ரஜினியின் ‘பாபா’ ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல் அப்டேட்

ரஜினியின் ‘பாபா’ ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2002 ஆண்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பெரும் பரபரப்பை கிளப்பி வெளியான திரைப்படம் ‘பாபா’.

கதை திரைக்கதை எழுதி இந்த படத்தை ரஜினிகாந்த் தயாரித்து இருந்தார்.

தற்போது சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று டிசம்பர் 10ஆம் தேதி ‘பாபா’ படம் ரீ ரிலீஸ் ஆனது.

இப்படத்தை ரசிகர்கள் புதிய படம் போல் மாபெரும் அளவில் கொண்டாடியுள்ளனர்கள்.

இந்நிலையில், பாபா ரீ ரிலீசான திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டுமே ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Baba Re-Release First Day Collection Update

தனுஷின் அடுத்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் சஞ்சய் தத்…

தனுஷின் அடுத்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் சஞ்சய் தத்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சஞ்சய் தத்.

இவர் தற்போது, தனுஷ் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இயக்குனர் சேகர் கம்முலுடன் தனுஷ் நடிக்கும் படத்தில் வில்லன் வேடத்தில் சஞ்சய் தத் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது வில்லன் கதாபாத்திரத்திற்கு 10 கோடி ரூபாய் கொடுக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும், விஜய்யின் ‘தளபதி 67’ படத்திலும் சஞ்சய் தத் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளார்.

Sanjay Dutt to play the villain in Dhanush next movie

‘ரஞ்சிதமே…’ பாடல் சாதனையை சில்லு சில்லாக நொறுக்கிய ‘சில்லா சில்லா..’

‘ரஞ்சிதமே…’ பாடல் சாதனையை சில்லு சில்லாக நொறுக்கிய ‘சில்லா சில்லா..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

தற்போது இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

‘வாரிசு’ படத்தில் இருந்து இடம்பெற்ற ரஞ்சிதமே.. மற்றும் தீ தளபதி.. ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டன.

இதில் ரஞ்சிதமே… பாடலை விஜய் பாடியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று ‘துணிவு’ படத்தில் இருந்து ‘சில்லா சில்லா..’ என்ற பாடல் வெளியானது.

ரஞ்சிதமே படைத்த சாதனையை இப்பாடல் முறியடித்துள்ளது.

ரஞ்சிதமே பாடல் 500k லைக்ஸ் பெற கிட்டத்தட்ட 60 நிமிடம் ஆன நிலையில் தற்போது துணிவு படத்தின் சில்லா சில்லா 47 நிமிடங்களிலேயே 500k லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

Displaying IMG_20221210_190740.jpg.

இந்த வருட டாப் 10 படங்களில் ஒன்று ‘லவ் டுடே’..; பூரிப்பில் பிரதீப் ரங்கநாதன்

இந்த வருட டாப் 10 படங்களில் ஒன்று ‘லவ் டுடே’..; பூரிப்பில் பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லவ் டுடே’ படம் வெற்றி பெற்றதற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனரும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்..

அப்போது.. “லவ் டுடே’ படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.

இந்த நம்பிக்கை 50 சதவீதம் என் மேல் இருந்தது, மீதி மீடியா மேல் எனக்குள்ள நம்பிக்கை. லவ் டுடே ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே எங்களுக்கு ஏகப்பட்ட ஆதரவு கிடைத்தது.

டிரெய்லர் வெளியான பிறகு படம் நல்லா இருக்கும் என அனைவரும் நம்பினீர்கள். அதனால் எங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. நீங்கள் அளித்த விமர்சனங்கள் லவ் டுடேவை இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

உங்கள் ஆதரவு கோமாளி திரைப்படத்திற்கும் இப்போது லவ் டுடேக்கும் கிடைத்தது. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன்.

நீங்கள் ஆதரிக்கக்கூடிய திரைப்படங்களை உருவாக்கவும் முயற்சிப்பேன். இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்ததற்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி,” என்று கூறினார்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிர்வாக தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கம் இந்த நிகழ்வின் போது பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்களே உருவாக்கியுள்ளன – அர்ச்சனா கல்பாத்தி

சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்களே உருவாக்கியுள்ளன – அர்ச்சனா கல்பாத்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது.

படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை லவ் டுடே குழு இன்று ஏற்பாடு செய்தது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, சிஎஃப்ஓ ரங்கராஜன், நிர்வாக தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில்..

“சிறியதோ பெரியதோ எல்லா படங்களுக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் ஒரே மாதிரியான முயற்சிகளை செய்கிறது என்று கூறினார்.

“ஒரு சிறிய படத்துடன் ஒப்பிடும்போது பெரிய படத்திற்கான விளம்பரம் எளிதான முறையில் நடக்கிறது. லவ் டுடே படத்திற்கு ஒருமித்த ஆதரவு அளித்த அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிய படங்கள் மிகவும் முக்கியமானவை. பல சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்கள் உருவாக்கியுள்ளன, அதை நாம் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற சிறிய திரைப்படங்களுக்கு பத்திரிகைகளின் ஆதரவு முக்கியமானது. ஊடகங்கள் ஒரு திரைப்படத்தைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பகிர்வதால், பார்வையாளர்களுக்கு தானாகவே அந்த படத்தை பார்க்க ஆர்வம் ஏற்படும்,” என்று அவர் கூறினார்.

சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் விஷால் வைக்கும் விருந்து

சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் விஷால் வைக்கும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘லத்தி’ படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த இரு நடிகர்களும் விஷாலுக்கு நெருக்கமான நண்பர்கள் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஷாலுக்கு இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது பலமுறை விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் இடம் பெற்ற ‘ஊஞ்சல் மனம் ஆடுமே…’ வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் ‘லத்தி’ படத்தின் டிரைலர் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ‘லத்தி’ வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows