தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமெரிக்காவில் உள்ள ஐடி கம்பெனிகளில் பணிபுரியும் தமிழர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் வெள்ளைப் பூக்கள்.
இப்படத்தில் விவேக், சார்லி, பூஜா தேவாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது விவேக் பேசியதாவது…
” மறைந்த இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் எப்படி டிரெண்ட்டாக அமைந்ததோ, அதேபோல் தான் வெள்ளைப் பூக்களும் டிரெண்ட் செட்டராக அமையும்.
இப்படத்தின் இயக்குனர் விவேக் இளங்கோவனுக்கு சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது.
நிறைய படங்களில் காமெடி செய்துள்ளேன். சில படங்கள் என் காமெடிக்காக ஓடி இருக்கிறது. ஆனால் நான் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை.
நான் நாயகனாக நடித்த ‘நான் தான் பாலா’ ஒரு நல்ல படம். அது நன்றாக ஓடும் என நினைத்தேன். ஆனால் அப்போது கமலின் பாபநாசம் திடீரென வந்து என் படத்தை நாசம் செய்துவிட்டது.
உடனே நான் கமலுக்கு எதிராக பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். இப்போது அவர் அரசியலில் இருக்கிறார்.
எனவே இதை தவறான செய்தியாக போட வேண்டாம். அவருக்கு ஒரு கும்பிடு போட்டு விடுகிறேன்.” என விவேக் பேசினார்.
Kamalhassans movie release made my movie flop says Vivek