தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய தலைநகர் புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டன.
அப்போது சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்சினை குறித்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துக்கு என் சந்தேகங்கள்
1 . ஏன் ஜிஎஸ்டியில், சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கின்றன?
2 . எப்படி சினிமாவும் சூதாட்டமும் ஒன்றாகும்?
3 . தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா? சீட்டாட்டம் ஆடினால் சினிமா எடுத்துவிட முடியுமா?
4 . தாயம் உருட்டும் நேரத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இரண்டுக்கும் ஒரே நேரம் முயற்சி போதுமா?
தமிழ் சினிமா துறையில் நீங்கள்தான் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகள். பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்ஜெட்டில் இருக்கும் இந்த தவறை குறித்து பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் செய்யும் பேச்சுவார்த்தை மொத்த திரைத்துறையை காப்பாற்றும்.
இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் அதில் குறிப்பிட்டுள்ளார்.