அஜித்தை தடுக்க முடியாது..; வலிமை தயாரிப்பாளரின் வலிமை-யான வார்த்தை

அஜித்தை தடுக்க முடியாது..; வலிமை தயாரிப்பாளரின் வலிமை-யான வார்த்தை

அஜித் நடிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ & தற்போது உருவாகி வரும் ‘வலிமை’ ஆகிய படங்களை வினோத் இயக்கி வருகிறார்.

இவை இரண்டையும் போனி கபூர் தயாரித்தார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘வலிமை’ வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இவர்கள் (அஜித் – போனி கபூர் – வினோத்) 3வது முறையாக மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா வரை பைக்கிலேயே பயணம் செய்தார் பைக் பிரியரான அஜித். இந்த புகைப்படங்கள் வைரலாகியது.

இந்த நிலையில் தற்போது அஜித்துடன் பைக் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இத்துடன் அவர் கூறியிருப்பதாவது:

“தனது கனவில் வாழ்வதிலிருந்தும், தனது ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றுவதில் இருந்தும் அவரைத் (அஜித்தை) தடுக்க முடியாது.

அஜித் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறார்”.

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Nothing can stop him from living his passion and making his each dream come true. Universally Loved. #AjithKumar pic.twitter.com/vcynxZdkZ8

— Boney Kapoor (@BoneyKapoor) October 23, 2021

Boney Kapoor praises Actor Ajith for his passion

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *