‘லைகர்’ தோல்விதான்.: அதற்காக அழுதுட்டே இருக்க முடியாது.; சொன்னது யார் தெரியுமா?

‘லைகர்’ தோல்விதான்.: அதற்காக அழுதுட்டே இருக்க முடியாது.; சொன்னது யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகந்நாத் இயக்கிய படம் ‘லைகர்’.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக லைகர் பட குழுவினர் சென்னை வந்திருந்தனர்.

ரிலீஸ் ஆகும் நாளில் ‘லைகர்’ படத்திற்கு பிரத்யேக காட்சியும் போடப்படும் என அறிவித்திருந்தனர்.

ஆனால் ‘லைகர்’ படத்திற்கு முதல் நாளில் வந்த கடுமையான விமர்சனங்களால் பத்திரிகையாளர்களுக்கான காட்சி (PRESS SHOW) நிறுத்தப்பட்டது

எதிர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூலும் பெருமளவு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் பட இயக்குநர் பூரி ஜெகந்நாத்.

அதில்.. “வெற்றியின்போது மேதையாக உணர்வோம். ஆனால் தோல்வி நம்மை ஒரு முட்டாளைப்போல வைத்துவிடும்.

நாமும் நம் படமும் வெற்றி பெறும்போது நம்மை நம்பியவர்கள், தோல்வியடையும் போது எதிர்மறையாக திரும்பிவிடுவார்கள்.

நம் ஙாழ்க்கையில் ஒருவரை இழக்க நேரிடலாம், செல்வம் விட்டு போகலாம்.் அதிலிருந்து மீண்டு வர காலம் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

நாம் அடுத்த விஷயங்களுக்கு கடந்து செல்ல வேண்டும்.

மூன்று வருடங்கள் லைகருக்கு வேலை செய்தேன். அருமையான செட்களை உருவாக்கி, மைக் டைசனுடன் பணியாற்றினேன்.

அது தோல்வியடைந்தது என்பதற்காக 3 ஆண்டுகளுக்கு அழ முடியாது.

விரைவில் உங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு படத்தை உருவாக்குவேன். நீங்கள் மகிழ்வீர்கள். சிறந்த சினிமா வரும்” என்றார்.

லைகர்

Director Puri Jagannadh reaction for Liger movie flop

‘மான்ஸ்டர்’ படத்தை வெளியிட தடை.; சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் செம அப்செட்

‘மான்ஸ்டர்’ படத்தை வெளியிட தடை.; சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் செம அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதில் லட்ஷ்மி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.

உதய்கிருஷ்ணா எழுத்தில் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தில் ஓரின சேர்க்கை குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் வளைகுடா நாடுகளில் படத்தை வெளியிட கல்ஃப் நாடுகளின் சென்சார்ஷிப் அமைப்பு படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

இதனால் அங்கு வாழும் மலையாளிகள் மற்றும் மோகன்லால் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.

இந்த படத்தின் தடையைத் தொடர்ந்து அந்த காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு வளைகுடா நாடுகளில் வெளியிடலாமா? என படக் குழு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாம்.

Mohanlals Monster banned in Gulf Countries over lesbian content

8 வருடங்களுக்கு பிறகு..! விஜய் சேதுபதியின் படத்தை வெளியிட அனுமதித்த உயர்நீதிமன்றம்

8 வருடங்களுக்கு பிறகு..! விஜய் சேதுபதியின் படத்தை வெளியிட அனுமதித்த உயர்நீதிமன்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

2013 இல் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்த படத்தை என்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் அந்த ஆண்டு பண்டிகை தேதியில் வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் கடந்த எட்டு ஆண்டுகளாக படத்தின் வெளியீடு கேள்விக்குறியாக மாறியது.

இருப்பினும், திருப்பதி பிரதர்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும், விரைவில் திரைக்கு வரும் என்றும் பகிர்ந்துள்ளனர்.

முதன்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் இணைந்து பணிபுரிந்து படத்தின் முக்கிய அம்சம்.

இடம் பொருள் ஏவல்

vijay sethupathi’s idam porul yaeval release soon

‘பிரின்ஸ்’ மேடையில் இணையும் விஜய் தேவரகொண்டா & ராணா டகுபதி

‘பிரின்ஸ்’ மேடையில் இணையும் விஜய் தேவரகொண்டா & ராணா டகுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பிரின்ஸ்’.

ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

‘பிரின்ஸ்’ டத்தின் ரிலீசை முன்னிட்டு பட குழுவினர் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பட புரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில் இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது என்ற செய்திகளை நாம் FILMISTREET இணையதளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று ஐதராபாத்தில் PRE RELEASE EVENT நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா & ராணா டகுபதி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijay Deverakonda & Rana as Chief Guests at SivaKarthikeyans Prince Event

‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் ரஜினிக்கு போலீஸ் பாதுகாப்பு..!

‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் ரஜினிக்கு போலீஸ் பாதுகாப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இதில் ரஜினி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்றுள்ளதால் போலீசாரின் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பிற்காக ரஜினி புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் சென்றபோது, புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பை அளித்தனர்.

Police protection for shooting of Jailer movie

இந்தியாவை கலக்கிய கன்னட நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.?!

இந்தியாவை கலக்கிய கன்னட நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னட படங்கள் என்றாலே ஓரிரு சில நடிகர்களை மட்டுமே அனைவருக்கும் தெரியும்.

அதில் முக்கியமாக மறைந்த கன்னட நடிகர் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குடும்ப நடிகர்களே பிரபலமாக இருந்தனர்.

இதற்கு முக்கிய காரணம் கன்னட படங்கள் கர்நாடகாவில் மட்டுமே ரிலீஸ் ஆகும். மேலும் மற்ற மொழி படங்களையும் கர்நாடகாவில் வெளியிட மாட்டார்கள். இதனால் குறுகிய வட்டத்திற்கு கன்னட சினிமாவினர் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் தற்போது பேன் இந்தியா படங்கள் மூலமாக இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது கன்னட திரைப்படங்கள்.

சுதீப்..யஷ் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட கன்னட நடிகர்கள் பான் இந்தியா படங்கள் மூலம் பிரபலமாகி வருகின்றனர்.

கே ஜி எஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் யஸ் இந்தியளவில் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில் யஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘கைதி 2’ மற்றும் விஜய்யின் 67வது படத்தை முடித்துவிட்டு யஸ் படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்படுகிறது.

யஷ்

KGF Actor Yash and Director Lokesh will join for new venture

More Articles
Follows