“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா “ மிக விரைவில் திரையில் !

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா “ மிக விரைவில் திரையில் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arasiyalla Idhellam Saatharanappaகாமெடி படங்களுக்கென்றே தமிழகத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. குடும்பங்கள் இணைந்து குதூகலத்துடன் கொண்டாடும் படங்களாக, அவ்வகை படங்கள் இருக்கின்றன. விநியோகஸ்தர்கள் காமெடி படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். வீரா, மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள “ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படம் தலைப்பு முதலாக வெளியிடப்பட்ட சிறு, சிறு வீடியோ புரமோக்களால் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனயடுத்து தற்போது CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளதால் படக்குழு பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறது.

இயக்குநர் அவிநாஷ் ஹரிஹரன் படம் குறித்து கூறியதாவது…

குவியும் நல்ல, நல்ல செய்திகளால் நானும் எங்கள் படக்குழுவும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம். முதல் காரணம் CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U சான்றிதழ் வழங்கிள்ளார்கள். அடுத்த காரணம் படக்குழு படத்தை வெளியிட தயாரகி வருகிறது. சமீப காலங்களில் மிக கனமான கதைகளுள்ள, பொருளுள்ள, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இது எங்களது படத்தை வெளியிட சரியான தருணம் எனும் எண்ணத்தை என்னுள் விதைத்தது. “ அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா” படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல இதுவே சரியான நேரம். படத்தை மிக தரமானதாக உருவாக்க பெரும் ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு பெரும் நன்றி. இப்படத்தில் நடிகர்கள் மிக முக்கிய பங்கினை வகித்துள்ளார்கள். வீரா, மாளவிகா, பசுபதி முதலான அனைவரும் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இப்படத்தின் மிகச்சிறந்த கதையை ரசிகர்கள் கொண்டாடும் நேரம், படம் சொல்லப்பட்ட நகைச்சுவை பாணியை பெரிதும் ரசிப்பார்கள். படவெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றார்.

Auraa Cinemas சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை அவிநாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ளார். மேட்லி ப்ளூஸ் ( Madley Blues ) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். சுதர்ஷன் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். எட்வர்ட் கலைமனி கலை இயக்கம் செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார்.

விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்

விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanam Vijay Sethupathiதமிழ்சினிமாவில் அவ்வப்போது பேராச்சர்யங்கள் நிகழும். அப்படி சினிமாவில் நிகழ்ந்த பேராச்சர்யம் நடிகர் சந்தானம். மிக எளிமையான இடத்தில் இருந்து வந்து கடுமையாக உழைப்பவர்களை சினிமா வலிமையான இடத்தில் வைக்கும். இப்போது சந்தானம் நாயகனாக அப்படியொரு வலிமையான இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருப்பது வெற்று புரோமோஷனும், வெட்டிப் பந்தாவும் இல்லை. உண்மையான மற்றும் மனம் தளராத அவரது உழைப்பு. விஜய் டிவியில் லொள்ளுசபா மூலமாக மக்களின் மனதில் அமர்ந்தவர், செய்யும் வேலையை மிகவும் நேசித்தே செய்தார். அந்த நேசிப்பும் அர்ப்பணிப்பும் தான் அவரை மன்மதன் படம் மூலமாக சினிமாவிற்கு இழுத்து வந்தது. சினிமாவில் தோன்றிய ஒரே நாளில் அவர் காமெடியில் உச்சம் அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தைப் பிடிக்க அவர் பெரிதும் உழைத்தார். தனித்துவமான காமெடியில் தனித்துவ இடத்தைப் பிடித்தார். பெரிய பெரிய ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள் எல்லாரும் சந்தானத்திற்காக காத்திருந்தார்கள். காமெடியில் உச்சத்தில் இருந்த போதே ஹீரோ அவதாரம் எடுத்தார். ஹீரோவாக அவர் எடுத்து வைத்த முதல்படியே வெற்றிப்படியாக அமைந்தது. அடுத்தடுத்தப் படங்களிலும் மிகச்சிறப்பாக கவனம் செலுத்தினார். இப்பொழுது அவரது படங்கள் எப்போது வெளியாகிறது? என்று மக்கள் கவனிக்கத் துவங்கி விட்டார்கள். மேலும் வியாபார ரீதியாகவும் வசூல் ரிதீயாகவும் சந்தானம் பலரும் ஆச்சர்யப்படும் இடத்தில் இன்று இருக்கிறார். குறிப்பாக சந்தானம் நடிக்கும் படங்களை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் என்ற பேச்சு பலமாக இன்று கேட்கிறது.

இந்த வருடம் சந்தானம் திரைவாழ்வில் மிக முக்கியமான வருடமாக இருக்கும் என்பதை அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படங்களின் வரிசையை பார்க்கும் போதே தெரிகிறது. நடிகர் விஜய்சேதுபதி தான் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகன் என்று ஒரு கருத்து சினிமாவில் உண்டு. ஆனால் சந்தானத்தின் படங்கள் விஜய்சேதுபதி படங்களை விட அதிகமாகவுள்ளது. வியாபாரத்திலும் சந்தானம் முன்னணியிலே இருக்கிறார்.

