தளபதி விஜய் 66 படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்

தளபதி விஜய் 66 படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பின்னர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.

இவர்கள் இணையும் பிரம்மாண்ட படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சிடாரா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Super Star’s daughter to play important role in Thalapathy 66

மீண்டும் ‘சார்பட்டா பரம்பரை’ வாத்தியாருடன் இணையும் ஆர்யா

மீண்டும் ‘சார்பட்டா பரம்பரை’ வாத்தியாருடன் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சித்தார்த் நடித்த ‘அவள்’, நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கியவர் மிலிந்த் ராவ்.

இந்த வெப் தொடரில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் சார்பட்டா பரம்பரை வாத்தியார் நடிகர் பசுபதியும் நடிக்கிறார்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருப்பது இதுவே முதன்முறை.

இப்பட குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Arya and Pasupathy joins for a new project

தனுஷின் சூப்பர் ஹிட் பாடலை தன் படத்தலைப்பாக்கிய ஹன்சிகா

தனுஷின் சூப்பர் ஹிட் பாடலை தன் படத்தலைப்பாக்கிய ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நாயகர்களுடன் ஜோடி போட்டவர் ஹன்சிகா.

இவரின் 50வது படமாக மஹா உருவாகியுள்ளது. மேலும் 105 மினிட்ஸ் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.

இந்த நிலையில், நடிகை ஹன்சிகா தற்போது ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இப்படத்துக்கு ‘ரவுடி பேபி’ என தலைப்பு வைத்துள்ளனர்.

மாரி 2 படத்தில் தனுஷின் சூப்பர் ஹிட் பாடலாக ரவுடி பேபி அமைந்தது.

ராஜா சரவணன் என்ற இயக்க இந்த ரவுடி பேபி படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்க செல்லதுரை ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்க இப்பட படப்பிடிப்பு இன்று அக்டோபர் 6ல் பூஜையுடன் தொடங்கியது.

Hansika’s new film kick starts today

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் நடிப்பில் உருவான ஆக்சன் திரில்லர் ‘சனக்’

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் நடிப்பில் உருவான ஆக்சன் திரில்லர் ‘சனக்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 15-ஆம் தேதியன்று வெளியாகிறது ‘சனக்’

நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

உலகின் மிகப்பெரிய அதிரடி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவரான வித்யூத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சனக்’.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.

ஹிந்தி திரை உலகில் பணய கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ‘சனக்- ஹோப் அண்டர் சீஜ்’ திரைப்படத்தை மிக பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது.

ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும் வகையில் டிரைலர் அமைந்திருக்கிறது.

கனிஷ்க் வர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வித்யூத் ஜாம்வால், பெங்காலி திரைஉலக சூப்பர் ஸ்டார் நடிகை ருக்மணி மைத்ரா, நடிகை நேகா துபியா மற்றும் சந்தன ராய் சான்யல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‌

இப்படத்தின் டிரைலர், பார்வையாளர்களுக்கு முழுநீள அதிரடி ஆக்சன் காட்சிகள், விழிகள் அகலமாக விரியும் வகையில் அமைந்திருக்கிறது.

அதிக ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் தனது நேசத்துக்குரியவரை காப்பாற்ற படத்தின் நாயகன் போராடும் காட்சிகள், பார்வையாளர்களை உறைய வைத்து விடும். நடிகை ருக்மணி மைத்ரா இப்படத்தின் மூலம் ஹிந்தி திரை உலகிற்கு நாயகியாக அறிமுகமாகிறார்.

இவரும் படத்தின் நாயகன் வித்யூத் ஜாம்வாலுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி, பார்வையாளர்களிடையே ஆரவாரமான வரவேற்பை பெறும்.

ஆக்சன் திரில்லர் ஜானரில் ‘சனக்’ திரைப்படம் இருந்தாலும், இப்படத்தின் முன்னோட்டத்தில் இவ்விருவருக்கும் இடையேயான காதலும் பார்வையாளர்களின் மனதை இதமாக வருடும். இது கதையுடன் ஒருங்கிணைந்திருப்பதும் கூடுதல் சிறப்பு.

