அரவிந்த்சாமியை போல் மற்ற ஹீரோக்கள் செய்யனும் : ஞானவேல்ராஜா

அரவிந்த்சாமியை போல் மற்ற ஹீரோக்கள் செய்யனும் : ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvindswami and gnanavel rajaபிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

இவர் பிரெண்ட்ஸ், காவலன், எங்கள் அண்ணா, ஹிட்லர் உள்ளிட்ட மலையாள ரீமேக் படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.

தற்போது இயக்கியுள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படமும் மலையாள ரீமேக் படம்தான்.

அரவிந்த்சாமி, அமலாபால், நைனிகா, ராகவன், சூரி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க இப்படத்தை முருகன் தயாரித்துள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

பொதுவாக ஒரு படத்தில் ஹீரோ கமிட் ஆகும்போது கோடி கணக்கில் அட்வான்ஸ் வாங்குகின்றனர்.

எல்லா தயாரிப்பாளர்களும் வட்டிக்கு பணம் வாங்கிதான் சம்பளம் கொடுக்கிறார்கள்.

இப்படத்தில் அரவிந்த்சாமி கமிட் ஆகும்போது அவர் எந்த தொகையும் வாங்கவில்லையாம்.

அவரைப் போல் அனைவரும் செய்ய வேண்டும்.

சூட்டிங் முடிந்து டப்பிங் சமயத்தில் வாங்கினால் அதற்கும் ரீலீஸ்க்கும் ஒரு மாதம்தான் இடைவெளி இருக்கும்.

அந்த சமயத்தில் முழு தொகையும் வாங்கிக் கொண்டால் தயாரிப்பாளருக்கு வட்டி ஏறாது. ஒரு மாத வட்டி மட்டும்தான் இருக்கும்.

முன்பே சம்பளம் கொடுப்பதால் ஹீரோ சம்பளத்திற்கு இணையாக வட்டி ஏறிவிடுகிறது.

சில நேரங்களில் தயாரிப்பாளர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்பார்கள். அப்படி செய்ய முடியாது. ஏனென்றால் அவர் பின்பு அடுத்த படத்தை தயாரிக்க முடீயாது. மற்ற ஹீரோக்கள் உஷாராகிவிடுவார்கள்.

தயாரிப்பாளர் சங்கமும் கேள்வி கேட்கும்.” என்று பேசினார்.

சூர்யா படத்திற்கு முன்பே விஜய் ரசிகைகள் நாங்க செஞ்சிட்டோம்ல…

சூர்யா படத்திற்கு முன்பே விஜய் ரசிகைகள் நாங்க செஞ்சிட்டோம்ல…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and suriyaசூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்காக திருவனந்தபுரத்தில் சூர்யாவின் பெண் ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது இந்தியாவிலேயே முதன்முறையாக என போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இதற்கு முன்பே விஜய்யின் தெறி படம் வெளியானபோது காரைக்குடி சத்யன் தியேட்டரில் விஜய் ரசிகைகளுக்கு மட்டும் காலை 7 மணி சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என விஜய் ரசிகர்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.

இணையத்தில் டிரெண்டாகும் பழைய ஸ்டைலில் அஜித்தின் புதிய படம்

இணையத்தில் டிரெண்டாகும் பழைய ஸ்டைலில் அஜித்தின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithசினிமா ஹீரோக்களுக்கு எத்தனை வயதானாலும் படங்களில் கருத்த முடியுடன் இளமையாக காட்சி தருவார்கள்.

ஆனால் தன் நிஜ தோற்றமான நரைத்த முடியுடன் (சால்ட் அண்ட் பெப்பர் லுக்) சினிமாவிலும் நடித்து ஜெயித்து வருபவர் அஜித்.

மங்காத்தா தொடங்கி அண்மையில் வெளியான விவேகம் படம் வரை இந்த லுக்கிலேயே நடித்து வந்தார்.

ஆனால் விரைவில் நடிக்கவுள்ள விசுவாசம் படத்தில் மீண்டும் தன் பழைய ஸ்டைலில் நடிக்கவுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதை அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கப் பணத்தில் விஷால் கையாடல்: சுரேஷ்காமாட்சி குற்றச்சாட்டு

தயாரிப்பாளர் சங்கப் பணத்தில் விஷால் கையாடல்: சுரேஷ்காமாட்சி குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and suresh kamatchiசமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் 10-வது பொதுக்குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் முடிவுவடைந்தது.

இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் சங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 லட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. ஆனால் விஷாலும் இதையேதான் ராகவேந்திரா மண்டபத்தில் மீடியா முன்பு சொன்னார். எஃப் டி பணம் எந்தவிதத்திலும் எடுக்கப்படாது. அப்படியே இருக்கும் என்றார். அவர் சொன்னபடி நடந்திருந்தால் நேற்று அரையாண்டு கணக்கை சமர்ப்பித்திருக்கலாமே?

ஏன் சமர்ப்பிக்கவில்லை நியாயமாரே? கணக்கு எங்கே எனக்கேட்டால் தேசியகீதம் பாடி கூட்டத்தை முடிக்கலாம்னு நேற்று தான் தெரிஞ்சிக்கிட்டோம். உண்மையானவர்கள் கணக்கு வழக்கை பிரதியெடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்திருந்தால் ஏன் இந்த சத்தம்? சங்கடங்கள் எல்லாம். உண்மை இருந்தால் தானே கொடுப்பதற்கு?

கூச்சல் போடுறாங்க.. திட்றாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்புறீங்க. உங்கள் வீட்டில் ஒரு லட்ச ரூபாய் காணாமல் போனால் லபோ திபோன்னு கத்தமாட்டீர்களா?. ஆனால் இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7.40 கோடியில் 3.40 கோடியை காணோம் என்றால் கூப்பிட்டு வைத்து கொஞ்சவா செய்வார்கள். திருடனாக இருந்தால் என்ன செய்வீர்கள்?. நடுத்தெருவில் கம்பத்தில் கட்டி வைத்து போறவர் வர்றவன் எல்லாம் அடிக்க மாட்டீர்கள். பதவி என்ற பெயரில் கொள்ளையடித்தவர்களை நாங்கள் எப்படி நடத்த வேண்டும் என எதிர்ப்பாக்கிறீர்கள் மக்களே.

3 கோடியே 40 லட்சத்தை கையாடல் பண்ணியிருக்காங்கன்னு நான் நிரூபிக்கிறேன். அவர் தான் எடுக்கவில்லை என்பதை மீடியா முன் நிரூபிக்கத் தயாரா?. அவர் தான் எடுக்கவில்லை என நிரூபித்தால் நான் சங்கத்தை விட்டு விலகத் தயார். விஷால் எடுத்திருந்தால் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?. இது விஷாலுக்கு நான் விடும் நேரடி சவால். விஷால் தான் இந்த 3 கோடியே 40 லட்சத்தில் கை வைக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும். விஷால் நிரூபிக்கத் தயாரா?

மேலும் பொதுக்குழு வீடியோ பொதுமக்கள் பார்வைக்கு ஏன் அனுப்பப்பட்டது? பொதுக்குழு விஷயங்கள் நமக்குள்ளேதானே வைத்திருக்க வேண்டும்? சங்கத்தின் பொதுக்குழு நடவடிக்கைகளை வீடியோவாக வெளியிட்டது தவறு என்பதையும் சங்க விதிகளின்டி சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சவாலை சந்திக்க விஷால் முன்வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்..

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.

விக்ரம்-சூர்யா மோதல் களத்தில் விஜயகாந்த் மகனும் குதித்தார்

விக்ரம்-சூர்யா மோதல் களத்தில் விஜயகாந்த் மகனும் குதித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pongal release 2018விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் மற்றும் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் 2018 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள மதுரவீரன் படமும் வெளியாகவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் இப்படத்தை விஜி சுப்ரமணியன் தயாரித்துள்ளார்.

P.G.முத்தையா ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற என்ன நடக்குது நாட்டுல என்ற பாடல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலர் தினத்தை குறிவைக்கும் விஜய்சேதுபதி-த்ரிஷா

காதலர் தினத்தை குறிவைக்கும் விஜய்சேதுபதி-த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96 stillsவருடத்திற்கு அரை டஜன் படங்களை அசராமல் கொடுத்து வருபவர் விஜய்சேதுபதி.

இவர் மூன்றுவிதமான வயதுகளில் நடித்துள்ள படம் ‘96’.

இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம்குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரித்து வரும் ‘96’ படத்தின் தமிழக விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

இப்படத்தை 2018 பிப்ரவரி காதலர் தின சமயத்தில ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows