பைரவா ஆடியோ & பட ரிலீஸ் தேதி உறுதியானது

பைரவா ஆடியோ & பட ரிலீஸ் தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sathishவிஜய் நடிக்க, பரதன் இயக்கத்தில் உருவான பைரவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் பெற்ற சாதனைகளை இதற்கு உதாரணமாக சொல்லாம்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் உறுதி செய்துள்ளனர்.

பைரவா பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2017 ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Bairavaa audio and movie release date confirmed

விக்னேஷ் சிவனை வியக்க வைத்த பாத்ரூம் பணம்

விக்னேஷ் சிவனை வியக்க வைத்த பாத்ரூம் பணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivan reaction to sekar reddy cashஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுபவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி.

இவரது வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோடிக்கணக்கான தங்க கட்டிகளும், ரூபாய் நோட்டுகளும் இவரது வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

தற்போது கர்நாடகாவில் ஹவாலா முறையில் பண பரிவர்த்தனை செய்யும் ஒரு டீலர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது அவரது பாத்ரூமில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிறைய தங்க நகைகளும், பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பலவற்றையும், புதிய 2000 ரூபாய் நோட்டு கட்டுகளையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொதுமக்களோ புதிய ஒரு 2000 ரூபாய் நோட்டை வாங்க கால்கடுக்க வங்கி வாசல்களில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்போ அடிச்ச 2000 ருபாய் நோட்டா இவ்ளோ இருக்குன்ன? என ட்விட்டரில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

Vignesh ShivN (@VigneshShivN)
Lol ! Ippo aducha 2000 rs notes eh ivalooVaaa

‘ஒன்லி சிங்கிள்…’ சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்?

‘ஒன்லி சிங்கிள்…’ சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசினிமாவில் சிவகார்த்திகேயன் தன்னுடைய கேரியரை துவங்கும்போது, சிறு வேடம் மற்றும் இரட்டை நாயகர்கள் வேடம் என ஆரம்பித்தார்.

அதன்பின்னர் தனி ஹீரோவாக நடித்து, இன்று அதிகாலை காட்சிக்கே தன்னுடைய படங்கள் திரையிடப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

ரெமோ படத்திற்கு பிறகு வரிசையாக 3 படங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

இவரிடம் கதை சொல்ல நிறைய இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சில இயக்குனர்கள் இவரிடம் டபுள் ஹீரோ கதைகளை கொண்டு சென்றார்களாம்.

“டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வேண்டாம். ஒன்லி சிங்கிள் ஹீரோன்னா ஓகே.

இப்போதான் மார்கெட் உயர்ந்து வருகிறது.

இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறிவிடுகிறாராம்.

லட்சுமி மேனனின் முடிவுக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்குமா?

லட்சுமி மேனனின் முடிவுக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lakshmi menon hotதமிழில் லட்சுமி மேனன் அறிமுகமான கும்கி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து வந்த சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களும் வெற்றிப் பெற்றதால் ராசியான நடிகை என பெயர் எடுத்தார்.

மேலும் குடும்ப பாங்கான வேடங்களை செய்து வந்ததால் பெண்களிடமும் ஆதரவு கிடைத்து வந்தது.

ஆனால் சமீபகாலமாக வாய்ப்புகள் குறைந்து விட்டன.

எனவே, இனி கிளாமர் வேடங்களிலும் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதுநாள் வரை லட்சுமியை ஹோம்லியாக பார்த்த ரசிகர்கள் இனி அப்படி பார்ப்பார்களா? ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வர்றாரு டி.ஆரு…. சொல்லப் போறாரு புது செய்தி.!

வர்றாரு டி.ஆரு…. சொல்லப் போறாரு புது செய்தி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

t rajendharஒரு காலத்தில் தன்னுடைய படைப்புகளால் இளைஞர்களை வசியம் செய்தவர் டி.ராஜேந்தர்.

சில ஆண்டுகளாக கட்சி மற்றும் அரசியலை கவனித்து வந்ததால் படங்களை தவிர்த்து வந்தார்.

இருந்தபோதிலும் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் பாடி வந்தார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் கவண் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இரண்டு படங்களை இயக்கவிருக்கிறாராம்.

இளம் காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு படத்தை தரவிருக்கிறாராம். ஜனவரியில் இதற்கான பூஜையை போட்டு, பிப்ரவரில் தொடங்கவிருக்கிறார்.

மற்றொரு படத்தை வேறொரு நிறுவனத்திற்கு இயக்க போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்றே தெரிகிறது.

பாலிவுட் நடிகையை குறி வைக்கும் விஜய்-அட்லி

பாலிவுட் நடிகையை குறி வைக்கும் விஜய்-அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeவிஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்கப் போகிறார் என்றும் ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் அப்படத்தை தயாரிக்க போகிறது என்றும் சில நாட்களுக்கு முன்பே செய்தி வெளியானது.

ஆனால் படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்த விவரங்கள் இதுவரை முறையாக வெளியாகவில்லை.

படத்தின் நாயகி நயன்தாரா என்றும் காஜல் என்றும் தகவல்கள் பறந்தன.

இந்நிலையில் இதில் இரண்டு ஹீரோயின் நடிக்கப் போவதாகவும் ஒருவர் பாலிவுட் நடிகை என்றும் கூறப்படுகிறது.

இதனால் விஜய்க்கு ஏற்ற ஒரு பாலிவுட் நாயகியை தேடி வருகிறாராம் அட்லி.

More Articles
Follows