தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த படம் அர்ஜீன் ரெட்டி.
தெலுங்கில் ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
எவரும் எதிர்பாரா வகையில் கிட்டதட்ட 10 மடங்கு லாபத்தை இப்படம் கொடுத்துள்ளதாம்.
எனவே தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய பலத்த போட்டி நிலவியது.
தமிழ் ரீமேக் உரிமைக்கு தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தியும், அது பலனிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இதன் தமிழ், மலையாள மற்றும் கன்னட டப்பிங் மற்றும் ரீமேக் உரிமைகளை கைப்பற்றியுள்ளதாம்.
இதனையடுத்து சென்னையில் சில தியேட்டர்களில் திரையிடப்பட்ட இப்படக் காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Arjun Reddy tamil remake rights bagged by E4 entertainment