‘துணிவு’ பாக்ஸ் ஆபிஸ் நான்காவது நாள் வசூல் அப்டேட்…

‘துணிவு’ பாக்ஸ் ஆபிஸ் நான்காவது நாள் வசூல் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.

இப்படத்தில் மஞ்சு வாரியர், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 11 அன்று பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்குதிரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

‘துணிவு’ பாக்ஸ் வசூல் 4வது நாளில் வெற்றிகரமாக ரூ.110 கோடியை வசூலித்துள்ளது.

‘துணிவு’ திரைப்படம் அஜித்தின் 6வது படமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

‘Thunivu’ box office Fourth day collection

‘பொன்னியின் செல்வனை தொடர்ந்து சபரிமலையிலும் இணைந்த ஜெயராம் – ஜெயம் ரவி

‘பொன்னியின் செல்வனை தொடர்ந்து சபரிமலையிலும் இணைந்த ஜெயராம் – ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இந்த மாதத்தில் ஐயப்பனை தரிசிக்க 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை பயணத்தை பக்தர்கள் மேற்கொள்வர்.

ஜெயராம் - ஜெயம் ரவி

தென்னிந்திய திரை பிரபலங்களும் தற்போது சபரிமலை யாத்திரை பயணம் செய்து வருகின்றனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் ‘துணிவு’ பட இயக்குனர் வினோத் சபரிமலை பயணம் மேற்கொண்டார். இந்த செய்தியை நம் FILMISTREET இணையதளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று நடிகர்கள் ஜெயராம், ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சபரிமலை யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெயராம் - ஜெயம் ரவி

தற்போது அவர்களது புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயராம் - ஜெயம் ரவி

Jayaram – Jayam Ravi going Sabarimalai temple

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் அப்டேட்..!

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் அப்டேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக படம் ‘எஃப்ஐஆர்’.

இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபோ மோனிகா, கௌரவ் நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அஸ்வத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிருமி புகழ் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ல் வெளியாகியது.

இப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்தால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைத்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘எஃப்ஐஆர் 2’ விரைவில் தொடங்குவதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Vishnu Vishal to begin ‘FIR 2’ soon

கமல்ஹாசனின் கடிதத்தை பார்த்து திகைத்துப் போனா ‘காந்தாரா’ நடிகர்..!!??

கமல்ஹாசனின் கடிதத்தை பார்த்து திகைத்துப் போனா ‘காந்தாரா’ நடிகர்..!!??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரிஷப் ஷெட்டியின் சொந்த இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘காந்தாரா’ 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.

கன்னடப் படம் பல இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடிக்கு மேல் சம்பாதித்தது. ‘காந்தாரா’ சமீபத்தில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் பிரிவுகளுக்கான 2 ஆஸ்கார் 2023 தகுதிகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது ரிஷப் ஷெட்டிக்கு ‘காந்தாரா’ படத்தில் நடித்ததையும், படத்தின் கதையையும் பாராட்டி அவருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் கடிதத்தில், ‘காந்தாரா’ படம் பேசப்படாத துணை உரைகளில் சிறந்தவற்றை பட்டியலிட்டுள்ளார் மற்றும் ரிஷப் ஷெட்டி தனது அடுத்த படத்தில் தனது சொந்த சாதனைகளை முறியடிக்க கமல்ஹாசன் வாழ்த்தி உள்ளார்.

கமல்ஹாசனின் பாராட்டுக் கடிதத்தின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் லெஜண்டிலிருந்து இதுபோன்ற ஒரு அழகான செய்தியைப் பெறுவதற்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. கமல் சார் அளித்த இந்த ஆச்சரியப் பரிசைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன். இது விலைமதிப்பற்றதற்கு நன்றி என கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

‘Kantara’ actor was shocked to see Kamal Haasan’s letter

விஜய்யின் ‘வாரிசு’ பாக்ஸ் ஆபிஸ் மூன்றாவது நாள் வசூல் அப்டேட்…

விஜய்யின் ‘வாரிசு’ பாக்ஸ் ஆபிஸ் மூன்றாவது நாள் வசூல் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘வாரிசு’.

இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

ஜனவரி 11 அன்று தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியது.

மேலும் அனைத்து தலைமுறை பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் என குடும்ப நாடகம் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படம் மூன்றாம் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைத் தாண்டியது, மேலும் படத்தின் உலகளாவிய வசூல் 3-வது நாளுக்குப் பிறகு சுமார் ரூ.103 கோடியாக உள்ளது.

இந்தச் சாதனையின் மூலம் 100 கோடியைத் தாண்டிய விஜய்யின் 10வது படமாக ‘வாரிசு’ உருவாகியுள்ளது.

‘Varisu’ box office three day collection

நாடோடி மன்னன் ஆக மாறி வரும் ‘வாத்தி’.; 2nd சிங்கிள் ட்ராக் ரிலீஸ் அறிவிப்பு

நாடோடி மன்னன் ஆக மாறி வரும் ‘வாத்தி’.; 2nd சிங்கிள் ட்ராக் ரிலீஸ் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி என்பவர் இயக்கத்தில் ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும், ரிலீஸுக்குத் தள்ளப்படும் என்றும் தெரிகிறது.

தனுஷ் எழுதிய ‘வாத்தி’ படத்தின் முதல் பாடலான ‘வா.. வாத்தி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நாடோடி மன்னன் ஆக மாறி வரும் ‘வாத்தி’, 2nd சிங்கிள் ஜனவரி 17-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்தி

Dhanush’s ‘Vaathi’ to get a new release date

More Articles
Follows