தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.
`சதுரங்க வேட்டை 2′, `வணங்கா முடி’, நரகாசூரன், மற்றும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை ஹர்சினி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம். ஹர்சினி தயாரிக்கிறார்.
சித்திக் இயக்கும் இப்படத்தில் அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் `தெறி’ படத்தில் அறிமுகமான மீனாவின் மகள் பேபி நைனிகாவும் நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி என்பவரும் நடிக்கிறார்.
ரமேஷ் கண்ணா வசனம் எழுத, பா.விஜய், விவேகா பாடல்களை எழுத, அம்ரேஷ் இசையமைத்து வருகிறார்.
கொச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் சூட்டிங்கை விறுப்பாக நடத்தி செப்டம்பர் மாதத்தில் இதனை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
Baskar Oru Rascal shooting news updates