தல-தளபதி இருவரது கணக்கையும் சரி செய்த அனிருத்

தல-தளபதி இருவரது கணக்கையும் சரி செய்த அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith-vijayஅஜித் நடித்த வேதாளம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் மிகப்பெரிய ஹிட்டடிக்க, விவேகம் படத்திற்கு அனிருத்தையே ஒப்பந்தம் செய்தார் அஜித்.

இதன் மூலம் அஜித்துடன் இரண்டு படங்களில் பணிபுரிந்துவிட்டார்.

ஆனால் விஜய்யுடன் கத்தி படத்தில் மட்டுமே அனிருத் பணிபுரிந்திருந்தார்.

இந்நிலையில் ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள விஜய்62 படத்திற்கு தற்போது அனிருத் இசையமைப்பது உறுதியாகிவிட்டதாம்.

இதன் மூலம் விஜய் கணக்கையும் சரி செய்துவிட்டார் அனிருத்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதற்காக வருகிற செப்டம்பர் மாதம் அமெரிக்க செல்கிறார் அனிருத்.

Anirudh composing music for Vijay 62 directed by AR Murugadoss

சூட்டிங் நடத்தினா டிஸ்கண்ட் தர்றோம்; தமிழ் சினிமாவை அழைக்கும் மொரிஷியஸ்

சூட்டிங் நடத்தினா டிஸ்கண்ட் தர்றோம்; தமிழ் சினிமாவை அழைக்கும் மொரிஷியஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mauritius country giving discount for Tamil movie shootingMauritius Film Developement Corporation மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்வாகிகளுக்கு இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் மொரிஷியஸ் பிலிம் டெவெலப்மென்ட் கார்பரேஷனில் இருந்து அரசு நிர்வாகிகள் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மொரிஷியஸ் அரசு நிர்வாகிகள் தமிழ் திரைப்படங்களின் படபிடிப்பை மொரிஷியசில் நடத்தினால் 49% சலுகை கொடுப்பதாகவும், இதை பயன்படுத்திக்கொண்டு மொரிஷியசல் படபிடிப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இந்த நல்ல திட்டத்தை வரவேற்பதாகவும், அனைத்து தயாரிப்பாளர்களிடமும் இதை பற்றி கலந்து ஆலோசனை செய்து இதை பற்றி முடிவெடுக்கலாம் என்றும் கூறினர்.

Mauritius country giving discount for Tamil movie shooting

திருப்பதியில் அஜித்துக்கு சாமி தரிசனம்; ரசிகர்களுக்கு தல தரிசனம்

திருப்பதியில் அஜித்துக்கு சாமி தரிசனம்; ரசிகர்களுக்கு தல தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith thirupathiசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் விவேகம்.

இதன் சூட்டிங் கடந்த சில மாதங்களாக பல்கேரியாவில் நாட்டில் நடைபெற்று வந்தது.

தற்போது சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அஜித் தன் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற அஜித், இன்று காலை நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அஜித்தை கண்ட அவரது ரசிகர்கள், அவருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Acot Ajith visited Thirupathi temple at today

இனி நடிக்கக்கூடாது என நினைத்தேன்.. பிரியா ஆனந்த் முடிவு

இனி நடிக்கக்கூடாது என நினைத்தேன்.. பிரியா ஆனந்த் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priya anandகூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தாயரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நாயகன் அசோக் செல்வன், நாயகி ப்ரியா ஆனந்த், இயக்குநர் ஞானவேல், எடிட்டர் லியோ ஜான் பால், ஒளிப்பதிவாளர் பிரமோத், கலை இயக்குநர் கதிர், சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் நாயகி ப்ரியா ஆனந்த் பேசியது…

நான் இந்த படத்தின் கதையை கேட்கும் முன் எந்த படத்திலும் இனி நடிக்க கூடாது என்பது போல் என்னுடைய மனநிலை இருந்தது.

கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவ்வளவு பாஸிடிவான கதை இது.

மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம்.

நிவாஸ் கே பிரசன்னா தான் படத்துக்கு இசை என்றதும் எனக்கு நல்ல காதல் பாடல் கிடைக்கும் என்று எதிர் பார்த்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததை விட மிக சிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது.

விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியது…

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் இதுவரை யாரும் பேசாத மிடில் பெஞ்சர்ஸ் வர்கத்தை பற்றி பேசும் படமாகும். இந்த படத்தின் கதை கேட்டதும் நிச்சயம் இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம்.

பல பிரச்சனைகளை தாண்டி, தடைகளை தாண்டி கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் வருகிற ஜூலை 28 ஆம் வெளியாக உள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள் தான் படத்தை வெளியிட சண்டை போடுகிறார்கள்.

மக்கள் யாரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க தயாராக இல்லை. “ மக்களுக்காக தான் சினிமா, சினிமாவுக்காக மக்கள் அல்ல “ என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு..

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தை பற்றி நடிகர் அசோக் செல்வன்…

கூட்டத்தில் ஒருத்தன் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். நான் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா தான்.

ஆம், என்னுடைய அக்காவின் திருமணத்தை முன்னிட்டு நான் நிவாஸ் கே பிரசன்னாவுக்கு பத்திரிக்கை வைக்க சென்றிருந்தேன்.

