சிலம்பரசனுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சிலம்பரசனுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ‘முஷாபீர்’ என்ற பாடல் ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த பாடல் 4 மொழிகளில் வெளியாகிறது.

தமிழ் பாடலை அனிருத் பாடியிருக்கிறார். தமிழில் பயணி என்று பாடல் வெளியாகும்

முசாபிர் வீடியோவை மார்ச் 8ம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் அதற்குள் ஐஸ்வர்யாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீடியோ வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

18 வருடமாக நடிகர் தனுஷ் உடன் திருமண வாழ்க்கையில் இருந்த இவர் அண்மையில் தனுஷை பிரிந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிலம்பரசனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

திருமணத்திற்கு முன்பு நடிகர் சிம்புவுடன் நல்ல நட்பில் இருந்தவர் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajinikanth joins with Simbu for his next

காமெடியன்களையும் அப்டேட் செய்யும் சுந்தர்-சி படங்கள்.; அடுத்து இவரா?

காமெடியன்களையும் அப்டேட் செய்யும் சுந்தர்-சி படங்கள்.; அடுத்து இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கும் படங்கள் என்றாலே காமெடிக்கும் சென்டிமெண்ட்டுக்கும் பஞ்சமிருக்காது.

எனவே இவரது படங்களுக்கு தாய்மார்களுக்கு மத்தியில் பெரும் ஆதரவு இருக்கும்.

அதுபோல் அந்தந்த காலகட்டங்களில் பிரபலமான காமெடியன்களை தன் படத்தில் பயன்படுத்தி ஹீரோவுக்கு நிகரான வேடம் கொடுப்பார்.

சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணிக்கு அப்படி ஒரு வேடத்தை கொடுத்திருந்தார்.

அதுபோல் வின்னர் படத்தில் வடிவேலுவின் வேடம் பெரிதாக பேசப்பட்டது.

பின்னர் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சந்தானம் காமெடி வேற லெவலில் இருந்தது, இப்படியாக காமெடியன்களையும் தன் படத்தில் அப்டேட்டாக வைத்திக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

தற்போது சூரி, யோகிபாபு, சதீஷ் ஆகியோரையும் தன் படத்தில் காமெடிக்கு பயன்படுத்தி வருகிறார். ஆனால் இவர்கள் தற்போது கதையின் நாயகன்களாக மாறிவிட்டனர்.

எனவே தன் பார்வையை ரெடின் கிங்ஸ்லீ பக்கம் திருப்பியிருக்கிறார். A1 மற்றும் டாக்டர் படங்களில் ரெடின் கிங்ஸ்லீ காமெடி பெரிதாக பேசப்பட்டது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சுந்தர் சி தற்போது ஸ்ரீகாந்த், ஜெய், ஜீவா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இதில்தான் ரெடின் கிங்ஸ்லீக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கிறாராம்.

This comedy actor plays important role in Sundarc’s next

உலகமே ஒரு கணக்கில்தான் ஓடுது.; ‘குதிரைவால்’ ட்ரைலரால் ரசிகர்கள் குஷி

உலகமே ஒரு கணக்கில்தான் ஓடுது.; ‘குதிரைவால்’ ட்ரைலரால் ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளைய கலைஞர்களில் ஒருவர் கலையரசன். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஒரு சில படங்களில் நாயகனின் நண்பனாக நடித்தாலும் அதிலும் தன் கேரக்டரில் ஜொலிக்கிறார்.

இவர் தற்போது ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஷன்ஸ் தயாரித்துள்ள குதிரைவால் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

ரஜினியின் காலா படத்தில் நடித்த அஞ்சலி பட்டேல் இதில் நாயகியாக நடித்துள்ளார். மனோஜ் – சியாம் என்ற இருவர் இயக்கியுள்ளனர்.

அடுத்த வாரம் மார்ச் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.

அந்த டிரைலரில்… “இந்த உலகமே ஒரு (கணக்கை) மேத்தமெடிக்ஸை வைத்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற வாசகத்துடன் தொடங்குகிறது.

1980களில் எம்ஜிஆர் இறந்த காலக்கட்டத்தில் நாயகன் கலையரசனுக்கு குதிரைவால் முளைக்கிறது. இதை வைத்து படத்தின் கதைக்களத்தை அமைத்துள்ளனர்.

இந்த வித்தியாசமான ட்ரைலரால் ரசிகர்கள் குஷியாகி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

Intriguing fantasy trailer for blockbuster director Pa Ranjith’s next – Kuthirai Vaal

‘கொலை’ அப்டேட்.: ‘ஹத்யா’ என்ற பெயரில் வெளியிட திட்டம்

‘கொலை’ அப்டேட்.: ‘ஹத்யா’ என்ற பெயரில் வெளியிட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலை’.

துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி நடிக்க போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா, ஜான் விஜய், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

தெலுங்கில் ஹத்யா (HATYA) என டைட்டில் வைத்துள்ளனர்.

ஒரு பெண் மாடல் அழகி கொலை செய்யப்பட கொலைக்கான பின்னணி என்ன? கொலைக்காரன் யார்? என்பதே படத்தின் கதைக்களம் என தெரியவந்துள்ளது.

Vijay Antonys Telugu film is titled Hatya

மேரேஜ் அப்டேட்..; சிம்பு ரசிகர்களை டென்ஷனாக்கிய பிரேம்ஜி

மேரேஜ் அப்டேட்..; சிம்பு ரசிகர்களை டென்ஷனாக்கிய பிரேம்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கங்கை அமரனின் மகன்.. வெங்கட்பிரபுவின் தம்பி.. என இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி சினிமாவில் பயணித்து வருபவர் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி.

இவருக்கு தற்போது 44 வயதாகிறது. ஆனால் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. தனக்கு திருமணமே வேண்டாம் என இவர் சொன்னாலும் இவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் தன் திருமணம் பற்றியும் சிம்புவின் திருமணம் பற்றியும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதில்… இன்னும் ஐந்து வருடம் கழித்து அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், எனக்கும் சிலம்பரசனுக்கும் தவிர.. என பதிவிட்டுள்ளார்.

இதை இவர் கிண்டலாக பதிவிட்டாலும் சிம்பு ரசிகர்களை இது டென்சனாக்கியுள்ளது. ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என ரசிகர்கள் கமெண்ட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்களோ… உங்க லிஸ்ட்ல.. நடிகை த்ரிஷா, நடிகர் விஷால், நடிகர் ஜெய்யை விட்டுட்டீங்க என கலாய்த்தும் வருகீன்றனர்.

Premgi fun post on simbu maariage

தடைகளை தகர்த்து கடலூரில் நுழைந்தான் ‘எதற்கும் துணிந்தவன்’

தடைகளை தகர்த்து கடலூரில் நுழைந்தான் ‘எதற்கும் துணிந்தவன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவான ’ஜெய்பீம்’ படம் கடந்தாண்டு 2021ல் ஓடிடி தளத்தில் ரிலீசானது. இது மாபெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை கடலூர் மாவட்டத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று பாமக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் உலகமெங்கும் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கடலூர் மாவட்டத்தில் இன்று ரிலீசாகுமா? என ரசிகர்கள் புரியாமல் தவித்தனர்.

ஆனால் இன்று காலை 7 மணி காட்சிக்கு போலீஸ் பாதுகாப்புடன் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

ரசிகர்கள் திரையரங்கின் உள்ளே சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.

சூர்யாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

Suriya’s Etharkkum Thunindhavan released in cuddalore with police protection

More Articles
Follows