கௌதமி போனா என்னா? அதான் ஆஷா சரத் இருக்காரே…

கௌதமி போனா என்னா? அதான் ஆஷா சரத் இருக்காரே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gauthami and asha sarathகமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீஎண்ட்ரி கொடுத்தார் கௌதமி.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆஷா சரத் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போதைக்கு நாம் சொல்லப்போகும் விஷயத்தில் கமலை தவிர மற்றவர்களுக்கு சம்பந்தம் உண்டு.

(நீங்க என்ன நினைச்சிங்களோ தெரியாது பாஸ்)

கௌதமி நடிக்க ஒப்பந்தமாகி விலகிய ஒரு கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம் ஆஷா சரத்.

மோகன்லால் தயாரித்து நடித்த ‘பரதேசி’ படத்தை இயக்கியவர் பி.டி.குஞ்சு முகம்மது.

இவர் இயக்கவுள்ள படம்தான் ‘விஸ்வாசபூர்வம் மன்சூர்’.

இதில்தான் ஆஷா சரத் நடிக்கிறார்.

அதுபோல் மற்றொரு கேரக்டரில் இருந்து ஸ்வேதா மேனன் விலக, அவருக்கு பதிலாக ஜரீனா வஹாப் நடிக்கிறாராம்.

தனுசுடன் நடிக்க ஆசைப்படும் ‘செம போத ஆகாத’ மிஷ்டி

தனுசுடன் நடிக்க ஆசைப்படும் ‘செம போத ஆகாத’ மிஷ்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and mishtiஅதர்வாவின் செம போத ஆகாத படத்தில் நாயகியாக நடிப்பவர் பெங்காலி நடிகை மிஷ்டி.

இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் தனுசுடன் நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்.

இதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறாராம் இந்த மிஷ்டி.

வாழ்த்துக்கள் அம்மணி.

‘இந்த விஜய்க்கு பதிலாக அந்த விஜய் நடிக்கிறார்’… விஜய்சேதுபதி ஓபன் டாக்

‘இந்த விஜய்க்கு பதிலாக அந்த விஜய் நடிக்கிறார்’… விஜய்சேதுபதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஜீவா சங்கர் எழுதி இயக்கியுள்ள எமன் படத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் படக்ழுகுழுவினருடன் இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதி கலந்துக் கொண்டு பேசும்போது எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் இவரிடம்தான் தெரிவித்தாராம்.

ஆனால் இவரிடம் கால்ஷீட் இல்லாததால், அதன்பின்னர்தான் அந்த வாய்ப்பு விஜய் ஆண்டனிக்கு சென்றதாம்.

விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள் என்றும் வித்தியாசமான கதைகளை எப்போதும் தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் விஜய்சேதுபதி.

‘கனவிலும் நினைத்திடாத வாழ்க்கை இது…’ – சிவகார்த்திகேயன்

‘கனவிலும் நினைத்திடாத வாழ்க்கை இது…’ – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan thanksவிஜய் டிவியில் தொடங்கிய தனது கலைப்பயணத்தை இன்று சினிமாவில் தொடர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

வெள்ளித்திரைக்கு இவர் நடிக்க வந்து 5 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன.

ஆனால் தன்னுடைய கடின உழைப்பாலும் தொடர் வெற்றியாலும் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் சிவா.

இவர் நடித்த முதல்படமான மெரினா பிப்ரவரி 3ஆம் தேதி, 2012ஆம் ஆண்டில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தன்னால் மறக்க முடியாத அந்நாளை தனக்கு தந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

Sivakarthikeyan thanks to all on his 5th year in Cinema

அந்த அறிக்கை இதோ….

siva thanks letter

விஷால் அணியினர் தேர்தலில் போட்டியிட இத்தனை காரணங்கள்?

விஷால் அணியினர் தேர்தலில் போட்டியிட இத்தனை காரணங்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Prakashrajதயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுகின்றனர்.

சற்றுமுன் இந்த அணியினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர் என்பதை பார்த்தோம்.

இதுகுறித்து விஷால் அணியினர் சற்றுமுன் கூறியதாவது…

இந்த சங்கத்தில் பதவியில் இல்லாமல் வெளியில் இருந்து குரல் கொடுத்ததால் எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் இப்போது போட்டியிடுகிறேன்.

என் வேட்புமனு மீது சர்ச்சை எழுப்பினாலும் தடைகளை தகர்ப்போம்.” என்றார். விஷால்

“நிச்சயம் ஒரு மாற்றம் தேவை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைய குறைகள் உள்ளது.

சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனவேதான் போட்டியிடுகிறோம்” என்றார் பிரகாஷ்ராஜ்.

சினிமாவினால் நல்லது செய்யமுடியும். எனக்கு பதவி ஆசையில்லை. இதில் ஆதிக்கம் செலுத்த வரவில்லை என்றார் மிஷ்கின்.

நல்ல ஒரு சினிமாவை உருவாக்க பாடுபடுவோம். அதுபோல் நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்வோம்.” என்றார் ஞானவேல் ராஜா.

Reasons behind Vishal team in Producer Council Election

rksuresh gautam

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வேட்புமனுதாக்கல்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வேட்புமனுதாக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal teamவருகிற மார்ச் 5ஆம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் விஷால் தலையிலான அணியினர் சற்றுமுன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இதே அணியைச் சேர்ந்த மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

செயலாளர் பதவிக்கு ஞானவேல் ராஜா, பிரகாஷ்ராஜ், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர். பிரபு போட்டியிட உள்ளனர்.

பாண்டிராஜ், ஆர்யா, மிஷ்கின், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

Vishal team nominations in Producer Council Election

vishal team all

More Articles
Follows