ஓணம் பண்டிகையில் ரசிகர்களுக்கு தலைவரின் ‘தர்பார்’ ட்ரீட்

ஓணம் பண்டிகையில் ரசிகர்களுக்கு தலைவரின் ‘தர்பார்’ ட்ரீட்

New Projectலைகா நிறுவனத்திற்காக முருகதாஸ் இயக்கி வரும் ‛தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2020 பொங்கலுக்கு வெளியிட இருப்பதால் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியாது. அதன்பின்னர் நிறைய படங்களை திருட்டுத்தனமான சிலர் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இன்று ஓணம் பண்டிகையான (செப்.,11) மாலை 6 மணிக்கு தர்பார் பட 2வது போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

உசுப்பேத்துறாங்க.. அதான் ஹீரோஸ் சம்பளத்தை ஏத்துறாங்க. : கே. ராஜன்

உசுப்பேத்துறாங்க.. அதான் ஹீரோஸ் சம்பளத்தை ஏத்துறாங்க. : கே. ராஜன்

Producer K Rajan and Jaguar Thangam speech at Blue Whale Audio Launchபுளுவேல் விளையாட்டை மையமாக வைத்து ‘புளுவேல்’ என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் பூர்ணா, மாஸ்டர் கபிஷ் கண்ணா, பிர்லா போஸ், பொன்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தை மது, அருமைச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்பட பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது…

“இயக்குனர் நினைத்தால் சாதாரண மனிதரையும் சூப்பர் ஸ்டாராக்க முடியும், சூப்பர் ஸ்டாரை சாதாரண மனிதராக்க முடியும்.

சிலர் உங்கள் படம் நன்றாக ஓடுகிறது என்று உசுப்பேத்துவதை நம்பி நடிகர்-நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவது வருத்தம் அளிக்கிறது

புளுவேல் விளையாட்டைப் பற்றியும், அதை விளையாடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்” என்றார்.

கில்டு சங்க தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது..

“பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நடிக்க நேரமில்லை என பின்வாங்கிட்டார்.
ரூ.15 லட்சம் முன்பணத்தில் ரூ.5 லட்சம் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பிதரவே இல்லை.

அவர் இனிமேல் எந்த சூட்டிங்கில் கலந்துக் கொண்டாலும் மறியல் நடத்துவோம்” என்றார்.

Producer K Rajan and Jaguar Thangam speech at Blue Whale Audio Launch

பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்

பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்

Sundeep Kishan and Priyamani starring The Family man web seriesஅமேசான் பிரைம் வீடியோ சமீபத்திய வெளியீடுகள் மற்றும் புதிய பரிமாண வலைத் தொடர்களை பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை வழங்கி வருகிறது.

இதன் மூலம் திருட்டு வீடியோக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியத் திரையுலகின் தயாரிப்பாளர்கள் இந்த தளத்தை ஒரு பெரிய தீர்வாக கண்டுபிடித்துள்ள நிலையில், இணையத் தொடர்கள் சவ்தேச தொடர்களுக்கு இணையாக உருவாக்கப்படுவதால் பார்வையாளர்களை கூடுதலாக ஈர்க்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ அனைத்து வலைத் தொடர்களும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்று உறுதியளிக்கிறது. இதனால் மொழிகளுக்கிடைய ஏற்படும் தடைகளின் இடைவெளியைக் குறைத்து பார்வையாளர்கள் பல்வேறு அம்சங்களையும் கண்டு ரசிக்க முடியும்.

தற்போது பெரிய பொருட்செலவில் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற அடுத்த வலைத் தொடரை வெளியிடவுள்ளார்கள்.

இதில் தேசிய விருதுபெற்ற நடிகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோஜ் பாஜ்பாய், தேசிய விருது பெற்ற நடிகை பிரியா மணி, ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன், நீரஜ் மாதவ், ஷாரிப் ஹாஷ்மி, குல் பினாங், தர்ஷன் குமார், சன்னி ஹிந்துஜா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோரி நடித்துள்ளனர்.

‘ஸ்ட்ரீ’, ‘கோ கோவா கான்’, ‘ஷார் இன் த சிட்டி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற இரட்டை இயக்குநர்கள் என்று விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ராஜ் & டி.கே (ராஜ் நிடிமோரு கிருஷ்ணா டி.கே) இருவரும் இப்படங்களை சிறிய பட்ஜெட்டில் எடுத்தனர்.

ஆனால், அது தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது. தற்போது அவர்கள் இந்த வலைத் தொடர் மூலம் டிஜிட்டர் தளத்திற்குள் நுழைகிறார்கள். இதில் 10 அத்தியாயங்கள் வேடிக்கையான மற்றும் அதிகமாக மிரள வைக்கும் திரில்லர் தருணங்களைக் கொண்டுள்ளது. இந்த வலைத் தொடரை டி2ஆர் (D2R) பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

‘தி ஃபேமிலி மேன்’ ஸ்ரீகாந்த் திவாரி என்ற மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைக் கூறும் படமாக இருக்கும்.
தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புக்களையும் தவறாமல் இரண்டையும் சமநிலையில் சிறப்பாக செயல்படுகிறார் என்பது தான் ‘தி ஃபேமிலி மேன்’.

