தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைகாலமாக மலையாளத்தில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வருகின்றன.
இதில் மோகன்லால் நடித்த ஒப்பம் என்ற படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார்.
த்ரில்லர் கதையான இதில் மோகன்லால் பார்வையற்றவராக மோகன்லால் நடித்திருந்தார்.
நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம்.
இதற்கான சிறப்பு காட்சியை ரஜினிக்கு திரையிட்டு காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது.
மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் ரீமேக்கில் கமல் நடித்திருந்தார். பாபநாசம் என்ற பெயரில் வெளியான இப்படம் வெற்றி பெற்றது நாம் அறிந்ததே.
கமல் ஓகே சொன்னதை போல ரஜினி ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.