தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும்
பிக்பாஸ் சீசன் 4 ஒளிப்பரப்பு தொடங்கியது.
அதன் போட்டியாளர்கள் விவரம் இதோ…
1. முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் ரியோ ராஜ். டிவி தொகுப்பாளராக இருந்து அதன்பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்தவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
2. மாடல் சனம் ஷெட்டி 2016-ம் ஆண்டில் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர்.
‘அம்புலி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார்
3. கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானப்படங்களில் நடித்த நடிகை ரேகா.
4. மாடலிங் துறையைச் சேர்ந்தவர் பாலா என்ற பாலாஜி முருகதாஸ். 2017-ம் ஆண்டு மிஸ்டர் பெர்ஃபெக்ட் பட்டம் பெற்றுள்ளார். இவர் ‘டைசன்’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார்.
5. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இவரின் அழகிய தமிழுக்கி ரசிகர்கள் ஏராளம். பிக்பாஸ் 3ல் லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக உள்ளே சென்றார்.
6. கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
7. நடிகர் ஜித்தன் ரமேஷ். திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமாவார் இவர்.
8. பின்னணி பாடகர் வேல்முருகன். சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
9. நடிகர் ஆரி அர்ஜுனா. ஜல்லிக்கட்டு போராளி.. சமூக ஆர்வலர். என பன்முகம் கொண்டவர்.
10. குத்துச்சண்டை வீரர் சோம் சேகர். மாடலிங். ஆல்பம் சாங்ஸ் நடிகர்.. நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
11. நடிகை கேப்ரில்லா.. ‘3’ படத்தில் ஸ்ருதிக்கு தங்கையாக நடித்தவர். ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
12. நடிகை அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கியவர்.
13. நடிகை ரம்யா பாண்டியன்.. ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மொட்டை மாடியில் போட்டோ ஷூட் எடுத்து இடுப்பழகி என பெயரெடுத்தவர். கலக்கப்போவது யாரு சீசன் 9, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
14. டிவி நடிகை சம்யுக்தா. மாடல், சிவில் என்ஜினியர், ஊட்டச்சத்து நிபுணர் என பன்முகம் கொணரடவர் சம்யுக்தா கார்த்திக்.
15. நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. அழகன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். பாட்டிகள் ஜாக்கிரதை என்ற தொடரில் பாட்டியாக நடித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார்.
16. பாடகர் ஆஜித்… 2012ல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டத்தை வென்றவர் ஆஜித்.
Bigg Boss 4 Tamil full contestants list here