விஜய்யின் ‘வாரிசு’ பட சூட்டிங்கில் செல்போனுக்கு தடை.; இதான் காரணமா?

விஜய்யின் ‘வாரிசு’ பட சூட்டிங்கில் செல்போனுக்கு தடை.; இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் படம் ‘வாரிசு’.

தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசை அமைக்கிறார்.

இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், பிரபு, யோகி பாபு, குஷ்பு, சங்கீதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

அதே நேரம் படப்பிடிப்பு வீடியோ & போட்டோக்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

பின்னர் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட காட்சியும் லீக்கான நிலையில் தற்போது மருத்துவமனைக் காட்சி ஒன்றும் கசிந்துள்ளது.

அதில்… ஸ்டிரெச்சரில் இருக்கும் சரத்குமாரை டாக்டரான பிரபு உள்ளே கொண்டு செல்கிறார். அவர்களுடன் விஜய்யும் செல்வது போல காட்சி இருக்கிறது.

அடிக்கடி காட்சிகள் லீக் ஆவதால் படப்பிடிப்பில் செல்போன் எடுத்து வர படக்குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cell phone ban on Vijay’s ‘Varisu’ shooting.; Is this the reason?

‘மங்காத்தா’ & ‘வேலாயுதம்’ பட மேஜிக் மீண்டும் நடக்குமா.? காத்திருக்கும் விஜய் – அஜித் ரசிகர்கள்

‘மங்காத்தா’ & ‘வேலாயுதம்’ பட மேஜிக் மீண்டும் நடக்குமா.? காத்திருக்கும் விஜய் – அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார்.

அஜித் நடித்து வரும் ‘ஏகே61’ படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இதில் அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

தற்போது ‘ஏகே61’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்றிருக்கிறார் அஜித். அங்கு சூட்டிங் நடந்து வருகிறது.

அதே போல வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, ஷாம், சரத்குமார், பிரபு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

எனவே இந்த இரு படப்பிடிப்புகளுக்கு மத்தியில் விஜய் & அஜித் ஒருவரையொருவர் சந்திப்பார்களா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் ‘மங்காத்தா’ & ‘வேலாயுதம்’ படங்களின் படப்பிடிப்பின்போது, இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Will ‘Mankatha’ & ‘Velayutham’ movie magic happen again?

40 கோடியை வேட்டையாடிய ‘விருமன்’.; சூர்யா கார்த்திக்கு வைரங்களில் பரிசளித்த சக்திவேலன்

40 கோடியை வேட்டையாடிய ‘விருமன்’.; சூர்யா கார்த்திக்கு வைரங்களில் பரிசளித்த சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.

அத்துடன் ‘விருமன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.

‘விருமன்’ படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனுக்கும், படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார்.

இந்த படத்தின் இயக்குநரான முத்தையாவிற்கும் வைர மோதிரத்தை பரிசளித்து உற்சாகப்படுத்தினார்.

நடிகர் சூர்யா ‘விக்ரம்’ படத்தில் நடித்ததற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார் என்பதும், தற்போது ‘விருமன்’ படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Distributor Sakthivelan gifted Surya and Karthi with diamonds

ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்யும் நடிகர் திரிகுன்

ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்யும் நடிகர் திரிகுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் திரிகுன்.

இவர் நடிப்பில் சமீபத்தில் கடாவர் திரைப்படம் வெளியானது.இந்த படத்தை அமலாபால் தயாரித்து கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைசுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து வெற்றிபெற்றதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றது.

நடிகர் திரிகுன் , அமலாபால், ஹரீஸ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா, உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை அமலாபால் தயாரித்திருந்தார்.

டிஸ்னி பிளஷ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகி உள்ள கடாவர் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் தனக்கு வரவேற்பு கிடைத்தது பெரும் மகிழ்வை தருகிறது என்கிறார் திரிகுன்.

தமிழ் படங்களில் அறிமுகமாகி தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வந்தவர் மீண்டும் தமிழ்படங்களில் கவனம் செலுத்தி நடித்துவருகிறார்.

தாய்மொழி தமிழில் மீண்டும் படம் பண்ணுவது உற்சாகமாக இருக்கிறது.
இரண்டு தமிழ்படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. தமிழில் முன்னணி இயக்குனரோடு ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். தெலுங்கிலும் வரிசையாக படங்கள் செய்துவருகிறேன்.

இரண்டு மொழிகளிலும் நடிப்பது வெவ்வேறு கலாச்சாரங்கள், வாழ்வியல் முறைகள் , மனிதர்களின் அணுகுமுறைகள் பெரும் அனுபவமாக இருக்கிறது.

இரண்டு மொழிகளும் எழுதப்படிக்க தெரிவதால் திரைக்கதையின் ஆழம் புரிந்து நடிக்க வசதியாக இருக்கிறது.

தெலுங்கில் பிரேமதேசம், கஞ்சம்,
கன்னடத்தில் லைன்மேன் .
தமிழில் டெவில் ஆகிய படங்கள் படபிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

Actor Thirigun talks about his upcoming films

90s Tamil TV Stars Reunion : மக்களை மகிழ்வித்த நட்சத்திரங்களின் சங்கமம்

90s Tamil TV Stars Reunion : மக்களை மகிழ்வித்த நட்சத்திரங்களின் சங்கமம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக சமீபத்தில் 90களில் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர்.

20 வருடக்கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர்.

ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுப்பட்ட இவர்கள் உடைகளிலும் தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினர்.

சங்கமித்த நட்சத்திரங்கள்

கௌஷிக், தீபக், அப்ஸர், கௌதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், இராகவி சசி, ஷில்பா,
அம்மு இராமசந்திரன், வெங்கட்,
நீலிமா இசை, பானு பிரகாஷ், சிட்டி பாபு,
போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட் , ரிஷி, அஞ்சு, கணேஷ்கர் , ஆர்த்தி கணேஷ்கர், விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ், ஷைலஜா செட்லோர், KSG வெங்கடேஷ், நிர்மலா ஷ்யாம்,, பூஜா, ஷ்யாம் கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸ்வேதா பாரதி, ரோஜாஶ்ரீ, ஹரிஷ் ஆதித்யா, ஈஸ்வர்.

சங்கமம் தொடரும்……

90s Tamil TV Stars Reunion : A reunion of stars that made people happy

நிச்சயமாக ‘இந்தியரே’.. பிறந்தநாளில் கமலுக்கு ஹின்ட் கொடுத்த ஷங்கர்.; முக்கிய வேடத்தில் கார்த்திக்

நிச்சயமாக ‘இந்தியரே’.. பிறந்தநாளில் கமலுக்கு ஹின்ட் கொடுத்த ஷங்கர்.; முக்கிய வேடத்தில் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் ஷங்கர்.

1993ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து காதலன், அந்நியன், இந்தியன் , முதல்வன், சிவாஜி, எந்திரன் என பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இறுதியாக தமிழில் லைகா தயாரிப்பில் ரஜினியை வைத்து ‘2.0’ படத்தை இயக்கி இருந்தார்.

கோலிவுட்டில் 2.ஓ பட வசூலை எந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.

தற்போது தெலுங்கில் ஒரு படம் ஹிந்தியில் ஒரு படம் என இயக்குகிறார்.

இன்று ஆகஸ்ட் 17ல் தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ஷங்கர்.

எனவே ரசிகர்கள் & திரையுலகினர் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரம்மாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் ஷங்கர்,… ”நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி” என பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் இவர்கள் இருவரும் இணையும் ‘இந்தியன் 2’ படம் விரைவில் ஆரம்பமாகும் என தெரிகிறது.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க லைகா நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விவேக், நெடுமுடி வேணு நடிக்க இருந்தனர்.

சில காட்சிகளும் எடுக்கப்பட்டன.

அவர்கள் மறைந்ததால், அவர்களுக்கு பதிலாக ஒரு கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Shankar gave a hint to Kamal on his birthday

More Articles
Follows