விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்காக களம் இறங்கிய ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர்

விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்காக களம் இறங்கிய ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிட தயாராக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் ராஜு ஜெயமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் 5 இன் டைட்டில் வின்னர் ராஜுவும் இதையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி.? பாரத ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணையும் கமல்ஹாசன்

புதிய கூட்டணி.? பாரத ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணையும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையை தொடங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டுவருகிறார்.

கேரளா, கர்நாடகம், ஆந்திரா வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர் தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் செய்துக் கொண்டு வருகிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன் யாத்திரையின் 100வது நாளை நிறைவு செய்தார்.

இந்த பாரத ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் தான் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாககுழு, செயற்குழு & மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

அப்போது வரும் டிசம்பர் 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பாரத ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜிக்கு அரசு எதுவும் செய்யல.. நான்தான் செலவு செய்தேன் – இளையராஜா

சிவாஜிக்கு அரசு எதுவும் செய்யல.. நான்தான் செலவு செய்தேன் – இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முனைவர் கா. வெ. சே மருது மோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” என்னும் நூல்
வெளியீட்டு விழா இன்று டிசம்பர் 18ல் நடைபெற்றது.

இதற்கான விழா சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிட்டேஜ்ஜில் நடைபெற்றது.

சிவாஜி பெருமைகளை சொல்லும் இந்த புத்தகம் 1600 பக்கங்களை கொண்டது.

இந்த புத்தகத்தை இயக்குநர்
பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இந்த நிகழ்வில் வெளியிட்டார்.

சிவாஜி பற்றி உருக்கமாக இளையராஜா பேசினார். அவர் பேசியதாவது…

“தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாஜி ரசிகர்களை உட்கார வைத்து ஒருநாள் முழுவதும் சிவாஜியை பற்றி பேச
வேண்டும் என்பது எனது ஆசை.

சிவாஜியிடம் இருந்து எல்லாரும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நேரம் தவறாமை.

அவருடன் பேசுவதற்கு, உறவாடுவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

நாங்கள் வியர்ந்து பார்த்த மனிதர் சிவாஜி. என்னை செல்லமாக ராசா என்றுமான் அழைப்பார்.

அவர் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் வரும் போது..’உள்ளே வரலாமா.?’ என என்னிடம் சிவாஜி அனுமதி கேட்டார். எனக்கு அப்போது கண்ணீரே வந்து விட்டது.

தேவர் மகன் பாடல் ரெக்கார்டிங்கின்போது, நான் அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது எனக்கு அவர் முத்தம் கொடுத்தார்.

பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டார் சிவாஜி என ஒருமுறை கவிஞர் வாலி சொன்னார். அந்த போட்டோ என்னிடம் பத்திரமாக உள்ளது.

ஒருநாள்.. சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டும் என என்னிடம் நிதிக்காக வந்தார் இயக்குநர் எஸ்.பி முத்துராமன்.

குதிரையில் சிவாஜி இருப்பது
போல் ஒரு வெள்ளி சிலையை அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்றார்.

அந்த பணம் முழுவதையும் நான் கொடுத்து விடுகிறேன் என்றேன். நான் சுயதம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை.

அவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அரசும் திரை உலகமும் எதுவும் செய்யவில்லை.

தனிப்பட்ட முறையில் இளையராஜா நான் தான் செய்தேன்” என்று பேசினார் இளையராஜா.

இந்த விழாவில் இளையராஜா, பாரதிராஜா, ராம்குமார், பிரபு விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம், பாக்யராஜ், பி வாசு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிக் பாஸ்’ பிரபலத்துக்கு அஜித் அளித்த அருமையான பரிசு – வைரலாகும் புகைப்படங்கள்

‘பிக் பாஸ்’ பிரபலத்துக்கு அஜித் அளித்த அருமையான பரிசு – வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக் பாஸ் 5’ புகழ் நடிகர் சிபி புவனா சந்திரன் மிகவும் மதிப்புமிக்க பரிசைப் பெற்ற ஒரு அதிர்ஷ்டசாலி.

‘துணிவு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பிற்கு அஜித் அணிந்திருந்த ஸ்டைலிஷ் கண்ணாடியை அஜீத் தனக்கு வழங்கியதாக அவர் பகிர்ந்துள்ளார்.

“இந்த விலைமதிப்பற்ற நினைவுகளை எப்போதும் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.

#காசேத்தான்கடவுலடா பாடல் படப்பிடிப்பின் போது #அஜித்குமார் சாரின் பரிசு” என்று சிபி பதிவிட்டுள்ளார் .

‘துணிவு’ படத்தில் சக ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களான பாவ்னி மற்றும் அமீர் ஆகியோருடன் சிபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகை தன்யாவை 2வது திருமணம் செய்துக் கொண்ட ‘மாரி’ பட இயக்குனர்.?

நடிகை தன்யாவை 2வது திருமணம் செய்துக் கொண்ட ‘மாரி’ பட இயக்குனர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணன்.

இவர் பெரும்பாலும் பல படங்களில் நாயகியின் தோழியாகவே நடித்து வந்தார்.

விதார்த் நடித்த ‘கார்பன்’ படத்தில் நாயகியாகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவருக்கும் ‘மாரி’ பட இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமண நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

பாலாஜி மோகனுக்கு 2012இல் திருமணமாகி 2013இல் விவாகரத்து ஆனதும் குறிப்பிட்டத்தக்கது.

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பாலாஜி மோகனுக்கும் தன்யாவுக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாக நடிகை கல்பிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாலாஜி & தன்யா தரப்பிலிருந்து இதுவரை இந்த செய்து குறித்து எந்த மறுப்பு தகவலும் வெளியாகவில்லை.

ஸ்விஸூல இருக்கு காந்திக்கும் கணக்கு.; கருப்பு பணத்தை பதுக்கினாரா.? சர்ச்சையை கிளப்பும் ‘துணிவு’ பாடல்

ஸ்விஸூல இருக்கு காந்திக்கும் கணக்கு.; கருப்பு பணத்தை பதுக்கினாரா.? சர்ச்சையை கிளப்பும் ‘துணிவு’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

வினோத் இயக்கிய இந்த படத்துற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியான நிலையில் 2வது பாடலான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலை வைசாக் எழுதி அவரே பாடியும் இருக்கிறார்.

இந்த பாடல் வரிகளில்.. ‘ஸ்விஸூல இருக்கு காந்திக்கும் கணக்கு; ஏகப்பட்ட ஈஎம்ஐ-ல நாடே கெடக்கு’ வரிகள் உள்ளன.

பொதுவாக இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை பெரிய பெரிய தொழிலதிபர்கள் ஸ்விஸ் பேங்கில் பதுக்கி வைத்து வருகின்றனர்.. இந்த நிலையில் காந்திக்கும் அங்கு கணக்கு இருப்பதாக வந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளது.

மேலும் ‘மனுஷன மிருகமா மாத்திடும் மணி’ ‘உஷாரா இல்லன்னா தலையில துணி’, ஆகிய வரிகள் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

இப்பாடலில் நாயகி மஞ்சுவாரியரும் இணைந்து பாடியுள்ளார். ஆனால், அவர் குரல் கோரஸில் மட்டுமே உள்ளது. இதற்கு ஏன் இவ்வளவு பில்டப் ??? என்பதுதான் புரியவில்லை.

Get ready to experience the power of Money !?

#KasethanKadavulada OUT NOW

Go watch it now – https://youtu.be/_KT-snaRT90

#ThuvinuSecondSingle

More Articles
Follows