத்தை வெளியிடஉள்ளனர்.

‘கடவுள் இருக்கான் குமாரு’க்கு தடை நீங்கியதா?

‘கடவுள் இருக்கான் குமாரு’க்கு தடை நீங்கியதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash nikki galrani anandhiராஜேஷ் இயக்கத்தில் முதன்முறையாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு.

இப்படம் நாளை மறுநாள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

அம்மா கிரயேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள இப்படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம் புலி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் டீசர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘லிங்கா’ படம் வெளியீட்டின் போது ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி மெரினா பிக்சர்ஸ் சார்பில் விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து 2 வாரம் காலம் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து கோர்ட் உத்தரவிட்டது.

தற்போது இதுகுறித்து இதன் தயாரிப்பாளர் டி. சிவா கூறியதாவது…

“இதன் வழக்கு விசாரணையே நாளைதான் நடைபெற உள்ளது.

ஆனால் படத்தை முடக்க சிலர் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களின் கனவு நனவாகாது” என்றார்.

ரூ. 50 கோடி கிளப்பில் தனுஷின் ‘கொடி’

ரூ. 50 கோடி கிளப்பில் தனுஷின் ‘கொடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush kodiதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்த படம் கொடி.

வெற்றிமாறன் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இதில் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்ஏ. சந்திரசேகரன், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தீபாவளிக்கு (அக், 28) வெளியான இப்படம் தற்போது வரை ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே, இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.

More Articles
Follows