மாலத்தீவு பறக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு

மாலத்தீவு பறக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு

Bascar Oru Rascal team flies to Maldives for next shoot scheduleஅரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

இது மலையாள படத்தின் ரீமேக் என்பதும், அப்படத்தை இயக்கிய சித்திக்கே இப்படத்தை தமிழில் இயக்கி வருகிறார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மால்தீவ்ஸ் தீவில் படப்பிடிப்பு நடைபெற்று அத்துடன் நிறைவடைகிறது.

வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.

அம்ரேஷ் இசையமைக்க வசனங்களை ரமேஷ் கண்ணா எழுதி வருகிறார்.

ஒளிப்பதிவை விஜய் உலகநாதன் மேற்கொள்ள எடிட்டிங்கை கே.ஆர்.கௌரி சங்கர் இயக்குகிறார்.

எம்.ஹர்சினி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Bascar Oru Rascal team flies to Maldives for next shoot schedule

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *