சிரஞ்சீவி & ராம்சரண் நடிப்பில் உருவான ‘ஆச்சார்யா’ படம் ட்ரைலர் வெளியானது

சிரஞ்சீவி & ராம்சரண் நடிப்பில் உருவான ‘ஆச்சார்யா’ படம் ட்ரைலர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி & அவரது மகன் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆச்சார்யா’.

இவர்களுடன் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

திரு ஒளிப்பதிவு செய்ய மணிசர்மா , இசையமைத்துள்ளார்.

கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் பணியாற்றியுள்ளார்.

மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான இந்தப்படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்தது.

ஆனால் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தள்ளிப் போனது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை இன்று ஏப்ரல் 12ம் தேதி அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ‘ஆச்சார்ய்யா’ படம் வருகின்ற 29-ம் தேதி ரிலீசாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chiranjeevi – Ram Charan starrer Acharya Trailer is out

ரசிகர் மன்றங்களை தனியாக பிரிக்கும் சூர்யா கார்த்தி.; இதான் காரணமா?

ரசிகர் மன்றங்களை தனியாக பிரிக்கும் சூர்யா கார்த்தி.; இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் சினிமா துறையில் ஒரு நடிகரின் வாரிசு அல்லது ஓர் இயக்குனரின் வாரிசு அவ்வளவாக ஜொலிப்பதில்லை.

ஆனால் எஸ்ஏசி – விஜய் இருவரும் தங்கள் துறைகளில் பல உயரங்களை அடைந்துள்ளனர்.

அதுபோல் சிவகுமாரின் மகன்கள் இருவரும் சில உயரங்களை தொட்டு வருகின்றனர்.

சூர்யா & கார்த்தி இருவருக்கும் தமிழ் & ஆந்திரா சினிமாவில் நல்ல மார்கெட் உள்ளது.

ஒரே படத்திற்காக மீண்டும் சூர்யாவுடன் இணையும் பாலா & சுதாகொங்கரா

ஆனால் பெரும்பாலான இவர்களது ரசிகர் மன்றங்கள் ஒன்றாகவே இயங்கி வந்தன.

ஆனாலும் தங்கள் சமூக சேவை பணிகளை தனித்தனி அறக்கட்டளை மூலமே நடத்தி வந்தனர்.

சூர்யா அகரம் பவுண்டேஷனையும், கார்த்தி உழவன் அறக்கட்டளையையும் தனித்தனியாக நடத்துகின்றனர். சூர்யா கல்விக்காகவும் கார்த்தி விவசாயத்திற்காகவும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்கள் அறக்கட்டளைகளை போல ரசிகர் மன்றங்களையும் தனியாக பிரித்து செயல்பட அறிவுறுத்தி உள்ளனர்.

இது தங்கள் படங்களின் தனி தனி வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Suriya and Karhi separates his fan clubs

ஏப்ரல் 13 ‘பீஸ்ட்’ ரிலீசில் சிக்கல்.; அரசு தடையால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

ஏப்ரல் 13 ‘பீஸ்ட்’ ரிலீசில் சிக்கல்.; அரசு தடையால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டையொட்டி விஜய்
நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை ஏப்ரல் 13ல் ரிலீசாகிறது.

பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு, டான்சர் சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை வரவேற்க ரசிகர்கள் மிக உற்சாகமாக ரெடியாகி வருகின்றனர்.

ட்ரைலர் ஒரு மாரி. படம் வேற மாரி.; ‘மணி ஹெய்ஸ்ட்’ & ‘கூர்கா’ மாதிரியா..? – நெல்சன் விளக்கம்

இந்நிலையில் இப்படத்தில் பயங்கரவாத வன்முறை காட்சிகள் இருப்பதாலும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியதாலும் குவைத் நாட்டில் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து கத்தார் நாட்டிலும் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இது குவைத் கத்தார் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Thalapathy Vijay’s Beast banned in Qatar

ரஜினிகாந்த் மகள் இயக்கும் படத்திற்கு இளையராஜா இசை..?

ரஜினிகாந்த் மகள் இயக்கும் படத்திற்கு இளையராஜா இசை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷை விவாகரத்து செய்த பின் தன் சினிமா பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

அன்கித் திவாரி இசையமைப்பில் ‘முஸாபிர்’ என்ற பாடல் வீடியோவை சமீபத்தில் இயக்கி வெளியிட்டார் ஐஸ்வர்யா.

மேலும் முதன்முறையாக ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறாராம் ஐஸ்வர்யா.

சிலம்பரசனுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இந்தப் படத்திற்கு ‘ஓ சாதிசால்’ என டைட்டில் வைத்து இருக்கிறாராம்.

இந்த நிலையில் நேற்று இளையராஜாவை சந்தித்து உள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் இணைய தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த சந்திப்பால் ஐஸ்வர்யா இயக்கவுள்ள புதிய படத்தில் இளையராஜா இசையமைப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

Ilaiyaraaja to score music for Aishwarya Rajinikanth’s debut hindi film?

விஜய்யை பார்க்க வந்துட்டு அவரது மகனுக்கு கதை சொன்ன பிரபல டைரக்டர்

விஜய்யை பார்க்க வந்துட்டு அவரது மகனுக்கு கதை சொன்ன பிரபல டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் பிரபல டிவி சேனலுக்கு தன் ‘பீஸ்ட்’ படம் தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார் விஜய்.

அப்போது தன் மகன் சஞ்சய்யின் எதிர்காலம் குறித்தும் பேசினார்.

‘சஞ்சய் நடிக்க போறாரா இல்ல கேமரா பின்னாடி இருந்து செயல்பட போறாருனு எனக்கு தெரியாது.

நான் எதையும் போர்ஸ் பண்ணல.

ஆனா நடிக்க நிறைய சான்ஸ் வருது. நடிக்க கேக்குறாங்க.

விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோவை வைரலாக்கும் ‘தளபதி்’ ரசிகர்கள்

இப்போ வேணாம். ரெண்டு மூனு வருஷம் ஆகட்டும்னு சொல்லிட்டு இருக்காரு சஞ்சய்’.

“கொஞ்ச நாள் முன்னாடி பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் என்ன பாக்க வரேன்னு சொன்னாரு.

எனக்குதான் கதை சொல்ல வர்றாருனு நெனச்சேன். ஆனா சஞ்சய்க்கு கதை சொல்லனும்னு கேட்குறாரு.

ஆனால் இப்போதைக்கு வேணாம்னு சஞ்சய் சொல்லிட்டாரு’ என தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

Did you know Vijay’s son Jason Sanjay was supposed to debut in Alphonse Puthren’s film?

ஆகஸ்ட் டார்கெட்.. தீபாவளி ரிலீஸ்..; விஜய் 66 படக்குழுவின் பக்கா ப்ளான்

ஆகஸ்ட் டார்கெட்.. தீபாவளி ரிலீஸ்..; விஜய் 66 படக்குழுவின் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் நாளை ஏப்ரல் 13ல் ரிலீசாகிறது. உலகமெங்கும் 5 மொழிகளில் வெளியாகிறது

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிளார்.

சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி விஜய் 66 படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்

இதன் படப்பிடிப்பு சென்னையில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. விரைவில் இங்கு சூட்டிங் நடைபெறவுள்ளது.

இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் / செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் வம்சி.

மேலும் இந்தாண்டு 2022 தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

Thalapathy 66 release plan is here

More Articles
Follows