இந்த வருடம் டகால்டி வெற்றியை தொடர்ந்து சர்வர் சுந்தரம்,பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு3 ஆகிய படங்கள் வெறித்தனமான கன்டென்ட் மற்றும் பிரம்மாண்டத்தோடு தயாராகி வர, அடுத்தடுத்த சந்தானத்தின் கமிட்மெண்ட்களும் வேறுலெவலில் இருக்கிறது. A1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜேஷ் M இயத்தில் ஒரு படத்திலும், வஞ்சகர் உலகம் என்ற தரமான படத்தைத் தயாரித்த புரொடக்சன் கம்பெனி தயாரிக்கும் புதியபடத்திலும் நடிக்கிறார் சந்தானம். மேலும் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் சிறந்த மனிதராகவும் சந்தானம் இருக்கிறார். வெளியில் தெரியாமல் எத்தனையோ பேர்களுக்கு உதவியும் வருகிறார். இதையெல்லாம் அவர் வெளியில் சொல்ல விரும்புவதே இல்லை. சந்தானம் என்ற பெயரில் வாசம் இருப்பது போல் அவரிடம் நிறைய பாசமும் இருக்கிறது. அதுதான் அவரை உயர்த்தி வருகிறது. காமெடியனாலும் கதாநாயகனாலும் இனி நான் தான் என மற்ற ஹீரோக்களுக்கு சந்தானம் சவால் விடுவதுபோல் இருக்கிறது இந்த வருடம்.

எழுச்சிக்கு பின் வருவாரா.? தேவையே இல்லை… ஆனாலும் ரஜினியை அழைக்கும் தங்கர் பச்சான்

எழுச்சிக்கு பின் வருவாரா.? தேவையே இல்லை… ஆனாலும் ரஜினியை அழைக்கும் தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth thangar bachanநான் ஒரு நாளும் என்னை முதல்வராக நினைக்கவில்லை.. கட்சி தலைவராக பதவியேற்பேன்.

ஆட்சியில் அமர மாட்டேன். ஆட்சி மாற்றம் உருவாகனும். மக்களிடையே அரசியல் மாற்றத்திற்கான எழுச்சி உருவாக வேண்டும்.

அப்போது அரசியல் களத்துக்கு வருவேன்.. என ரஜினிகாந்த் இன்று காலை அறிவித்தார்.

இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான தங்கர் பச்சான் கூறியதாவது…

அரசியல் தொழிலாகிவிட்ட இக்காலத்தில் ரஜினி கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
அவர் களத்தில் இறங்கினால் மட்டுமே அந்த மாற்றம் உருவாகும்!

மாற்றம் உருவான பின் களத்திற்கு வருவேன் எனச் சொன்னால் மக்களுக்கு அவர் தேவையே இல்லை!

கட்டாயம் அவர் களம் இறங்குவார்! ரஜினி அவர்களை வரவேற்கிறேன்!

என தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஆஸ்கர் விருது வென்ற நடிகர் டாம் ஹெங்ஸ் தவிப்பு

கொரோனா பாதிப்பால் ஆஸ்கர் விருது வென்ற நடிகர் டாம் ஹெங்ஸ் தவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tom hanksஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹெங்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்களின் சினிமா பணி தொடர்பாக இருவரும் ஆஸ்திரேலியா சென்ற போது கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே தம்பதியர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக டாம் ஹெங்ஸ் உறுதி செய்துள்ளார்.

அரசியல் மாற்றம் இப்போ இல்லேனா எப்பவுமே இல்ல..; கஸ்தூரி போட்ட ‘ரஜினி’ வெடி

அரசியல் மாற்றம் இப்போ இல்லேனா எப்பவுமே இல்ல..; கஸ்தூரி போட்ட ‘ரஜினி’ வெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini kasthuriஇன்று மார்ச் 12ஆம் தேதி ரஜினிகாந்த் 3 அரசியல் திட்டம் குறித்து பேசினார்.

ரஜினி பேச்சுக்கு சீமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரியும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.்ஒரே வார்த்தையோடு முடித்து கொண்டுள்ளார்.

அதில், “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது நிகழவில்லை எனில் எப்போதுமே நிகழாது -ரஜினிகாந்த் அதிரடி என்று குறிப்பிட்டு

“போடுறாவெடிய ” என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.

ரஜினியை பாராட்டி சொன்னாரா? கிண்டல் அடித்தாரா? என்பது கஸ்தூரிக்கே வெளிச்சம்.

மார்ச் 12 இன்றும் ஐடி ரெய்டு.; மாஸ்டர் விஜய்க்கு தொடரும் டார்ச்சர்..!

மார்ச் 12 இன்றும் ஐடி ரெய்டு.; மாஸ்டர் விஜய்க்கு தொடரும் டார்ச்சர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘பிகில்’.

இந்த படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்புகள் குறித்தும், கடந்த பிப்., 5ல், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ்., வீடு மற்றும் தியேட்டர்களிலும், இப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மூவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.

இரு தினங்களுக்கு முன் ‛மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மார்ச் 12 விஜய்யின் பனையூர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows