Complete Updates: இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸ்.? தாங்குமா தமிழ் சினிமா.?

Complete Updates: இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸ்.? தாங்குமா தமிழ் சினிமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் செப்டம்பர் 23ஆம் தேதி எந்தெந்த தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளன என்ற தகவல்களை இங்கே பார்ப்போம்…

1) ரெண்டகம்

அரவிந்த்சாமி, மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘ரெண்டகம்’.

பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஈஷா ரெபா, ஜாக்கி ஷெராப், அணிஷ் கோபால், சியாத் யாது உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இந்த படத்தை ஃபெலினி இயக்கியுள்ளார்.

நடிகர் ஆர்யா, ஷாஜி நடேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

2.) ட்ராமா

மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கிய படம் “டிராமா”.

இந்த படத்தில் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்துள்ளனர்.

சசிகலா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடும்
இந்த படமானது வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

3.) குழலி

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் செரா கலையரசன் இயக்கிய படம் ‘குழலி’.

‛காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஆரா நடித்துள்ளார்

திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்ற இந்தபடம் இண்டோ பிரஞ்ச் பிலிம் திரைப்பட விழாவில் சிறந்த படம், இசைக்கான விருதுகளை வென்றுள்ளது. உதயகுமார் இசையமைத்துள்ளார்.

4) பபூன்

நடிகர் வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கிய படம் ‘பபூன்’.

சில வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்பராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் அசோக் வீரப்பன்.

முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார். அவருடன் கிராமத்து பாடல்களால் கவனம் பெற்ற அந்தக்குடி இளையராஜாவும் நடித்துள்ளார்.

நாயகியாக அனகா நடிக்க நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

5) ஆதார்

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ & ‘திருநாள்’ படங்களை இயக்கியதின் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ் நடித்துள்ள படம் ‘ஆதார்’.

இவருடன் ரித்விகா, அருண்பாண்டியன் இனியா, உமா ரியாஸ்கான், திலீப் உள்ளிட்டோர் நடிக்க ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக சசிக்குமார் தயாரித்துள்ளார்.

6) டிரிக்கர்

அதர்வா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ட்ரிக்கர்’.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளார். லக்ஷ்மி’, ‘மாறா’ படங்களுக்குப் பிறகு இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

September Month upcoming movies Kollywood release updates

ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை படமாக்க கமல் சம்மதம்

ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை படமாக்க கமல் சம்மதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒய்ஜிபி துவங்கிய யுஏஏ குழுவின் 70-ம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61-ம் ஆண்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உலகநாயகன் கமல்ஹாசன் சாருகேசி நாடகத்தை நேற்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார்.

நாடகம் முடிந்த உடன் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார்.

இது குறித்து ஓய் ஜி மகேந்திரன் கூறுகையில்…

“நாடகத்தை பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார். இது போன்ற நாடகங்கள் தனக்கு மிகவும் புடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

எங்கள் இருவருக்கும் 50 வருட கால நட்பு. மேலும் 20 படங்கள் மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். எங்களுக்கிடையே இருக்கும் நட்பை பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார்,” என்றார்.

தொடர்ந்து பேசிய மகேந்திரன்…

“சாருகேசி நாடகத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை கமல் அவர்கள் வெளிப்படுத்தினார். அவ்வாறு படமாக எடுக்கப்பட்டால் அவரது ஒத்துழைப்பு வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்,” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று சாருகேசி நாடகத்தை பார்த்து, நாடக குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன்

Kamal watches YG Mahendrans Charukesi showers rich praises

Y G Mahendran’s stage play ‘Charukesi’, which has been winning accolades from various quarters, is also marking the 70th year of UAA group started by YGP and 61st year of YG Mahendran as theater artiste.

விஜய் – மகேஷ் பாபு யார் சூப்பர் ஸ்டார்.? சூர்யா பட ஹீரோயின் கீர்த்தி நச் பதில்

விஜய் – மகேஷ் பாபு யார் சூப்பர் ஸ்டார்.? சூர்யா பட ஹீரோயின் கீர்த்தி நச் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி வில்லனாக தெலுங்கில் நடித்த படம் ‘உப்பென்னா’.

