கிரிக்கெட்+நடிப்பு தெரிந்தவரா நீங்கள்.? அருண்ராஜா காமராஜை அனுகவும்

Casting call for girls who know Cricket and Actingபல திறமைகள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இயக்குனராக தன்னை நிரூபித்துக்கொள்ள முனைப்போடு உள்ளார்.

தனது முதல் இயக்கம் குறித்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில், ” நான் சினிமாவுக்கு வர முதல் மற்றும் முக்கிய காரணமே இயக்குநராக வர வேண்டும் என்றுதான்.

இயக்குனராவது எனது வாழ்நாள் ஆசையாகவும் கணவாகவும் இருந்து வருகிறது. இதற்கு முன்பு பல குறும்படங்களை எழுதி இயக்கி குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமும் எனக்கு மேலும் உதவியாக இருந்தது. ஒரு படத்தை இயக்கம் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருப்பதாக இப்போது உணர்கிறேன்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளேன்.

சமீபத்தில் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்து கொண்டாட வைத்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை ஆட்டத்திற்கு முன்பே இக்கதையை தயார் செய்துவிட்டேன்.

கனவுகளுக்காக போராடுவதும், அதற்கு குடும்பத்தாரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்றும், ஒரு தந்தைக்கும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இருக்கும் அழகான உறவையும் இப்படத்தில் காணலாம். நெகிழவைக்கும் சில நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் இக்கதையில் சேர்த்துள்ளேன்.
கிரிக்கெட்டும் ஆட தெரிந்த நடிக்கவும் தெரிந்த பெண்களை கதாநாயகி மற்றும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்தவுள்ளோன்.

இதுவரை வெளிவராத பல அறிய திறமைசாலிகளை இந்த ஆடிஷன் மூலமாக வெளிகொண்டுவந்து இப்படத்தை மெருகேத்த உள்ளோம். எனது இந்த இயக்குனர் படலத்தை மிகவும் உற்சாகத்திடம் எதிர்நோக்கியுள்ளேன்” எனக்கூறினார் அருண்ராஜா காமராஜ்.

விருப்பமுள்ளோர் தங்களது விவரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : iswearicanact@gmail.com

Casting call for girls who know Cricket and Acting

Overall Rating : Not available

Latest Post