அரசியல்வாதி ஏற்படுத்தும் குழப்பமே *அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா*

அரசியல்வாதி ஏற்படுத்தும் குழப்பமே *அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arasiyalla Idhellam Saadharnamappa will be 100 percent Laughter Riotஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

நடிகர் வீரா இது பற்றி கூறும்போது,

“ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்” என்றார்.

இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் தனது பங்கிற்கு கூறும்போது, “நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம்.

அங்கு தான் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பாவின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி” என்றார்.

படத்தின் அடிப்படை கருப்பொருள் பற்றி அவர் மேலும் கூறும்போது, “இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்கிறது” என்றார்.

ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது…

“30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இது தான் திரைப்பட தயாரிப்பில் இறங்க சரியான நேரம் என நான் உணர்கிறேன். உண்மையில், இது பார்வையாளர்களின் நாடித் துடிப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல கற்றல் அனுபவம்.

நான் என் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய போது, பொழுதுபோக்கு மற்றும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதுதான் என் நோக்கமாக இருந்தது.

உலகளாவிய பார்வையாளர்களுக்கு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது பார்வையாளர்களை பற்றி மட்டுமல்ல, என் முதல் தயாரிப்பை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடுகிறார் என்பதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

Arasiyalla Idhellam Saadharnamappa will be 100 percent Laughter Riot

*நெஞ்சமெல்லாம் பல வண்ணம்* படத்தில் கடைக்குட்டி சிங்கமான மகேஷ்பாபு

*நெஞ்சமெல்லாம் பல வண்ணம்* படத்தில் கடைக்குட்டி சிங்கமான மகேஷ்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samantha and mahesh babuமொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா (பி.லிட் ) படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்திருக்கும் படம் “ நெஞ்சமெல்லாம் பல வண்ணம் “

தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு ” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படமான இது ஆந்திர திரையுலகினரே அதிசயிக்கும் விதமான படமானது. இந்த படத்தில் மகேஷ்பாபு , வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி , சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – மிக்கி ஜே.மேயர்

பாடல்கள் – அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர்.

எடிட்டிங் – நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம்.

இயக்கம் – ஸ்ரீகாந்த். இவர் ஏற்கனவே புதுமுகங்களை வைத்து இயக்கிய “ கொத்த பங்காரு லோகம்” அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் A.R.K.ராஜராஜா

தயாரிப்பு – ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட் ) மெஹபு பாஷா

படம் பற்றி A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம் …

இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.

முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

யாரும் தொடாத கதையாக *செய்கை ஒரு பாடமாகட்டும்* இசை ஆல்பம் !!

யாரும் தொடாத கதையாக *செய்கை ஒரு பாடமாகட்டும்* இசை ஆல்பம் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seigai stillsஉலகில் உலகமயமாக்கல் ,முன்னேற்றம், மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயர்களில் எத்தனையோ கொடுமைகள் மனிதனுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. மனிதனை ஒரு ஆராய்ச்சிப் பிராணியைப் போல நடத்தும் மிகக் கொடிய அமைப்பே Asylum என்பது. இதை 1959 – லேயே பல நாடுகள் தடை செய்து விட்டன. இருந்தும் சில நாடுகளில் தொடரவே செய்கின்றனர். மனநோய் மருத்துவமனையில் நுழைந்தால் நோய் சரியாகி மீண்டு வர முடியும். ஆனால் புகலிடம் , சரணாலயம் என்கிற பெயரில் நடக்கும் ‘அசைலமி’ல் ஒரு முறை நுழைந்தால் வெளியே வர வே முடியாது. ராணுவம் கேள்வி கேட்டால் கூட பதில் தர மாட்டார்கள். அங்கு நுழையும் மனிதர்களைப் பிராணிகளைப் போல ஹைட்ரோதெரபி , மெக்கானிக்கல் ஸ்லாப் போன்று பல வித ஆராய்ச்சிக்குட்படுத்தி கொடுமைப் படுத்துவார்கள். காஸ்மெடிக்ஸ் , பேர்னஸ்க்ரீம்கள் , பாடி ஸ்ப்ரே , அலங்காரப் பூச்சுகள் போன்றவை பற்றிய ஆராய்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். ரசாயனம் செலுத்தப்பட்டு அவர்கள் படும் பாடு சொல்ல முடியாது. சில நேரம் இறக்கவும் நேரிடும் . இந்தக் கொடுமையை உலகெங்கும் கொண்டு செல்லும் விதத்தில் உருவாவதுதான் “செய்கை ஒரு பாடமாகட்டும் ” ஹிப்ஹாப் இசை ஆல்பம்.

