விஜய்யின் ‘பைரவா’ நஷ்டம்… கோவை விநியோகஸ்தர் புலம்பல்

விஜய்யின் ‘பைரவா’ நஷ்டம்… கோவை விநியோகஸ்தர் புலம்பல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa stillsபரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது.

படம் வரவேற்பை பெற்ற போதிலும் அப்போது நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனை காரணமாக சில இடங்களில் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோயமுத்தூர் விநியோகஸ்தர் ஒருவர் பைரவா படத்தால் தனக்கு ரூ 1.70 கோடி வரை எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை நான் யாரிடம் சென்று முறையிடுவது என புலம்பி வருகிறார்.

‘நான் வரி கட்டுகிறேன்; நாட்டை விட்டு ஓடமாட்டேன்…’ குஷ்பூ

‘நான் வரி கட்டுகிறேன்; நாட்டை விட்டு ஓடமாட்டேன்…’ குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress khushbooசினிமா, டிவி நிகழ்ச்சிகள், அரசியல் என அனைத்திலும் வெற்றி பவனி வருபவர் நடிகை குஷ்பூ.

இவரது பாஸ்போர்ட் வரும் 2022ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

இந்நிலையில், அதில் புதிதாக ஸ்டாம்ப் ஒட்ட புதிதாக சில பக்கங்களை இணைக்க வேண்டி, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியை அணுகியுள்ளார்.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது குஷ்பு மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘இது குறித்து கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதுகுறித்து குஷ்பூ கூறியதாவது…

‘நான் இந்தியாவில் வசிக்கிறேன். என் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள்.

அவர்களை விட்டு நான் ஓடமாட்டேன்.

25 ஆண்டுகளாக நம் நாட்டில் வரி செலுத்தி வருகிறேன்.

இந்த பிரச்சனைக்கு பின்னால் அரசியல் சதி இருக்கிறது” என்றார்.

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த்-சத்யராஜ் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த்-சத்யராஜ் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth MK Stalinதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தன்னுடைய பிறந்தநாளில் எந்தவிதமான ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டனர்.

ஸ்டாலினுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளனர்.

ஏழை குழந்தைகளின் மருத்துவத்துக்காக விஜய் எடுக்கும் முடிவு

ஏழை குழந்தைகளின் மருத்துவத்துக்காக விஜய் எடுக்கும் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayஅட்லி இயக்கத்தில் விஜய், தன் 61வது படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகிய 3 நாயகிகள் இருப்பதால் விஜய்யும் 3 வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 1980ஆண்டுகளில் நடப்பது போன்ற காட்சிகளை படம்பிடித்து வருகிறார் அட்லி.

இதில் பெரிய தீவிபத்து நடப்பது போன்றும், அதில் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்சிகள் எடுக்கப்பட்டது.

போதிய மருத்துவ வசதி இல்லாததால், அந்த குழந்தைகள் உயிர் இழப்பதை போன்றும், அதனால் விஜய் அதிரடியாக சில முடிவுகளை எடுப்பதாகவும் காட்சிகள் இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

‘முத்துராமலிங்கம் படத்தை திரையிடக்கூடாது…’ ஐகோர்ட் ஆர்டர்

‘முத்துராமலிங்கம் படத்தை திரையிடக்கூடாது…’ ஐகோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Muthu Ramalingam movie stillsராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் ‘முத்துராமலிங்கம்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று திடீரென இந்த படத்தை திரையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

இப்படத் தயாரிப்பாளர் விஜய்பிரகாஷ் அவர்கள், எம்.வி.பிரகாஷ் என்பவரிடம் வாங்கியிருந்த ரூ.29 லட்சம் கடனை திருப்பி தரவில்லை எனக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தந்துவிட்டு படத்தை திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மிக அவசரம்… தமிழ் சினிமா பார்த்திராத கதை! – சுரேஷ் காமாட்சி

மிக மிக அவசரம்… தமிழ் சினிமா பார்த்திராத கதை! – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchiதமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனி கவனம் உண்டு.

அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

அவர் முதல் முறையாக இயக்கும் படத்துக்கு மிக மிக அவசரம் என தலைப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு பிரச்சினையை இந்தப் படத்தில் முன்வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுரேஷ் காமாட்சி.

இயக்குநர் சுரேஷ் காமாட்சியுடன் ஒரு நேர்காணல்…

தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்?

முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமரர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படைக்கு தயாரிப்பாளரானேன். கங்காரு படத்துக்குப் பிறகு புதிய படம் செய்ய கதைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஜெகன் சொன்ன இந்தக் கதை கவனத்தை ஈர்த்தது. அதைத்தான் மிக மிக அவசரம் எனப் படமாக்கியுள்ளேன்.

அப்படி என்ன கதை இது?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

மிக உணர்வுப்பூர்வமான கதை. திரையில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தும்.

நடிகர் நடிகைகள்…

இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களில் நடித்த ஸ்ரீஜா (ஸ்ரீபிரியங்கா) நாயகியாக நடித்துள்ளார்.

கோரிப்பாளையம் ஹரீஷ், வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்ததா.. ஏதேனும் சுவாரஸ்ய நிகழ்வுகள்?

99 சதவீதம் முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது. பாக்யராஜ் சார் பவுனு பவுனுதான் படத்தை இங்குதான் எடுத்திருந்தார்.

அதன் பிறகு 25 ஆண்டுகள் வேறு படங்களுக்கு அங்கே அனுமதி தரவில்லை. போராடி நாங்கள் அனுமதி வாங்கி படமாக்கினோம். அந்த அணையும் ஒரு பாத்திரமாகவே வருகிறது இந்தப் படத்தில். படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை மறக்க மாட்டேன்.

ஒரு இயக்குநராக உங்கள் அனுபவம் எப்படி?

எனக்கு திரை இயக்கம் புதிதில்லை. இயக்கம் – சுரேஷ் காமாட்சி என போட்டுக் கொள்வது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். என் திரைப் பயணம் சினிமா இயக்கத்துடன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. படத்தின் கதை வசனத்தை ஜெகன் எழுதியுள்ளார் (புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை இயக்குநர்).
திரைக்கதை எழுதி இயக்கியுள்ளேன். நல்ல ஆர்டிஸ்டுகள் அமைந்துவிட்டார்கள். ஸ்ரீஜாவுக்கு இந்தப் படம் வேறு ஒரு தளத்தை உருவாக்கித் தரும் என நம்பலாம்.

வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த் என எல்லோருமே பிரமாதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். என் வேலையைச் சுலபமாக்கியிருக்கிறார்கள்.

முதல் படமே ஹீரோயினை மையப்படுத்தி உருவாக்கியது ஏன்?

பெண்களை மையப்படுத்தி என்பதை தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நம்மை இயக்கும் அச்சே பெண்தான். அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட, அவர்களுக்கு எதிரான சீண்டல்கள், தொல்லைகள் ஓய்வதில்லை. அதை என் முதல் படத்திலேயே சொல்ல முயற்சித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றுதானே…

நீங்க எப்போ ஹீரோவாக களமிறங்கப் போறீங்க…?

அது அமைகிற வாய்ப்புகளைப் பொறுத்தது!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பரபரப்பு… நடிகர் சங்க பஞ்சாயத்து என ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறீர்கள்.. இயக்க எப்படி நேரம் கிடைத்தது?

நானாக வலிந்து போய் எந்தப் பிரச்சினையையும் இழுப்பதில்லை. நான் வளர்ந்த, இருக்கிற சூழல் திரைத்துறையில் நடக்கிற கூத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விடவில்லை.

நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் திரைத்துறையில் சிஸ்டம் சரியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சிக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது வெறும் பரபரப்பாகத் தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு என்னைப் புரியும்.

அதனால்தான் விஷயமறிந்த அத்தனைப் பேரும் என்னை ஆதரிக்கிறார்கள். இதுவே என் முழு நேர வேலையில்லை. பட இயக்கம், தயாரிப்புதான் பிரதானம். அதனால் நேரம் ஒரு பிரச்சினையில்லை.

More Articles
Follows