பிஆர்ஓ ஷேக்கின் ரசனைமிக்க சினிமா பயணம்

Cinema PRO Shiek newsதன் இளம் வயதில் என்ன செய்வது தெரியாமல் திக்குமுக்காடி தவிக்கும் பல இளைஞர்களுக்கு மத்தியில் இதுதான் தனக்கு பிடித்த பாதை. நம் வாழ்க்கைக்கு ஏற்ற பாதை என தேர்ந்தெடுத்து அதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார் மக்கள் தொடர்பாளர் ஷேக்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், அவரின் மக்கள் தொடர்பாளருமான ரியாஸ் கே. அஹ்மத் அவர்களிடம் உதவியாளராக இருந்து இன்று தானே தனி பிஆர்ஓவாக செயல்பட்டு படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் இவர்.

ரஜினி நடித்த கோச்சடையான், விஜய் நடித்த துப்பாக்கி, சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே, எதிர் நீச்சல், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம், வத்திக்குச்சி, விரட்டு உள்ளிட்ட பல படங்களுக்கு அசிஸ்டெண்ட் பிஆர்ஓவாக பணி புரிந்துள்ளார்.

மேலும் நடிகர் நாகேந்திர பிரசாத் மற்றும் நடிகை மீனாட்சி ஆகியோரின் மக்கள் தொடர்பாளராகவும் இவர் வலம் வருகிறார்.

தற்போது அரை டஜன் படங்களுக்கு தன் பிஆர்ஓ ஆக செயல்பட்டு வருகிறார்.

விரைவில் வெளியாகவுள்ள கொம்பே, 13ஆம் நம்பர் வீடு, கூத்தன், சாக்கடை, திரிபுரம் மற்றும் எனக்குள் ஏதோ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளது.

திரையுலகில் சாதித்து வரும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பயணம் மென்மேலும் சிறக்க, வாழ்த்துக்கிறோம்.

 

Overall Rating : Excellent - 5 starsExcellent - 5 starsExcellent - 5 starsExcellent - 5 starsExcellent - 5 stars

Latest Post