பாடல் வரிகள், இசை ,இயக்கம் , தயாரிப்பு வடிவமைப்பு என்று பங்களித்து இதை உருவாக்கி வருபவர் தமிழ் ஆப்தன் (தினேஷ் ) இவர் ஏற்கெனவே இந்தியா முழுக்க சுற்றி துப்பறிவு என்றொரு இசை ஆல்பம். எடுத்திருந்தார் . அது தூய்மை இந்தியா திட்ட முழக்கத்தை முன்னிறுத்தியதால் இந்திய அரசே தன் ஸ்வாச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கத்துக்கான படைப்பாக ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது. துப்பறிவின் பாடலைத் தமிழிலும் இந்தியிலும் தூய்மை இந்தியா செயலியில் சேர்த்துப் பெருமை சேர்த்தது அரசு.

அப்படிப்பட்ட சமூகப் பொறுப்புமிக்க கலைஞரான தமிழ் ஆப்தன் இயக்கும் இரண்டாவது படைப்பே “செய்கை ஒரு பாடமாகட்டும் “ஆல்பம். இளைஞர்களுக்கு பேச்சு , எழுத்து சுதந்திர உணர்வை அளிக்கும் விதத்தில் இது இருக்குமாம்.

ஆச்சி கிழவி திருக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிக்கிறார். . சொழிந்தியம் மீடியா ஒர்க்ஸ் இதற்குத் துணை நிற்கிறது.

இந்த ஆல்பத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள’ ஈழம் பாய்ஸ் பாரிஸ் ‘குழுவிலுள்ள தமிழ்க் கலைஞர்கள் தமிழின் பெருமை கூறும் பாடலைப் பாடியுள்ளனர். இதில் பல சுதந்திர இசைக் கலைஞர்கள் பாடியுள்ளதுடன் தோன்றியும் இருக்கிறார்கள்.

‘தாரை தப்பட்டை’ படத்தில் ‘வந்தனம் வந்தனம் ‘நாட்டுப்புறப் பாடல் பாடிய கவிதா கோபியை மேற்கத்திய இசையில் பாட வைத்துள்ளனர் என்பது ஒரு சாம்பிள்.
இப் படைப்புக்கு ஒளிப்பதிவு அசோக் பன்னீர்செல்வம் ,படத் தொகுப்பு G.P.அருண் பிரபாகரன் , கலை இயக்கம் சதீஷ்குமார் , நடனம் செல்வி. ஒப்பனை சசிகுமார், ஆடை வடிவமைப்பாளர் திவ்யா,

சுதந்திர இசைக் கலைஞர்கள் திரைக் கலைஞர்கள் என்று இரு வகையினரும் இணைந்து இதை உருவாக்கி வருகிறார்கள்.

Exclusive: ஏஆர். ரஹ்மான் இசையில் அஜித்தை இயக்கும் வினோத் !

Exclusive: ஏஆர். ரஹ்மான் இசையில் அஜித்தை இயக்கும் வினோத் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and AR Rahman‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படம் என்ன? என்பதே பலரின் ஆவலாக உள்ளது.

நிறைய இயக்குனர்களின் பெயர்கள் யூகத்தின் அடிப்படையில் பேசப்பட்டது.

