தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேரம் படத்தின் இயக்குனர் ஆனது முதல் அல்போன்ஸ் புத்திரனின் சினிமா நேரம் நன்றாகவே அமைந்தது.
இதனையடுத்து இவர் இயக்கிய பிரேமம் படம், கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் சக்கை போடு போட்டது.
தற்போது பிரேமம் என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் ஆகி வருகிறது.
இந்நிலையில் இவர் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாராம்.
அதில் “மெட்ரோ ரயில் திட்டத்தை கண்டித்து இவர் குறிப்பிட்டுள்ளாராம்.
மக்களின் அன்றாட தேவைக்கு சுத்தமான குடிநீர் இங்கு கிடைப்பதில்லை. அதுவே தற்போது அத்தியாவசிய தேவையாக உள்ளது.
இதனிடையில் ஆடம்பர மெட்ரோ ரயில் திட்டம் இப்போது அவசியமில்லை.” என்று தெரிவித்திருக்கிறாராம்.
இதனையறிந்த நெட்டீசன்கள் பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற சிலரோ இவரை கண்டித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.