நடிகர் வித்யூத் ஜாம்வால் பேசுகையில்,…

”இந்த திரைப்படம் கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. அனைவரையும் போல நாங்களும் இப்படத்தின் பணிகளுக்காக சென்றோம். இப்படத்திற்காக கடுமையாக உழைத்து, பணிகளை நிறைவு செய்தோம்.

நீங்கள் படத்தை பார்க்கும் போது உங்களை பற்றிய படைப்பாகவும், உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு உதவி செய்திடும் உத்வேகத்தையும் அளிக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் விபுல் அம்ருத் லால் ஷா பேசுகையில்…

,”இந்திய அளவிலான பார்வையாளர்களுக்கு ‘சனக்’ திரைப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த திரைப்படம் பணயக் கைதியை பற்றிய கதையை ஆழமாகவும், விரிவாகவும் எடுத்துச் சொல்லாமல், வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்பட்ட அற்புதமான முயற்சி. ” என்றார்.

வித்யூத் ஜாம்வால், சந்தன் ராய் சான்யல், நேகா துபியா இவர்களுடன் பெங்காலி சூப்பர் ஸ்டார் நடிகை ருக்மணி மைத்ரா நடித்திருக்கும் ‘சனக் – ஹோப் அண்டர் சீஜ்’, ஜீ ஸ்டுடியோஸ், சன்ஷைன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து வழங்குகிறது.

இந்த திரைப்படம் அக்டோபர் 15 தேதியன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், கனிஷ்க் வர்மா இயக்கி இருக்கிறார்.

The hostage drama will stream on Disney+ Hotstar on 15th October 2021

தெலுங்கு & கன்னடம் மொழிகளிலும் ‘ருத்ர தாண்டவம்’.; அடுத்த ஸ்னீக் பீக் இன்று ரிலீஸ்

தெலுங்கு & கன்னடம் மொழிகளிலும் ‘ருத்ர தாண்டவம்’.; அடுத்த ஸ்னீக் பீக் இன்று ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த படம் ‘திரௌபதி’.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரித்த இரண்டாவது படம் “ருத்ர தாண்டவம்”.

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடித்துள்ளார்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா நாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

சென்சாரில் U / A சான்றிதழ் பெற்ற இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்துடன் ருத்ரதாண்டவம் படத்தின் அடுத்த SNEAK PEEK இன்று அக்டோபர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் #கன்னடம் (டப்பிங்) மொழிகளில் ருத்ரதாண்டவம் தயாராகி வருகிறது. விரைவில் அந்த மாநிலங்களில் வெளியாகவுள்ளது.

Rudra Thandavam will be made in Telugu and Kannada languages

எது வலிமை..? 90% பெண்கள் வாழும் வாழ்க்கையை சொன்ன ஜோதிகா

எது வலிமை..? 90% பெண்கள் வாழும் வாழ்க்கையை சொன்ன ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் உடன்பிறப்பே…

இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று அக்டோபர் 4 இப்பட ட்ரெய்லர் வெளியானது.

இதுதொடர்பான ஒரு இணைய நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியதாவது…

“எனது இரண்டு குருநாதர்கள் பிரியதர்ஷன் சார் மற்றும் வஸந்த் சார். இருவருக்கும் என்றென்றும் நன்றி.

என் கணவர் சூர்யாவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை.

திருமணத்திற்கு பிறகு எனது இரண்டாவது இன்னிங்ஸில்தான் நிறைய கற்றுக்கொண்டேன்.

கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் அர்த்தமுள்ள படங்களில் நடித்து வருகிறேன்.

பெண்கள், குடும்பத்தினர் அனைவருமே பெருமைப்படும்படியான படங்களில் நடிக்கவே அதிகம் விரும்புகிறேன். அப்படியான படங்களை ஒப்புக் கொள்கிறேன்.

எனது 50-வது படம் ‘உடன்பிறப்பே’. ரொம்ப ஸ்பெஷலான படம்.

இதில் பெண்களின் உண்மையான வலிமையை பிரதிபலித்துள்ளேன். அதுதான் அமைதி. 90% பெண்கள் அப்படியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பட இயக்குனர் சரவணன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். இந்த வலிமையான கேரக்டரில் நடித்தது எனக்கு ரொம்ப புதுமை”.

இவ்வாறு ஜோதிகா பேசினார்.

Actress Jyothika talks about her new film Udan Pirappe

More Articles
Follows