30 நாட்கள்அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா “

30 நாட்கள்அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

andrea in kaaபொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ” கா ” என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும்.

ஒளிப்பதிவு – அறிவழகன்

இசை – அம்ரிஷ்

தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்

விறு விறுப்பான படப்பிடிப்பிற்கு மத்தியில் இயக்குனர் நாஞ்சில் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை …

முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம் நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.

30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும் எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம் என்கிறார் இயக்குனர் நாஞ்சில்.

நயன்தாரா – ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

நயன்தாரா – ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balajiஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஆச்சரியத்தக்க அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் குறித்த உடனடி பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சம்பிரதாயமான பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 29) துவங்கியது. முதல் கட்டப் பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணைய இருக்கிறார்.

‘அவள்’ படத்தின் இசைக்காக வெகுவாக பாராட்டப்பட்ட இசையமைப்பாளரும், தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தின் இசையமைப்பாளருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்கு இசையமைக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படப்புகழ் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்க, திவ்யா நாகராஜன் மற்றும் அனுவர்த்தன் ஆகியோர் ஆடையலங்காரத்தை கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விஜயகுமார்.

நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் கதை, திரைக்கதை. வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்குகிறார். ‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, மற்றும் ‘பப்பி’ ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து டாக்டர் ஐசரி கே.கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக இப்படத்தைத் தயாரித்து வருகிறார்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

renjith jeyakodi‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்து, பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படத்தின் படப்பிப்பு இன்று (நவம்பர் 28) துவங்கியது. தற்காலிகமாக தயாரிப்பு எண் 1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்க, பிந்து மாதவி, தர்ஷணா பனிக் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

Third Eye Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் தேவராஜூலு இப்படம் குறித்து கூறியதாவது…
“இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனித்தன்மை வாய்ந்த கதைகளை தேர்வு செய்து, விறுவிறுப்பான படங்களாகக் கொடுப்பதில் வல்லவர். அவரது இயக்கத்தில் நான் படம் தயாரிக்க இதுவே முதல் காரணம். மேலும் தன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய களத்தில் கட்டமைக்கபட்ட கதை ஒன்றை விவரித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் பட்டது. பெண்களை மையப் படுத்திய இந்தப் படம் முழுக்க முழுக்க, திரில்லர் வகையைச் சேர்நதது. ரசிகர்களை இருக்கை நுனிக்கே இழுத்து வந்து விடும் காட்சிகள் நிரம்பவே உண்டு. கதையை அவர் சொன்ன விதம், விஷுவல் காட்சிகளுடன் முழுப் படத்தையும் எப்போது பார்ப்போம் என்ற ஆவலை என்னுள் ஏற்படுத்தியது. பிந்து மாதவி மற்றும் தர்ஷணா பனிக் இருவரும் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தான் உருவாக்கிய பாத்திரங்களுக்குப் பொறுத்தமான நடிக நடிகையரை சரியாகத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புவதுடன், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அனுபவத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றார்.

ரஜினி காலடியில் உங்க ரெக்கார்டு; தல-தளபதி ரசிகர்களை கிழித்த தலைவர் ரசிகர்கள்

ரஜினி காலடியில் உங்க ரெக்கார்டு; தல-தளபதி ரசிகர்களை கிழித்த தலைவர் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar Chumma Kizhi song record Most viewed Tamil lyric Video in 24 hoursமுன்பெல்லாம் ஒரு படம் ரிலீசாகி எத்தனை நாட்கள் ஓடியது, எவ்வளவு வசூல் என்பதை எல்லாம் வைத்து தான் ரசிகர்களுக்குள் போட்டியிருக்கும்.

ஆனால் தற்போது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அது 100 நாட்கள் கூட ஓடுவதில்லை.

எனவே ரசிகர்களின் கவனம் யூடிப் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு பட டீசரோ, டிரைலரோ வெளியானால் எத்தனை லைக்ஸ், அதுவும் குறைந்த நேரத்தில் எத்தனை? என்பதை கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ரஜினியின் தர்பார் படத்தில் இருந்து சும்மா கிழி என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியானது.

இது வெளியாகி 24 மணி நேரத்தில் இந்த பாடல் லிரிக் வீடியோவை மட்டும் 1 கோடி அதிகமானோர் பார்த்துள்ளனர்.  இந்த வீடியோ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தல அஜித், தளபதி விஜய் ஆகியோரின் முந்தைய சாதனைகளை நொறுக்கி அடித்துள்ளார் தலைவர் ரஜினிகாந்த்.

ரஜினி ரசிகர்கள் பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களே அதிகம் என்பதால் யூடிப்பில் அவர்கள் சாதனை நிகழ்த்த முடியாது என விஜய், அஜித் அடிக்கடி கூறி வந்தனர். ஆனால் எங்கிட்ட மோதாதே என்ற பாணியில் ரஜினி ரசிகர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிக பேர்களால் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை சும்மா கிழி என்ற பாடல் பெற்றுள்ளது.

இந்த சாதனையை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த சாதனையை தர்பார் பட தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#RecordBreakingChummakizhi #ChummakizhiMostViewedSong #RecordBreakingChummaKizhi #ChummaKizhiMostViewedSong

Rajini Chumma Kizhi record Highest Views South Indian Song in 24 hours

 

https://twitter.com/LycaProductions/status/1200060661734105089

பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது!

பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bobby simha and vivekSRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு புதியபடத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபிசிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கன்டென்ட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா.மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார்.
ஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை சுனில்SK ஏற்றுள்ளார். பேட்டை, இறைவி போன்ற படங்களுக்கு எடிட்டராக இருந்து ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதும் பெற்றுள்ள எடிட்டர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டராக பொறுப்பேற்றுள்ளார். அழகான ஆடை வடிவமைப்பால் அசத்த இருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் நந்தினிNK.

படத்தின் மொத்த புரொடக்ஷன் விசயங்களையும் தன் பொறுப்பில் ஏற்றுள்ளார் நாகராஜ்RK . ஒரு படத்தின் பூஜையில் இருந்து ரிலீஸ் வரையில் பப்ளிசிட்டி மிக முக்கியம். அப்பொறுப்பை டூனிஜான் ஏற்றுள்ளார்.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படம் பெரும் பொருட்செலவில் சிறப்பாக எடுக்கப்பட இருக்கிறது.

மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் அனுஷ்கா & அபிராமி

மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் அனுஷ்கா & அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anushka and abirami கோலிவுட்டே ஆச்சரியப்படும் வகையில் நிறைய படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார் ஐசரி கணேஷ்.

இவரது தங்கை மகன் வருண் நடிக்கும் ஜோஷ்வா என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.

இதனையடுத்து ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறாராம் கௌதம். இந்த படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இதில் பெண்களை மையப்படுத்திய படம் என்பதால் நடிகை அனுஷ்கா நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறாராம்.

இதில் வில்லியாக பிக்பாஸ் பிரபலம் அபிராமியும் நடிக்கிறாராம்.

கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். இதேபோல் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் அபிராமி நடித்துள்ளார்.

இதில் துருவ நட்சத்திரம் படம் இன்னும் வெளியாகவில்லை.

More Articles
Follows