பேட்ட முதல் காட்சியை பார்த்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-த்ரிஷா

பேட்ட முதல் காட்சியை பார்த்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta stillsகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, திரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, சசிகுமார் ஆகியோர் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படம் இன்று வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் மட்டுமே இதுவரை வெளியாகி

எனவே ரஜினி ரசிகர்கள் இதனை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், நடிகை திரிஷா உள்ளிட்டோர் ரோகிணி திரையரங்கிற்குச் சென்று பேட்ட திரைப்படத்தை முதல் காட்சி பார்த்தனர்.

அதுபோல் வெற்றி தியேட்டரில் சிவகார்த்திகேயன், ஆல்பர்ட் தியேட்டரில் கார்த்திக் சுப்பராஜ் & காசி தியேட்டரில் சன் & பேட்ட குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

விஸ்வாசம் பார்க்க பணம் தராத தந்தையை கொளுத்திய மகன் அஜித்

விஸ்வாசம் பார்க்க பணம் தராத தந்தையை கொளுத்திய மகன் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasam posterகாட்பாடியை சேர்ந்தவர் பீடி தொழிலாளி பாண்டியனின் மகன் அஜித்குமார் (வயது 20).

விஸ்வாசம் பட ரசிகர் மன்ற காட்சி பார்க்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

அவர் பணம் தராத காரணத்தால் தன் தந்தையின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அதன் பின்னர் பக்கத்தில் இருந்தவர்கள் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனையடுத்து அஜித்குமாரை விருதம்பட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரஜினிக்கு மட்டுமே நடக்கும் மேஜிக்.; பேட்ட ரிலீசுக்கு ஐடி கம்பெனிஸ் லீவு

ரஜினிக்கு மட்டுமே நடக்கும் மேஜிக்.; பேட்ட ரிலீசுக்கு ஐடி கம்பெனிஸ் லீவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IT companies declared holiday to Celebrate Rajinis Petta releaseசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் ரஜினிக்காகவே எழுதப்பட்டது என்று நாம் அறிந்த ஒன்றுதான்.

ஏனென்றால் அவர் 6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறார்.

உலக அரங்கில் இந்திய சினிமாவை தமிழ் சினிமாவை காட்டிய முக்கிய நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த்.

எனவே தான் அவருக்கு உலகளவில் தமிழே தெரியாத நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் மன்றங்கள் உள்ளது.

எனவே ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்கள் திருவிழா போல் கொண்டாடப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஏன் நாளை கூட விடுமுறை தினமோ பண்டிகை தினமோ இல்லை. இருந்தாலும் ரஜினி படம் ரிலீஸ் என்றால் அது அனைவரின் பேச்சாக இருக்கிறது.

முதல் நாள் படத்தை பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஏங்குகிறார்கள்.

இதனையறிந்து பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

கபாலி படத்தின் போது நிறைய ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளித்தன என்பதை பார்த்தோம்.

அதன்பின்னர் காலா படம், 2.0 படம் ஆகிய படங்களின் ரிலீசின் போதும் இந்த மேஜிக் நடைபெற்றது.

தற்போது இதே மேஜிக் பேட்ட ரிலீசுக்கும் நடைபெறுகிறது.

சென்னை மற்றும் பெங்களுரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து டிக்கெட் எடுத்துக் கொடுத்து பேட்ட படத்தை கண்டு களியுங்கள் என சர்குலர் (அறிக்கை) வெளியிட்டுள்ளனர்.

இது எல்லாம் ரஜினி என்ற ஒரு நடிகருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாகும்.

IT companies declared holiday to Celebrate Rajinis Petta release

சில கம்பெனிகள் சர்குலர் இதோ…

IT companies declared holiday to Celebrate Rajinis Petta release

இதயங்களை வெல்லும் ரஜினி; *பேட்ட* பராக் குறித்து கார்த்திக் சுப்பராஜ்

இதயங்களை வெல்லும் ரஜினி; *பேட்ட* பராக் குறித்து கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta movie will win everyone heart says Karthik Subbarajரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படம் நாளை ஜனவரி 10-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ரஜினி படங்களுக்கு உலகளவில் மார்க்கெட் இருப்பதால் தெலுங்கு பதிப்பிலும் நாளையே இப்படம் வெளியாகிறது.

எனவே தெலுங்கு பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்த போது பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது…

‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே தலைவரின் ரசிகர்கள்.

தலைவர் பாணியில் படத்தில் நிறைய ஆக்‌‌ஷன் இருக்கிறது. இப்படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன்.

சங்கராந்தி பண்டிகைக்காக இப்படம் வருவதால் அந்த பண்டிகை உற்சாகம் இதிலும் இருக்கும்.

அதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகிறது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புபவன் நான்.

ரஜினியின் பேட்ட படம் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.

Petta movie will win everyone heart says Karthik Subbaraj

அருண் சந்திரன் இயக்கத்தில் செல்லப்பிள்ளை-யானார் கௌதம் கார்த்திக்

அருண் சந்திரன் இயக்கத்தில் செல்லப்பிள்ளை-யானார் கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthiks next title as Chellappillai and Soori joins with himகௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு “செல்லப்பிள்ளை” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி அறிமுக இயக்குனர் அருண் சந்திரன் இயக்குகிறார்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ், கலை துரைராஜ் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் தீசன் இசையமைக்கிறார்.

இப்படத்தினை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக இசக்கி துரையும் ஒயிட்லைன் புரொடக்ஷன் சார்பாக அன்பழகனும் இனைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெறவுள்ளது.

Gautham Karthiks next title as Chellappillai and Soori joins with him

Gautham Karthiks next title as Chellappillai and Soori joins with him

நாலு நிமிட காட்சிகளை வெட்டிவிட்டு நாளை விஸ்வாசம் ரிலீஸ்

நாலு நிமிட காட்சிகளை வெட்டிவிட்டு நாளை விஸ்வாசம் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Just Four minutes scenes were trimmed from Ajiths Viswasam movieசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா இணைந்து நடித்துள்ள விஸ்வாசம் படம் நாளை (ஜன.,10) உலகமெங்கும் வெளியாகிறது.

இந்திய சென்சாரில் இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் ஓடக்கூடியது.

அதுபோல் இங்கிலாந்து நாட்டில் வெளியாக உள்ள விஸ்வாசம் படத்திற்கு 12 ஏ என்ற சர்ட்டிபிகேட்டை வழங்கியுள்ளது பிரிட்டிஷ் சென்சார்.

அதாவது இந்த படத்தை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கலாம் என்பதுதான் அதன் அர்த்தம்.

மேலும் படத்தின் 4 நிமிடம் 5 வினாடிகள் காட்சியை படத்திலிருந்து நீக்க சொல்லிவிட்டார்களாம்.

அதற்கான காரணம் என்னவென்றால்… இப்படத்தை லண்டனில் வெளியிடும் விநியோகஸ்தர்கள், 147 நிமிடங்கள் ஓடக் கூடிய வகையில் உள்ள ஒரு பிரிவில் இப்படத்தை, சேர்க்கத்தான் இந்த கட்டிங் நடைபெற்றதாம்.

Just Four minutes scenes were trimmed from Ajiths Viswasam movie

More Articles
Follows