நாம எல்லோரும் ‘விக்ரம்’ படம் பார்த்திருப்போம்.; ஒருத்தருக்கு மட்டும் உலக சாதனை விருது ஏன்.?

நாம எல்லோரும் ‘விக்ரம்’ படம் பார்த்திருப்போம்.; ஒருத்தருக்கு மட்டும் உலக சாதனை விருது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘விக்ரம்’.

இந்த படம் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி ரிலீசாகி மாபெரும் சாதனை படைத்தது.

உலகளவில் ரூ.400 கோடியை இந்த படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்தப் படத்தை பார்த்த கமல் ரசிகர் உதயபாரதி என்பவருக்கு உலக சாதனையாளர் விருது கிடைத்துள்ளது.

விக்ரம்

இவர் விக்ரம் படத்தை திரையரங்குகளில் 50 முறை பார்த்திருக்கிறார்.

இதனையடுத்து லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.

இதனையடுத்து உதய பாரதிக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம்

படம் ரிலீசான முதல் நாள் முதல் அவர் பார்த்த அனைத்து டிக்கெட்டுகளையும் சேமித்து வைத்து புகைப்படம் எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விக்ரம்

Created WORLD RECORD by Watching VIKRAM more than 50 TIMES. Thanks a lot for ‘Lincoln Book of Records’ for Honouring me❤?My One & only Relaxation is Ulaganaayagan ? @ikamalhaasan @RKFI @Udhaystalin @KamalHaasanTeam #VikramRoaringSuccess #VikramAllTimeRecord #Vikram100Days https://t.co/LCutu8sAsO

விக்ரம்

மகேஷ்பாபு – பூஜா ஹெக்டே இணையும் ‘SSMB 28’ படத்தின் சூப்பர் அப்டேட்

மகேஷ்பாபு – பூஜா ஹெக்டே இணையும் ‘SSMB 28’ படத்தின் சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் நடிக்கும் படத்திற்கு டைட்டில் வைப்பதற்கு முன்பாக அந்த நடிகர்களின் படத்தின் எண்ணிக்கையை சேர்த்து சொல்வது வழக்கம்.

தற்போது இது டிரெண்டாக உள்ளது.

(ஆனால் ரஜினி கமல் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் படத்தின் டைட்டில் அறிவித்துவிட்டே அவர்களின் ஷூட்டிங்கை தொடங்குகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 28 வது பட தகவல்களை இப்போது பார்க்கலாம்.

SSMB 28 என்ற படத்தை த்ரீ விக்ரம் சீனிவாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ராதாகிருஷ்ணன் என்பவர் தயாரிக்க தமன் இசையமைக்க வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவு என்ற இரட்டையர்கள் இணைந்துள்ளனர்.

இந்த தகவலை அவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த 2023 ஏப்ரல் மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Mahesh Babu – Pooja Hegde starring ‘SSMB 28’ movie update

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘தி வாரியர்’ பட ஹீரோ

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘தி வாரியர்’ பட ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தி வாரியர்’ பட நாயகன் ராம் பொத்தினேனி அடுத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் தன்னுடைய புதிய படத்திற்காக இணைகிறார்.

தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாகவும் இது இருக்கும் என்பதையும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலமாக இருந்து வருவதையும் கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரமான கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட ‘வெந்து தணிந்தது காடு’ (தெலுங்கில் ‘தி லைஃப் ஆஃப் முத்து) தெலுங்கில் ஸ்ரவந்தி மூவிஸ்ஸின் ஸ்ரவந்தி ரவி கிஷோரால் வெளியிடப்படுகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே பொதுவாக ஸ்டைலிஷ், மாடர்ன் த்ரில்லர் கதைகளே பலருக்கும் நினைவுக்கு வரும்.

ஆனால், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஆக்‌ஷன் கதைக்களத்தை சிம்புவுடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கொடுத்து இருக்கிறார்.

சமீபமாக, ராம் பொத்தினேனியும் வழக்கமான மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வருகிறார்.

இந்த நிலையில், கெளதம் மேனன் – ராம் பொத்தினேனி கூட்டணியில் கதைக்களம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

ராமின் அடுத்த படமான #BoyapatiRapo –ன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

பாரதிராஜா அளவுக்கு ஆளில்லை.. 3 ஷிப்டில் யோகிபாபு.. இதுவரை இல்லாத கௌதம் – தங்கர் பச்சான்

பாரதிராஜா அளவுக்கு ஆளில்லை.. 3 ஷிப்டில் யோகிபாபு.. இதுவரை இல்லாத கௌதம் – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அழகி’க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருத்திருக்கும் இந்த படம், என் படங்களில் இன்னொரு மைல் கல் இது.
இயக்குநர் தங்கர் பச்சான் மேலும் படத்தை பற்றி கூறிகையில்…

”பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும். உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது. என்னுடைய சிறுகதையை தழுவித்தான் எடுக்கிறேன்.

ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா.. இதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம். அழகிக்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் வீரசக்தி தமிழ் பற்றுதல் உள்ள ஒரு சிறந்த தயாரிப்பாளர். எந்த நெருக்கடியும் தராமல் இந்த படத்தை எடுத்து வருகிறார். ஆதலால், என் உயிரையும் உணர்வையும் எரிபொருளாய் போட்டு படத்தை உருவாக்கி வருகிறேன்.

இந்த கதைக்கு பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்னு அசலான நடிகர்களாக, இவர்களை விடவும் பாத்திர வடிவுக்கு யாரும் கிடையாது என்பது உறுதி படுத்தும்.

*பாரதிராஜா அளவுக்கு யாரும் இதில் செய்ய ஆளில்லை. ஒவ்வொரு நாளும் ‘தங்கர், உன் படத்தில் நடிக்கிறது எனக்கு பெருமைன்னு சொல்லுவார். தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டியவர்.

*ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு வேலை பார்க்கும் யோகி பாபு இந்த கதையை சொன்னதும் ‘வந்துடுறேன் ஐயா’னு சொன்னார். அதன்படியே வந்து நடித்துக் கொடுத்தார். அவரை நகைச்சுவை நடிகர்ன்னு மட்டும் சொல்லிட முடியாது.

*கௌதம் மேனன், இதுவரை செய்யாத பாத்திரத்தேர்வை அத்தனை கச்சிதமாக நடித்தார்.

*எஸ்.ஏ.சியின் அனுபவம் இதில் பேசுகிறது.
*மம்தா மோகன்தாஸ் தான் முக்கியமான கண்மணிங்கிற பொண்ணா வருது. நந்திதா தாஸ்க்கு பக்கத்தில் வர்ற கேரக்டர். இங்கேயிருந்து இணையத்தில் முகம் பார்த்து கதை சொன்னேன். அங்கேயிருந்து மம்தா கேரக்டரில் வாழ ஆரம்பித்து விட்டது. ‘எப்ப ஷுட்டிங்?’னு கேட்டுட்டே இருக்கு.
நாஞ்சில் நாடன் கதையை எடுத்தேன்.
‘கல்வெட்டு’ கதையை ‘அழகி’யாக்கினேன்.
‘அம்மாவின் கைப்பேசி’ ‘ஒன்பது ரூபாய் நோட்டு’.

அப்படிதான், “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன” என்ற என் சிறு கதை, இப்போது “கருமேகங்கள் கலைகின்றன” வாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு லெனின் இப்படத்துக்கு எடிட் பண்றார்.
ஜீ.வி பிரகாஷ் உடன் வேலை பார்த்ததில்லை.

தேசிய விருது வாங்கினாலும் சாதாரணமாக வந்து நிறைவாக பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார்.

karu megangal kalaigindrana

புலனாய்வு விசாரணை க்ரைம் திரில்லரில் விதார்த் – ரோஷினி

புலனாய்வு விசாரணை க்ரைம் திரில்லரில் விதார்த் – ரோஷினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதில் நடிகர் விதார்த் நாயகனாக நடிக்க, இவருடன் நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.

தமிழில் தயாராகும் இப்படம் புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும்..

எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார்.

ஒளிப்பதிவை எஸ்.ஆர்.சதீஷும் இசை ஜிப்ரானும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும்,சண்டைக்காட்சியை தினேஷ் சுப்புராயன் அவர்களும் அமைக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. என்றும் அதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vidharth and Roshini Prakashs new movie

உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலுக்கு என்ன கேரக்டர் தெரியுமா.?

உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலுக்கு என்ன கேரக்டர் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஆகிய இரு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தற்போது ஹாட்ரிக் வெற்றி கொடுக்க உதயநிதி உடன் இணைந்துள்ளார்.

இவர்கள் இணைந்த படத்திற்கு ‘மாமன்னன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

உதயநிதி தயாரித்து நடிக்கும் இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீனா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த பட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் பற்றி தெரிய வந்துள்ளது.

அவர் உதயநிதிக்கு தந்தை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறத.

பெரும்பாலும் ஹீரோக்களுக்கு நண்பன் மாமா உள்ளிட்ட கேரக்டரில் வடிவேலு நடித்து வந்தார். தற்போது ஹீரோக்கு அப்பாவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Vadivelu character update from Maamannan movie

More Articles
Follows