அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் சூப்பர் காமெடியன்

அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் சூப்பர் காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuஅண்மை காலமாக தமிழ் சினிமாவில் நகைக்சுவையில் கலக்கி வருகிறார் யோகி பாபு.

அண்மையில் வெளியான வில் அம்பு, ரெமோ உள்ளிட்ட படங்களில் இவரின் காமெடி பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இப்படத்தில் கருணாகரனும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Comedy Actor Yogi Babu joins with Ajith in Vivegam

‘விழித்திரு’ படத்தில் 6 பாடல்களை பாடிய 7 இசையமைப்பாளர்கள்

‘விழித்திரு’ படத்தில் 6 பாடல்களை பாடிய 7 இசையமைப்பாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vizhithiru postersமீரா கதிரவன் இயக்கத்தில் கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விழித்திரு’.

ஓர் இரவு.. நான்கு கதைகள்.. ஒரே இலக்கு.. இதைதான் இப்படத்தின் கதைக்களம் என மீரா கதிரவன் தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் விநியோக உரிமையை ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பாக விடியல் ராஜு பெற்று இருக்கிறார்.

இப்பட பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கமும், பிண்ணனி இசையை இசையமைப்பாளர் அச்சுவும் உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் குறித்து சத்யன் மகாலிங்கம் கூறியதாவது…

“இங்கிலிஷ் ஹார்ன் எனப்படும் அரிய வகை இசைக்கருவியை நாங்கள் ‘விழித்திரு’ படத்தில் பயன்படுத்தி இருக்கின்றோம்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக, டி ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ் குமார், சந்தோஷ் நாரயணன், எஸ் எஸ் தமன், சி சத்யா மற்றும் அல்போன்ஸ் என மொத்தம் ஏழு இசையமைப்பாளர்கள் எங்கள் விழித்திரு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களை பாடியுள்ளனர்.

ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இதை விட பெருமை என்ன இருக்கின்றது. மேலும் எந்தவித இசை கருவியையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க மனித குரலை மட்டும் கொண்டு நாங்கள் ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றோம்.

அது தான் சந்தோஷ் நாராயணன் பாடி இருக்கும் ‘பொன் விதி’ பாடல்” என்றார் சத்யன் மகாலிங்கம்.

7 music composers sung 6 songs in Vizhithiru movie

ஜெயம்ரவி-விஜய் இணையும் வனமகன் ரிலீஸ் தேதி

ஜெயம்ரவி-விஜய் இணையும் வனமகன் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravis Vanamagan release dateஇயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் வனமகன்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இப்படம் முற்றிலும் வனம் மற்றும் வனம் சார்ந்த கதைக்களத்தை கொண்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

மே மாதம் 12ஆம் தேதி இப்படத்தை வெளியிட இப்பட தயாரிப்பு நிறுவனமான திங்க் பிக் ஸ்டூடியோஸ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Jayam Ravis Vanamagan release date

ஜிவி. பிரகாஷின் ‘செம’ போஸ்டரை வெளியிட்ட கார்த்தி

ஜிவி. பிரகாஷின் ‘செம’ போஸ்டரை வெளியிட்ட கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi GV Prakashபாண்டிராஜின் உதவியாளர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.

பிரசாந்த் இயக்கியுள்ள இவரின் புரூஸ்லி வருகிற மார்ச் 17ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து பாண்டிராஜ் தயாரித்து அவரின் மற்றொரு உதவியாளரான வள்ளிகாந்த் இயக்கும் செம படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.

ஜி.வி.யே நாயகனாக நடித்து இசையமைக்கும் இப்படத்தில் அர்த்தனாக, யோகிபாபு,கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் ‘செம’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் கார்த்தி.

Karthi unveiled GV Prakashs Sema first look poster

sema

‘மக்கள் தந்த வெற்றியை ரஜினி ஆசியுடன் பெற்றேன்’ – அருண்விஜய்

‘மக்கள் தந்த வெற்றியை ரஜினி ஆசியுடன் பெற்றேன்’ – அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Arunvijay Kuttram 23 teamதவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்பதிலும், நல்லது எங்கு நடந்தாலும் பாராட்டுவதிலும் உயர்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்ற குற்றம் 23 படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார்.

எனவே படத்தின் நாயகன் அருண்விஜய், இயக்குனர் அறிவழகன் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

அப்போது அவர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் பகிர தற்போது அது ட்ரெண்டாகி வருகிறது.

இந்த சந்திப்பு குறித்து அருண்விஜய் கூறும்போது…

“மக்கள் ஆதரவால் குற்றம் 23 மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதை பாராட்டி தலைவர் ரஜினி ஆசி வழங்கினார்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ArunVijay‏Verified account @arunvijayno1 19m19 minutes ago
Received the blessings from #Thalaivar #Rajini sir for the grand success of #Kuttram23 which u all gave us.

Arun Vijay got blessings of Rajini for the success of Kuttram 23 movie

மார்ச் 16ல் திரையரங்குகளில் ‘பாகுபலி 2’ விருந்து

மார்ச் 16ல் திரையரங்குகளில் ‘பாகுபலி 2’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali 2 trailer and movie release updatesராஜமௌலி இயக்கும் படங்கள் அனைத்தும் இந்தியாவையே திரும்ப பார்க்க வைக்கும்.

இவர் இயக்கி வெளியான பாகுபலி முதல் பாகம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

ரூ. 600 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது பாகுபலி 2 ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை மார்ச் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடவிருக்கிறாராம்.

அதனை தொடர்ந்து இது திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம்.

அதே தினம் மாலையில் 5 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறதாம்.

ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதற்கு விடை கிடைத்துவிடும் என்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கிடக்கின்றனர்.

Baahubali 2 trailer and movie release updates

More Articles
Follows