இந்நிலையில் அஜித்தை இயக்கப் போவது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குனர் வினோத் தான் என நம்பகமான தகவலை பகிர்ந்தோம்.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார் என்றும் பார்த்தோம்.

இந்நிலையில் ஏஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது.

Exclusive :லைகா தயாரிப்பில் சிம்பு-சுந்தர்.சி-ஹிப்ஹாப் ஆதி கூட்டணி

Exclusive :லைகா தயாரிப்பில் சிம்பு-சுந்தர்.சி-ஹிப்ஹாப் ஆதி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuபவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘Attarintiki Daredi’ .

இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை லைகா நிறுவனம் கைபற்றியதை சமீபத்தில் அறிவித்ததை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தை சுந்தர்.சி. இயக்கவுள்ளதாகவும் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இதில் கதாநாயகனாக சிம்பு நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர். சியுடன் சிம்பு இணைவது இதுவே முதன்முறையாகும்.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆர்கானிக் உணவு மோசடியை அம்பலப்படுத்தும் *திசை*; பாக்யராஜ் பாராட்டு

ஆர்கானிக் உணவு மோசடியை அம்பலப்படுத்தும் *திசை*; பாக்யராஜ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhisaiலைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பி.வரதராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். லீமா பாபு, அதுல்யா ரவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்..

படத்தின் இயக்குனர் வரதராஜன் கூறும்போது, “இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாக கலந்துவிட்டது. இதனால் மக்கள் இன்று, சற்றே விலை அதிகம் என்றாலும் கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி இந்த ஆர்கானிக் உணவுப்பொருட்கள் என்கிற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகின்றது. அதுபற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம்.

உதாரணத்திற்கு சொல்லப்போனால் நாட்டு வைத்தியம் என்கிற பெயரில் ஆர்கானிக் முறையில் கேன்சரை குணமாக்குகிறேன், சர்க்கரை நோயை இல்லாமல் செய்கிறேன் என சிலர் பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். இப்போது வருகிற ஆர்கானிக் உணவுப்பொருட்கள் சரியானது தானா என்பதையம் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு நம்பவேண்டாம் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறோம்.

இந்த ஆர்கானிக் பொருட்கள் மோசடியால் நானே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த மோசடி குறித்து ஆய்வு செய்தபோது நிறைய அதிர்ச்சியான தகவல்கள் எனக்கு கிடைத்தன. ஆர்கானிக் உணவுப்பொருட்களின் மீதான மக்களின் நம்பிக்கையை காசாக்க ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும் என நினைத்தே இந்தப்படத்தை இயக்கியுள்ளேன்.

அதுமட்டுமல்ல ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் நடக்கும் சில மோசடிகளையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளோம். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் நபர் ஒருவரே இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்பதால் அதை பற்றிய நிறைய தக்வல்கள் எங்களுக்கு கிடைத்தன..

இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இந்தப்படம் முக்கோண காதல் கதையாகவே நகரும்.. ஒருவர் ஆர்கானிக் உணவுப்பொருட்களில் நடக்கும் மோசடியையும், இன்னொருவர் ரியல் எஸ்டேட்ட் பிசினஸில் நடக்கும் மோசடிகளையும் இரண்டு ஹீரோக்களுக்கு இணையாக இரண்டு வில்லன்களும் படத்தில் இருக்கின்றனர்.

எனது குருநாதர்கள் காமெடி,ஆக்சன் ரூட்டில் பயணித்தாலும் அதிலேயே தொடர்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை.. இந்தப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாக்யராஜ் இதுபோன்ற படங்களுக்குத்தான் விருதுகள் கொடுக்கப்படனும்னு எங்களை பாராட்டியது மறக்க முடியாதது” என்கிறார் வரதராஜன்.

சமீபத்தில் தான் இந்தப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.. இப்போது இயக்குனர் கரு.பழனியப்பன் இன்னொரு பாடலை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும் திருச்சி துறையூர் பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 45 நாட்கள் நடத்தியுள்ளார்கள். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

More Articles
Follows