ப்ளாஸ்டிக்கு தமிழக அரசு தடை; மஞ்சப்பையுடன் வரும் தாதா

ப்ளாஸ்டிக்கு தமிழக அரசு தடை; மஞ்சப்பையுடன் வரும் தாதா

DhaDha 87 team plans to distribute Yellow cloth bags to Publicகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”.

பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக அனைத்து இல்லங்களிலும் தனது வரவை அறிவிக்கிறார் தாதா87.

தமிழக அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தாதா87 படக்குழுவினர் மக்களின் தினசரி உபயோகத்திற்காக மஞ்சப்பைகளை விநியோகிக்கவுள்ளனர்.

DhaDha 87 team plans to distribute Yellow cloth bags to Public

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா நடிக்கும் *ஆலீஸ்*

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா நடிக்கும் *ஆலீஸ்*

Raiza Wilson as Alice in Yuvan shankar Raja productionsதனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா,  தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் “பியார் பிரேமா காதல்” என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.

தற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில்.நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளி இட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி,பியார் பிரேமா காதல் வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் கோலோச்சிய ரைசா வில்சன் “ஆலிஸ்” கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

“ஆலிஸ்” ஒரு பிரமாதமான கதை. இயக்குனர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ஒரு பெரிய கதாநாயகி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியும், அதை தொடர்ந்து பெருகிய ரைசாவின் புகழும் அவரையே தேர்ந்து எடுக்க வைத்து உள்ளது. அவருடைய நடிப்பு திறமையும் , கட்டுக்கோப்பான தொழில் நேர்த்தியும் அவரையே கதாநாயகியாக்கியது.

மற்ற நடிக நடிகையர் தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.எங்கள் நிறுவனத்தின் கோட்பாட்டின் படி இந்த படத்தில் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு, கலை இயக்குனர் ஏ ஆர் ஆர் மோகன், அர்ஜுனா நாகா ஏ கே படத்தொகுப்பாளராக அறிமுகமாகின்றனர்.

யுவன் ஷங்கர் இசை அமைக்கிறார் . படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு எங்களது நிறுவனம் தொடர்ந்து நல்ல படங்கள் வெளி வரும் என்று உத்திரவாதம் அளிக்கிறோம்” என்கிறார் தயாரிப்பாளர் இர்பான் மாலிக்.

Raiza Wilson as Alice in Yuvan shankar Raja productions

மீண்டும் மாதவன்-அனுஷ்கா இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

மீண்டும் மாதவன்-அனுஷ்கா இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

Madhavan Anushka Shetty Anjali and Shalini Pandey team up in new movieபீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.

நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர்.

ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமேரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பாளர்கள் T.G.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.

கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Madhavan Anushka Shetty Anjali and Shalini Pandey team up in new movie

அருள்நிதி நடிக்கும் *கே-13* படம் பற்றி பரத் நீலகண்டன்

அருள்நிதி நடிக்கும் *கே-13* படம் பற்றி பரத் நீலகண்டன்

Arulnithi Shraddha Srinath starrer K 13 movie news updatesஒரு நடிகரின் பெயர் ஏதாவது தலைப்புடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுமானால், அருள்நிதி ‘கதைகளின்’ நாயகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு கணிசமான பெயரை பெற்றிருக்கிறார்.

அவரது அடுத்த படமான ‘K13’ படமும் அருள்நிதியின் இன்னொரு முயற்சியை எடுத்துக் காட்டுகிறது.

படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்புகளை பார்வையாளர்களிடையே உருவாக்கியிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் உடனடியாக அனைவரையும் கவர்ந்து, எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.

அருள்நிதியின் திரை பிரசன்னத்திற்கு சமமாக, ‘வீடு’ ஒன்றும் மோஷன் போஸ்டரில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது, இதற்கு முன்னர் வந்த போஸ்டர்களிலும் அது நிகழ்ந்தது.

இதில் மொபைல், கதாபாத்திரங்களை தாங்கிய காகிதங்கள் அல்லது பச்சை நிற சுவர்கள், புகை, துப்பாக்கி சூடு மற்றும் ஒவ்வொரு விஷயமும் ஆழமாக சில விஷயங்களை பதிவு செய்கின்றன.

இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது…

“இந்த படத்தில் “K 13” என்பது குறிப்பது போல வீடு ஒன்று முக்கிய பின்னணியாக அமைந்துள்ளது. ரசிகர்கள் அதோடு ஒன்றிப்போக நாங்கள் தயார் செய்ய வேண்டியிருந்தது.

இந்த மோஷன் போஸ்டருக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் அதற்கு தேவையான தீவிரத்தை கொடுத்த ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார், இசையமைப்பாளர் தர்புகா சிவா ஆகியோருக்கு தான் போய் சேரும்.

மேலும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், எடிட்டர் ரூபன் மற்றும் சண்டைப்பயிற்சியாளர் டி. சுதேஷ் ஆகியோர் படத்தில் அதிக ஊக்கத்தை தந்திருக்கிறார்கள்.

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள K13 திரில்லர் படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தப்ரியா தயாரித்திருக்கிறார்கள்.

Arulnithi Shraddha Srinath starrer K 13 movie news updates

வருஷத்துக்கு 2 படமாவது நடிங்க..; அஜித்திடம் ரோபோ சங்கர் கோரிக்கை

வருஷத்துக்கு 2 படமாவது நடிங்க..; அஜித்திடம் ரோபோ சங்கர் கோரிக்கை

Try to give at least two movies per year Robo Sankar request to Ajithஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் மெரிட்டு என்ற கேரக்டரில் நடித்தவர் ரோபோ சங்கர்.

இப்படம் பற்றியும் அஜித் பற்றியும் அவர் கூறியதாவது….

“அஜித் சாரை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன். என் நலன் பற்றியும் ,குடும்பத்தை பற்றியும் நிறைய பேசினார்.

ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார்.

நான் விஸ்வாசம் வெளிவரும் போது மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்னரே வந்ததை போல ஒரு உணர்வு. என்ன கொண்டாட்டம், என்ன உற்சாகம். இதெற்கெல்லாம் மூல காரணமான அவர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வீற்று இருப்பது, அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டுகிறது.

அந்த எளிமையை நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். அவருடன் இன்னமும் எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ஒரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி” என்கிறார் ரோபோ ஷங்கர்.

Try to give at least two movies per year Robo Sankar request to Ajith

சிம்பு ரசிகராக மஹத் நடிக்கும் *கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா*

சிம்பு ரசிகராக மஹத் நடிக்கும் *கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா*

Mahat and Aishwarya Dutta Starrer Kettavanu Per Edutha Nallavandaபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ரசிகர்களை உடனடியாக கவர்ந்திருக்கிறது.

குறிப்பாக, நகர்ப்புற பின்னணியில் உருவாகும் ரொமாண்டிக் காமெடி படமான இது அனைவரையும் வசீகரித்துள்ளது.

கடந்த மாதம் பூஜையுடன் துவங்கிய இந்த படம், தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று மாலை ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்ற தலைப்பை மகத் ராகவேந்திரா வெளியிட்டார்.

STRன் ஒரு வெற்றி படத்தின் புகழ்பெற்ற பாடல்களில் இருந்து ஈர்க்கப்பட்ட ஒரு வரியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் மகத்.

இந்த படத்தில் STRன் தீவிரமான ரசிகராகவும் நடித்திருக்கிறார் மகத்.

இயக்குனர் பிரபு ராம் சி கூறும்போது…

“மகத் ஒரு வட சென்னை இளைஞராக, STRன் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். உண்மையில், அவர்கள் இருவரின் நட்பு மக்களுக்கு தெரிந்தது, அது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

STR ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த தலைப்பு வைக்கப்பட்டதா என்பது குறித்து அவர் பதிலளிக்கும்போது, இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும்.

இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்” என்றார்.

தரண் இசையமைத்துள்ள இந்த படத்தில் என்னியன் ஜெ ஹாரீஸ் (ஒளிப்பதிவு), பிரவின் பாஸ்கர் (எடிட்டர்), கிஷோர் (கலை), லோகன் (பாடல்கள்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்), சாண்டி (நடனம்) மற்றும் கண்ணன் (SFX) ஆகியோரும் பணிபுரிகிறார்கள்.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Mahat and Aishwarya Dutta Starrer Kettavanu Per Edutha Nallavanda

More Articles
Follows