தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கும் பைரவா படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது ரோஷன் பஷீர் என்பவரும் இணைந்து இருக்கிறாராம்.
இவர் பாபநாசம் படத்தில் கமலின் மகள் நிவேதா தாமஸை வீடியோ படம் ஒன்றை காட்டி மிரட்டுவார்.
அதன்பின்னர் கௌதமியால் கொலை செய்யப்படுபவராக நடித்திருப்பார்.
மேலும் 3 ரசிகர்கள் என்ற படத்தில் விஜய் ரசிகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் பைரவா படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.
இவருக்கு இன்னொரு ஆசையும் உண்டாம். அதாவது… 3 ரசிகர்கள் படத்தின் இசை வெளியீட்டை விஜய் வெளியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்க இருக்கிறாராம்.