இந்தப் படத்தின் மூலம்தான் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.

கீர்த்தி ஷெட்டி

தன் முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ லிங்குசாமி இயக்கிய ’தி வாரியர்’ ஆகிய படங்களிலும் நடித்தார்.

தற்போது பாலா இயக்கும் ’வணங்கான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் கீர்த்தி ஷெட்டி.

அப்போது வழக்கம்போல நடிகர்கள் பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

விஜய், சூர்யா, மகேஷ்பாபு பற்றி கேள்விகளும் கேட்கப்பட்டன.

சூர்யா பற்றிய கேள்விக்கு.., என் சந்திப்பில் மிகவும் மரியாதைக்குரியவர் மனிதர் அவர்.

விஜய் பற்றிய கேள்விக்கு.. என்கேரஜிங் சூப்பர் ஸ்டார் என்றும்… மகேஷ்பாபு பற்றிய கேள்விக்கு.. நிஜத்திலும் சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் என பதிலளித்தார் கீர்த்தி.

கீர்த்தி ஷெட்டி

Krithi Shetty talks about Vijay Suriya and Maheshbabu

விஜய் ஆண்டனி பட அப்டேட்: 1980களின் கதை.. 1 கோடியில் செட்.. 50 மும்பை ஸ்டன்ட் கலைஞர்கள்

விஜய் ஆண்டனி பட அப்டேட்: 1980களின் கதை.. 1 கோடியில் செட்.. 50 மும்பை ஸ்டன்ட் கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில்,
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.

1980 களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா திரில்லராக இத்திரைப்படம் உருவாகிறது.

1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது சிறுமலையின் காட்டுப்பகுதியில் ஒரு பழமையான கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி நாயகி பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் பங்கு கொண்டு நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, கலை இயக்கம் டைரக்டர் – உதயகுமார், ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர் மக்கள் தொடர்பு – சதீஷ் AIM ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

விஜய் ஆண்டனி

Vijay Antony starrer Valli Mayil movie update

நடிப்பிலிருந்து நழுவும் நடிகை நயன்தாரா.; ஓ இதான் காரணமா.?

நடிப்பிலிருந்து நழுவும் நடிகை நயன்தாரா.; ஓ இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நயன்தாரா.

முக்கியமாக தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகை இவர்தான்.

இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை ஓரிரு மாதங்களுக்கு முன் மணந்தார்.

இவர்கள் இணைந்து ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

தற்போது மலையாளத்தில் ‘கோல்ட்’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இவர் தனது 75-வது படத்தை நெருங்கும் வேளையில் விரைவில் நடிப்பிலிருந்து நழுவவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த முடிவை அவர் எடுக்கிறார் என சொல்லப்படுகிறது.

மேலும் இல்லற வாழ்க்கை மற்றும் சினிமா தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நயன்தாரா

Here is reason why Nayanthara quits Cinema

‘புஷ்பா 2’ படத்தில் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை

‘புஷ்பா 2’ படத்தில் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடித்து 2021 டிசம்பரில் வெளியான படம், ‘புஷ்பா’.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் ரிலீசாகி இந்த படம் இந்தியளவில் வசூல் வேட்டையாடியது.

இந்தப் படத்தில் சமந்தா ஒரு ஒரே பாடலுக்கு ஆடியிருந்தார். தமிழில் இந்தப் பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியிருந்தார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட்டாகி பட்டையை கிளப்பியது.

தற்போது இதன் 2ம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சமந்தா ஆடிய “ஊ…. சொல்றியா மாமா..” என்ற பாடலைப் போல ஒரு ஐட்டம் சாங் இந்த படத்திலும் வைக்கப்பட உள்ளதாம்.

ஆனால் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை மலைகா அரோராவை ஒரு பாடலுக்கு ஆட்டம் போட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

மலைகா அரோரா

‘புஷ்பா’ முதல் பாகத்தை சமந்தாவுக்காகவே அந்தப் படத்தை திரும்பத் திரும்ப பார்த்து ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood Actress will play item song in Pushpa 2

More Articles
Follows