அஜித் ஸ்டைலில் பன்ச் பேசி சிக்ஸ் பேக் காட்டிய வலிமை வில்லன்

அஜித் ஸ்டைலில் பன்ச் பேசி சிக்ஸ் பேக் காட்டிய வலிமை வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kartikeyaவினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நாயகியாக காலா பட நாயகி ஹீமா குரோஷி நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் நடிக்கும் கலைஞர்கள் பற்றி தகவல்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை படக்குழு.

ஆனால் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பவர் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

தெலுங்கில் ஹிட்டான ஆர்.எக்ஸ் 100 என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.

தற்போது கொரோனா முழு அடைப்பு காரணமாக வலிமை பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த 2 மாத இடைவெளியில் வீட்டிலேயே ஒர்கவுட் செய்த தனது சிக்ஸ் பேக் படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

அத்துடன் அஜித் ஸ்டைலில் ஒரு பன்ச் டயலாக் போல ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“லாக் டவுன் நமது திட்டங்களை மாற்றியது. ஆனால் நமது குறிக்கோளை அதனால் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது உண்மையா? என்னதான் ஆச்சு..?

சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது உண்மையா? என்னதான் ஆச்சு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள போதிலும் கொரோனா பொது முடக்கத்தால் ரிலீசாகவில்லை.

நாளை மறுநாள் மே 29ஆம் தேதி சூர்யா தயாரித்துள்ள ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியாகிறது.

இதனிடையில் சூர்யாவுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் ‘GET WELL SOON SURIYA ANNA ‘ என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

சென்ற வாரம் வீட்டில் உள்ள ஜிம்மில் ஒர்கவுட் செய்து கொண்டிருந்தாராம் சூர்யா. அப்போது கையில் ஒரு சின்ன காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தான் சிலர் பெரிதுப்படுத்தி செய்தியாக பதிவிட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்கள் சூர்யா கைவசம் உள்ளது.

சூட்டிங்க்கு 20 பேர் பத்தாது.. 50 பேர் வேண்டும்…; அமைச்சரிடம் குஷ்பூ வேண்டுகோள்

சூட்டிங்க்கு 20 பேர் பத்தாது.. 50 பேர் வேண்டும்…; அமைச்சரிடம் குஷ்பூ வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress khushbooகொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இதனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை.

இதன் காரணமாக தினக்கூலி பணியாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக 20 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஆனால் 200 பேர் பணியாற்றும் இடத்தில் 20 பேரை கொண்டு பணியாற்ற முடியாது. குறைந்தது 50 சதவிகிதம் அல்லது 50 பேரை அனுமதிக்க வேண்டும் என்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளர் குஷ்புவும், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பு, இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சினிமா இல்லனா வெப் சீரிஸ்.. வடிவேலு எடுத்த அதிரடி முடிவு

சினிமா இல்லனா வெப் சீரிஸ்.. வடிவேலு எடுத்த அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vadiveluவடிவேலு இல்லாத சினிமா… உப்பு இல்லாத உணவாக மாறிவிட்டது.

அவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரின் காமெடி மற்றும் மீம்ஸ்களே என்றும் டிரெண்ட்டிங்கில் உள்ளது.

ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் வடிவேலு.

அப்போது ஏற்பட்ட சில கருத்து மோதல்களால் படத்திலிருந்து விலகினார் வடிவேலு.

இதனையடுத்து ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

மெர்சல், கத்தி சண்டை உள்ளிட்ட ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டினார்.

ஆனால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதால் புதிய படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.

இந்த நிலையில், வடிவேலுவை வெப் தொடரில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்காக ஆன்லைன் முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், வடிவேலுவுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடி தொடராக இது உருவாகவுள்ளதாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை படத்தில் கார்த்தி-ராஜ்கிரண்?

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை படத்தில் கார்த்தி-ராஜ்கிரண்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pasumpon Muthuramalinga Thevar biopic news updatesஇராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர்.

ஆன்மிகவாதியாகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கிய இவர் அக்டோபர் 30, 1908 பிறந்து அக்டோபர் 30, 1963 மரணமடைந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.

இவரது பிறந்த நாளை தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் தேவர் குருபூஜை விழா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றது.

இந்த நிலையில் தற்போது முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை ஒரு திரைப்படமாக உள்ளது.

தேசிய தலைவர் என்ற பெயரில் அதை படமாக தயாரிக்கவிருக்கிறாராம் ஜெ.எம்.பஷீர்.

இதில், ராஜ்கிரண், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் தயாரிப்பாளர் பஷீர் நடிக்கிறார்.

மறைந்த சிவாஜி கணேசன் அவர்களுக்கு ‘மேக்கப்’ போட்ட நடராஜன் என்பவர் தான் தேவர் கேரக்டருக்கும் மேக்கப் செய்யவுள்ளார்.

Pasumpon Muthuramalinga Thevar biopic news updates

நடிகைகளின் தொப்புள் இடையளவுக்கு மதிப்பெண்கள் போடும் ஓதேசி நாய்.. ஷான் ரோல்டனின் ஷாக் ட்வீட்

நடிகைகளின் தொப்புள் இடையளவுக்கு மதிப்பெண்கள் போடும் ஓதேசி நாய்.. ஷான் ரோல்டனின் ஷாக் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Sean Roldan slam Mediaகோலிவுட்டில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஷான் ரோல்டன்.

இவர் சதுரங்க வேட்டை, முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பவர் பாண்டி, விஐபி 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் இவரது இசையில் வெளியான மெஹந்தி சர்க்கஸ் மற்றும் தாராள பிரபு பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சற்று முன் அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரை இந்தளவு ஆவேசமாக பேச வைத்தது யார்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அதிலும் மோசமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். அது ஏனோ? என்பதுதான் தெரியவில்லை.

அவரின் 3 பதிவுகள் இதோ…

நடிகைகளின் தொப்புள் இடையளவுக்கு மதிப்பெண்கள் போடும் ஓதேசி நாய்களிடம் என் இசையைப்பற்றி பேச எனக்கு என்ன அவசியம் உள்ளது?

பேட்டி கொடக்கவில்லையென்றால் எதிர் பிரச்சாரம் செய்யும் புதிய டிரெண்ட் “மீடியா டெரரிசம்”.

என்னை வேண்டுமென்றே வாரிக்கொண்டே இருக்கும் ஒரு ஊடகம், என்னை அவர்களுக்கு பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். இதுதான் அக்மாரக் எச்சைத்தனம்.

Music composer Sean Roldan slam Media

More Articles
Follows