இந்திய சுதந்திர தினத்தில் ரிலீசாகுமா ‘வலிமை’..? அஜித் ரசிகர்கள் ஆர்வம்.!

இந்திய சுதந்திர தினத்தில் ரிலீசாகுமா ‘வலிமை’..? அஜித் ரசிகர்கள் ஆர்வம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார்.

இவர்களுடன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, பவல் நவகீதன், யோகி பாபு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடிகர் புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வரும் பிப்ரவரிக்குள் வலிமை படத்தை முடித்துவிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி விரைவில் வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவிற்கு படக்குழுவினர் செல்ல இருக்கிறார்களாம்.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி வலிமை ரிலீசாகும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அஜித்தின் சென்டிமெண்ட் நாளான வியாழக்கிழமையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajith’s Valimai gearing up for Independence Day release ?

சித்ரா தற்கொலை.. நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம்..; கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த போலீஸ்

சித்ரா தற்கொலை.. நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம்..; கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vj chithra husbandகடந்தாண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் சின்னத்திரை நடிகை விஜே சித்ரா.

எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுடன் விசாரணை நடத்தினர்.

அதன்படி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை டிசம்பர் 14ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஹேம்நாத்.

அவர் தன் மனுவில்…”சீரியல்களில் நடிக்கக் கூடாது எனவோ சித்ரா நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை

தனக்கும், சித்ராவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

எனவே தனக்கு ஜாமீன் வழங்க மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஹேமநாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது,

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில்… “சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதார். அதனால்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Police report on Chithra suicide case

பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா நடிக்கும் ஹாரர் த்ரில்லர் ‘கலியுகம்’

பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா நடிக்கும் ஹாரர் த்ரில்லர் ‘கலியுகம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaliyugamஇந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.

எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

‘கலியுகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார் பிரமோத் சுந்தர்.

இதில் பிரதான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். இந்தப் பூஜையில் அவருடன், படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர்.

இந்தப் பூஜை கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படக்குழுவினர் பங்கேற்றனர்.

இப்படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஹாரர் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகுகிறது.

முன்னோக்கிய கதைக்களம் என்பதால் கலை இயக்குநரின் பணி என்பது மிகவும் முக்கியமானது.

இதற்காக பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்து, இந்தப் படத்துக்கு அரங்குகளைப் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் கலை இயக்குநர் என்.சக்தி வெங்கட் ராஜ்.

இந்த அரங்குகள் பார்வையாளர்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

புதுமையான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில் முழுக்க இளம் படையே பணிபுரியவுள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்டு, வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யப் படக்குழு முடிவு செய்துள்ளது.

காட்சியமைப்புகள், திரைக்கதை, அரங்குகள் என அனைத்துமே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார் இயக்குநர் பிரமோத் சுந்தர்.

‘கலியுகம்’ படக்குழுவினர் விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: ஆர்.கே இண்டர்நேஷனல்
தயாரிப்பாளர்: ப்ரைம் சினிமாஸ் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா
இயக்குநர்: பிரமோத் சுந்தர்
ஒளிப்பதிவாளர்: ராம்சரண்
கலை இயக்குநர்: சக்தி வெங்கட் ராஜ். என்
எடிட்டர் – நிமல் நாசீர்
ஆடை வடிவமைப்பாளர் – ப்ரவீன் ராஜா
ஒலி வடிவமைப்பு – கெளரி சங்கர் மற்றும் ஜெய்சன் ஜோஷ்
பி.ஆர்.ஓ – யுவராஜ்.

Actress Shraddha Srinath next film is titled Kaliyugam

மலையாள நடிகர்கள் ஜித்தன் ரமேஷிடம் கற்றுக்கொள்ளனும்..; பிக்பாஸில் அவர் அவராக இல்லை.. – இயக்குநர் அபிலாஷ்

மலையாள நடிகர்கள் ஜித்தன் ரமேஷிடம் கற்றுக்கொள்ளனும்..; பிக்பாஸில் அவர் அவராக இல்லை.. – இயக்குநர் அபிலாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jithan Rameshஜித்தன் ரமேஷ்.. யார் இவர்? என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் எல்லாம் அள்ளிக்கவேண்டிய தேவையில்லை.

தனது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமாகி இருந்த இவர், தற்போது நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் அறிமுகமான செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன், நடிகர் ஜீவாவின் சகோதரர், அவ்வளவு ஏன் ஜித்தன் என்கிற படம் மூலமே அடையாளப்பட்டு வந்த ரமேஷ், இனி பிக்பாஸ் ஜித்தன் ரமேஷ் ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.

ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்தும் அவரது அறியப்படாத பக்கங்கள் குறித்தும் மலையாள திரையுலகில் பணியாற்றியவரும் தமிழில் 14 விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கியவருமான இயக்குநர் அபிலாஷ் சில ஆச்சர்ய தகவல்களை கூறுகிறார்.

“கடந்த 13 வருடங்களுக்கு முன் நடிகர் ஜீவாவுக்கு கதை சொல்லி வாய்ப்பு பெற்றுவிட வேண்டும் என்கிற உந்துதலில் எப்படியோ சென்னைக்கு வந்து, சூப்பர்குட் பிலிம்ஸ் அலுவலகத்திற்கும் சென்றுவிட்டேன்..

