பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைப்பு; இதான் காரணமா.?

bhaskar oru rascalமலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் வில்லனாக பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.

அம்ரீஷ் இசையமைக்க, விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தற்போது மே 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது.

இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படம் முக்கியமான நகரங்களில் திரையரங்குகளின் பற்றாக்குறையின் காரணமாகவும், எல்லா பகுதிகளிலும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இப்படத்தினை ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாக படக்குழு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஹர்ஷினி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தினை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர்.

Overall Rating : Not available

Related News

அரவிந்த் சாமி நடிப்பில் தற்போது உருவாகி…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தை…
...Read More
வருடத்திற்கு எத்தனை பண்டிகை வந்தாலும் பெரும்பாலான…
...Read More
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள…
...Read More

Latest Post