அப்போது அவரிடம் அவர் என்ன? என்ன ? படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு இருக்கிறார் என்று கேட்டேன் அப்போது இந்த படத்தை பற்றியும் இந்த படத்தின் கதையை பற்றியும் என்னிடம் கூறினார்.

கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதை சுருக்கத்தை கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது.

என்னென்றால் நானும் இப்படத்தின் கதையில் வருவது போல் ” மிடில் பெஞ்சர்” தான். கூட்டத்தில் ஒருத்தன் கதைக்கு கதாநாயகன் முடிவாகவில்லை என்பதை தெரிந்து கொண்டு நான் இயக்குநர் ஞானவேல் அவர்களை சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன்.

அவரை சந்தித்து நான் ” கூட்டத்தில் ஒருத்தன் ” கதையை படித்தேன் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நானும் ஒரு மிடில் பெஞ்சர் தான். என்னோடு ஒத்துபோகும் கதையில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றேன்.

இயக்குநர் ஞானவேல் நான் இந்த கதையில் நடிப்பதற்கு சம்மதித்த பிறகு இந்த கதைக்காக நான் வேற மாதிரி மாற வேண்டும் என்று கூறி என்னை முற்றிலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மாற்றினார். கூட்டத்தில் ஒருத்தன் முதல் பார்வை போஸ்டரை பார்த்தும் என்னை தந்தை அதில் இருப்பது நான் தான் என்று கண்டுபிடிக்கவில்லை.

இப்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் கூட்டத்தில் ஒருத்தன் மிகவும் பாசிடிவான திரைப்படமாக இருக்கும். எல்லோருக்குள்ளும் ஒரு நல்என்னத்தை விதைக்கும்.

ப்ரியா ஆனந்துக்கு இந்த படத்தில் முதல் பெஞ்ச் மாணவி வேடம் அந்த வேடத்துக்கு அவர் சரியாக பொருந்தியுள்ளார்.

அவர் எப்போதும் செட்டில் கலகலப்பாக இருப்பார். அவரோடு இனைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்” என்றார் அசோக் செல்வன்.

Priya Anand speech at Kootathil Oruthan

kootathil oruthan press meet

எந்த சீனுக்கும் டூப் போட முடியாது… சிவாவிடம் அஜித் கண்டிசன்

எந்த சீனுக்கும் டூப் போட முடியாது… சிவாவிடம் அஜித் கண்டிசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith siva vivegamசிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விவேகம்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் விரைவில் வெளியாகவுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் பற்றி டைரக்டர் சிவா கூறியதாவது…

‘விவேகம் கதை தமிழ் சினிமாவுக்கு புதுசு.

இது இண்டர்நேஷ்னல் லெவலில் நடக்கும் ஸ்பை திரில்லர் கதை.

படத்தில் எமோஷன் இருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது.

ஒரு பயங்கர பைக் சண்டைக் காட்சியை வெளிநாட்டு ஸ்டன்ட் இயக்குனர் கலோயன் வோடனிச்சரோவ் அமைத்திருந்தார்.

அதற்கு டூப் போடலாம் என அஜித்திடம் சொன்னேன்.

ஆனால் அவரோ எந்த காட்சிக்கும் டூப் போடமாட்டேன் என மறுத்துவிட்டார்.

அஜித்தின் சிக்ஸ்பேக் உடல் கிராபிக்ஸ் என சிலர் கிண்டல் செய்கின்றனர்.

அவர்களுக்கு பதில் அளித்து கொண்டிருந்தால் நம் வேலைதான் கெடும்.

உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், அங்கீகாரமும் படம் ரிலீஸ் ஆனவுடன் தெரியவரும்” என்றார்.

Ajith taken risk at fight scenes of Vivegam

என்னை கலாய்க்கிற ஐடியா இருக்கா..? அப்துலிடம் விஜய் குறும்பு

என்னை கலாய்க்கிற ஐடியா இருக்கா..? அப்துலிடம் விஜய் குறும்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay made fun of YouTube fame Abdul at Mersal shootingயூடியூபில் வெப் சீரியஸ் பார்ப்பவர்கள் அப்துலை அறிந்திருப்பார்கள்.

’அதே கண்கள்’ படத்தில் அறிமுகமான இவர், தற்போது விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.

அப்துல் உடன் யு-டியூப் பணியாற்றிய செய்த விஷ்ணுதான் தற்போது மெர்சல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தன் மெர்சல் அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துக் கொண்டார் அப்துல்.

’நான் செய்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என விஜய் ஒருமுறை கேட்டார்.

எனவே விஜய் சம்பந்தப்பட்ட வீடியோவை காட்டினேன்.

அதை பார்த்த விஜய் ’ ஓ என்னை இப்படியெல்லாம் வைச்சு வீடியோ பண்ணியிருக்கீங்களா? எனக் கேட்டார்.

ஐயோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க அண்ணா என சொன்னேன்.

ஓ அப்போ அப்படி ஒரு ஐடியா எல்லாம் இருக்கா என குறும்பாக சொன்னார்.’ என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Vijay made fun of YouTube fame Abdul at Mersal shooting

More Articles
Follows