10 அத்தியாயங்களை உள்ளடக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ அமேசான் பிரைம் வீடியோவில் வரும் செப்டம்பர் 20, 2019 முதல் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன், ஜப்பான், பிரஞ்சு, இத்தாலி, பிரேசில், போர்ச்சுகீசு மற்றும் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும், 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்படும்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைத்து இடங்களிலும் சிறந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய உள்ளடக்கம், இயக்குநர் விஜய் சுப்ரமணியம் கூறுகையில்…

அமேசான் தொடர்ந்து தனித்துவமான மற்றும் உயர்தரமான கதைகளை நம் பார்வையாளர்களுக்கு ‘தி ஃபேமிலி மேன்’ உடன் கொண்டு வருகிறது. கேமராவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் திறமைகளை வலுப்படுத்தும் வீடாக இருக்கும் என உறுதிப்படுத்துகிறது.

வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சமப்படுத்த முயற்சிக்கும் ஒரு குடும்ப மனிதனின் போராட்டங்கள், அனைவருக்கும் ஆழமாக தொடர்புபடுத்தக்கூடிய வகையில் இப்படம் அமைந்திருக்கும்.

அமேசான் ஒரிஜினர், ‘தி ஃபேமிலி மேன்’ தயாரிப்பாளர்கள் ராஜ் டி.கே., தங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம், நீண்ட-வடிவ கதையைக் கூற விரும்பினோம். அதற்காக சரியான தளத்திற்காக காத்திருந்தோம்.

அப்போதுதான் அமேசான் பிரைமில் அற்புதமான பங்கதாரரைக் கண்டோம். புதிய கதைக்களம், சவாலானதாகவும், திருப்திகரமாகவும் ‘தி ஃபேமிலி மேன்’ உடன் முதல் பயணத்தை உருவாக்கியுள்ளோம். இது உண்மையிலேயே சிறந்த பயணமாக இருந்தது.

பொதுவாக இதுபோன்ற ஆக்ஷன் திரில்லருடன் நகைச்சுவைத் தொடர்புபடுத்தப்படாததாகத்தான் இருக்கும். ஆனால், இத்தொடரை புவி-அரசியலோடு ஆக்ஷன் திரில்லராகவும், நகைச்சுவைக் கலந்தும் கொடுத்துள்ளோம்.

Sundeep Kishan and Priyamani starring The Family man web series

Dr ராஜசேகர்-தனஞ்செயன் இணையும் படம் அக்டோபரில் தொடக்கம்

Dr ராஜசேகர்-தனஞ்செயன் இணையும் படம் அக்டோபரில் தொடக்கம்

Dr Rajasekhar Producer Dhananjayans new movie shooting updatesஇதுதான்டா போலீஸ், எவனாயிருந்தா எனக்கென்ன உள்ளிட்ட அதிரடியான டைட்டில்களில் தெலுங்கு படங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர் நடிகர் டாக்டர் ராஜசேகர்.

இவர் நீண்ட வெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சிபிராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். இவர்களுடன் சத்யராஜ், நாசர், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை சைத்தான், சிபிராஜ் நடித்த சத்யா ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ளார்.

பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பாக தனஞ்செயன் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கிறார்.

இதன் சூட்டிங் அடுத்த மாதம் அக்டோபரில் தொடங்குகிறது.

Dr Rajasekhar Producer Dhananjayans new movie shooting updates

டைரக்டர் ஆகிறார் பைஃட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்

டைரக்டர் ஆகிறார் பைஃட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்

Fight Master Peter Hein going to direct Telugu movieஒரு படம் படமாகும் போது பைட் சீன்களை பைட் மாஸ்டர்களே இயக்குவார்கள்.

ஆங்கிள் எங்கு வைப்பது முதல் ஆக்சன் எப்படி வர வேண்டும் என அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன், கனல் கண்ணன் உள்ளிட்ட பல சண்டை இயக்குனர்கள், முழு படத்தையும் இயக்கியுள்ளனர். அதாவது இயக்குனர்களாகி இருக்கிறார்கள்.

இவர்களின் வரிசையில் புலிமுருகன் படத்திற்காக சிறந்த சண்டை இயக்குனர் என தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெய்ன் அவர்கள் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இது தெலுங்கு படமாக உருவாகவுள்ளது. ஹீரோ யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Fight Master Peter Hein going to direct Telugu movie

எம்ஜிஆர் படத்தலைப்பில் தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

எம்ஜிஆர் படத்தலைப்பில் தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

Dhanush Karthik Subbaraj movie titled Ulagam Sutrum Valibanதனுஷ் நடிப்பில் வளர்ந்துள்ள ‘அசுரன்’ படம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ்.

இப்பட நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பவர் வில்லனாக நடிக்கிறார்.

லண்டனில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இந்தியா திரும்ப உள்ளது படக்குழு.

இந்த நிலையில் இப்படத்துக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்புகளில் ஒன்றான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று டைட்டில் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Dhanush Karthik Subbaraj movie titled Ulagam Sutrum Valiban

More Articles
Follows