ஆனால் ஜீவா அவுட்டோர் படப்பிடிப்பு சென்றிருந்தார். அப்போதுதான் யதேச்சையாக ஜித்தன் ரமேஷை அங்கே பார்த்தேன்..

எனது கதைக்குப் பொருத்தமான நபராக அவர் இருப்பார் எனத் தோன்றியது. அந்த கதை பற்றி அவரிடம் கூற அனுமதி கேட்டேன்.. என்னிடம் பொறுமையாகக் கதை கேட்ட அவர், இந்தப்படத்திற்கு பட்ஜெட் அதிகம் தேவைப்படுகிறது..

அதனால் சரியான நேரத்தில் இதை படமாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அப்போது ஆரம்பித்த எங்கள் நட்பு இப்போதுவரை தொய்வில்லாமல் தொடர்கிறது.

சில வருடங்களுக்கு முன், எனது நண்பன் இயக்குநர் ஷிபு பிரபாகரின் மலையாளப் படத்தில் ஒரு போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகர் வந்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கூறினார்.

அதிலும் ஜித்தன் ரமேஷ் வந்தால் சூப்பராக இருக்கும் என்றபோது, அவரை அழைத்தேன். அவர் அப்போது ஜில்லா படத்தின் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருந்த சமயம் என்றாலும் பத்துநாட்கள் எனக்காக, என் நட்பிற்காக வந்து நடித்துக் கொடுத்தார்.

படம் முடியும் வேளையில் அதன் இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னிடம், “தமிழ் நடிகர்கள் என்றால் மண்ணில் வாழ்பவர்கள் அற்புதமான மனம் கொண்டவர்கள் நம்முடைய மலையாள நடிகர்கள் ஜித்தனைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்றனர்.

அந்த அளவுக்கு, மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன் என்கிற தலைக்கனம் இல்லாமல், ஒரு சாதாரண நடிகனாக, நண்பனாக வந்து, அந்த பத்து நாட்களை திருவிழாபோல கொண்டாடச் செய்தார் ஜித்தன் ரமேஷ்.

அந்தப்படத்தில் பணியாற்றியபோது அவருக்கு படப்பிடிப்பின்போது உதவியாளாராக பணிபுரிந்தார் தாசன் என்கிற ஏழ்மையான இளைஞன் ஒருவர்.

அவர் தன்னிடம் இருந்த இரண்டு செட் துணிகளையே மாற்றி மாற்றி அணிந்து வந்ததை கவனித்த ஜித்தன் ரமேஷ், படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது, அந்த இளைஞனுக்கு நல்ல உடைகள், விலை உயர்ந்த ஷூக்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்ததுடன் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்துச் சென்றார்.

ஜித்தன் ரமேஷை பொருத்தவரை நகைச்சுவையில் எப்போதுமே அவர் அல்டிமேட்.. எப்போதுமே தன்னைச் சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதை ஏனோ அதிக அளவில் அவர் வெளிப்படுத்தவில்லை.. ஒருவேளை அங்குள்ள சூழல் கூட காரணமாக இருந்திருக்கலாம். நான் பார்த்த வரையில், பழகிய வகையில், அவர் ரொம்பவே பாசிட்டிவ் ஆனவர்.. கருணை குணம் அதிகம் கொண்டவர்..

நான் சொன்ன கதையில் நடிக்க அவர் இப்போது தயாராக இருக்கிறார்.

தற்போது ஜீவாவின் படப்பிடிப்பைக் கவனித்துக்கொள்வதற்காக கோவையில் இருக்கும் ஜித்தன் ரமேஷ், இந்த வருடம் இந்தப் படத்தை துவங்கி விடலாம் என நம்பிக்கை அளித்துள்ளார்” என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.

Director Abilash praises Jithan Ramesh

ரூ 200 கோடி வசூலித்த ‘மாஸ்டர்’..; கேரளாவை அடுத்து கர்நாடகாவிலும் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

ரூ 200 கோடி வசூலித்த ‘மாஸ்டர்’..; கேரளாவை அடுத்து கர்நாடகாவிலும் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay statue karnatakaவிஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ல் ரிலீசானது.

இந்த படம் வசூல் ரீதியாக உலகளவில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

தற்போது வரை உலக அளவில் ரூ 200 கோடி வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தைப் போல விஜய்க்கு கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவிலும் ரசிகர்கள் உள்ளனர்.

JD Vs KD டபுள் மாஸ்..; மாஸ்டர் விமர்சனம்

இந்த நிலையில் முதன் முறையாக கர்நாடகாவில் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர்.

அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே விஜய்க்கு கேரளாவில் சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay’s Master Joins 200 Crore Club

‘பிக்பாஸ்’ புகழ் பானு ஸ்ரீ ரெட்டியின் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’

‘பிக்பாஸ்’ புகழ் பானு ஸ்ரீ ரெட்டியின் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gate movieஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.

2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானு ஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆதி நடிக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பியார் பிரேமா காதல் என்கிற ஹிட் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மணி குமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். இக்கு, கிகோரி ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர் பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை.

அதை மையப் படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதன் படப் பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது.

விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.

Bigg Boss fame Bhanu Sree Reddy’s next film is titled Gate

More Articles
Follows