‘அண்ணாத்த & மாஸ்டர்’ பட வசூலை அலற விட்ட ‘வலிமை’

‘அண்ணாத்த & மாஸ்டர்’ பட வசூலை அலற விட்ட ‘வலிமை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஃஸ் கிங் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

இவரின் படங்களின் வசூல் சாதனைகளை இவரே அடுத்தடுத்த படங்கள் முறியடித்து வருவது வழக்கம்.

இதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரூ 100 கோடி வரை சம்பளம் கொடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

ரஜினி நடித்து கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. கடந்தாண்டு 201ல் நவம்பர் 4ல் தீபாவளி தினத்தன்று வெளியானது. இத்துடன் விஷால் ஆர்யா நடித்த எனிமி திரைப்படமும் ரிலீசானது.

அண்ணாத்த வெளியான நாளன்று முதல்நாளில் மட்டும் ரூ 36 கோடி வசூலித்தாக செய்திகள் வெளியானது.

இதனால் ரஜினி ரசிகர்கள் வசூல் வேட்டையன் என்றுமே தலைவர் ரஜினி தான் என்று கொண்டாடி தீர்த்தனர்.

எனவே விஜய் அஜித் நடித்த படங்கள் ரீலீசாகும்போது அதை ரஜினி பட வசூலுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று அஜித் நடித்த வலிமை திரைப்படம் பெரும் வெளியானது. கிட்டத்தட்ட 2 வருட இடைவெளிக்கு பின்னர் அஜித்தின் படம் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்தது.

தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் காலை 4 மணிக்கே ‘வலிமை’ திரையிடப்பட்டது. ஒரு டிக்கெட் விலை ரூ 500க்கு குறைவாக கிடைக்கவில்லை. ரூ. 1000 1200 வரையும் விற்கப்பட்டது என்பதே உண்மை.

தமிழகத்தில் மொத்தம் 950 தியேட்டர்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட 900 தியேட்டர்களில் படம் வெளியானதாக கூறப்படுகிறது.

சென்னையில் மட்டுமே ரூ.1.80 கோடி வரை வசூலித்து தமிழகளவில் மொத்தம் ரூ 36 கோடி வரை வசூலித்துள்ளதாம் ‘வலிமை’.

மேலும் ரஜினியின் ‘அண்ணாத்த’ (ரூ.35 கோடி) மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ (ரூ. 34 கோடி) ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை ‘வலிமை’ முறியடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனால் ரஜினி விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அஜித் ரசிகர்கள் செம ஹாப்பியாக உள்ளனர்.

அதே சமயம் ‘வலிமை’ பட வசூலை படத்தயாரிப்பு குழு உறுதிப்படுத்தவில்லை.

2021ல் தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படத்துக்கு போட்டியாக ‘எனிமி’ படமும் பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ படத்துக்கு போட்டியாக சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் வெளியானது.

ஆனால் ‘வலிமை’ படத்துக்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை. மேலும் ‘வலிமை’ படம் விசேஷ நாளில் வெளியாகவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

AjithKumar’s #Valimai takes All-Time No.1 Day 1 Opening in Tamil Nadu

நீ திறமைசாலி.. உன்னை சீக்கிரம் மீட் பண்றேன் கண்ணா..; ரசிகரிடம் உறுதியளித்த ரஜினி

நீ திறமைசாலி.. உன்னை சீக்கிரம் மீட் பண்றேன் கண்ணா..; ரசிகரிடம் உறுதியளித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தை சேர்ந்த (களிமண்) மண்பாண்ட தொழில் செய்து வருபவர் ரஞ்சித்.

இவரை ரஜினி ரஞ்சித் என்று சொன்னால்தான் அந்த பகுதி மக்களுக்கே இவரை தெரிகிறது.

இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தன் பெயரை ரஜினி ரஞ்சித் என வைத்துக் கொண்டார். இவரை பார்த்தாலே இவர் ரஜினி ரசிகர்தான் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

நெற்றியில் விபூதி பட்டை… கழுத்தில் ருத்திராட்ச மாலை, ரஜினி ஸ்டைலில் உடைகள், தலைவரின் 80s சிகை அலங்காரம் என அச்சு அசலாக ரஜினியாகவே வலம் வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த ரஜினி ரஞ்சித் சிறுவயதிலிருந்தே ரஜினியின் படங்களை வரைவது வழக்கமாக கொண்டவர்.

தற்போது கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்.

அந்த மண்பாண்டத் தொழிலில் ரஜினியின் உருவ சிலையை வடிவமைத்து ரஜினி அவர்களுக்கு அனுப்பி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் படையப்பா சிலையை வடிவமைத்து அதை ரஜினியிடமே நேரில் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி சிலையை பரிசளிக்க ரஜினியின் நேரம் கேட்டு காத்திருக்கிறார்.

இதனையறிந்த ரஜினி அவருக்கு ஓர் வாய்ஸ் மெசேஜ்ஜை தன் உதவியாளர் மூலம் அனுப்பி இருக்கிறார்.

அதில்… “சீக்கிரமே உன்னை சந்திக்கிறேன் கண்ணா நீ மிகப் பெரிய திறமைசாலி. நீ நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைவர் புரிஞ்சிக்கவே மாட்டாரா.? கலங்கிய ரசிகரால் அதிர்ந்த ரஜினி. l Fan request to Thalaivar Rajini

Rajinikanth promised to meet his diehard fan

விஜய் – ஷாலினி அஜித் உடன் நடித்த பிரபலம் மரணம்..; ஆர்ஜே பாலாஜி இரங்கல்

விஜய் – ஷாலினி அஜித் உடன் நடித்த பிரபலம் மரணம்..; ஆர்ஜே பாலாஜி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை லலிதா. இவர் 500க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி நடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்திருந்தார்.

இவர் உடல்நலக் குறைவால் காலமானார்.

தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் திரைப்படமான ’வீட்ல விசேஷங்க’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து முடித்துக் கொடுத்துள்ளார் லலிதா.

இந்த நிலையில் படப்பிடிப்பின்போது அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்கும் காட்சியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி.

“இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான லலிதா நடித்த கடைசி தமிழ் திரைப்படத்தில் நடித்து, அவரை இயக்கிய அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது.

அவர் எப்போதும் பெரும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவர். அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு எப்பொழுதும் அந்த நினைவுடன் இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி.

RJ Balaji condolence message to late actress Lalitha

தர லோக்கலும் தனுஷூம்..; 5 பட பாடல்கள் வேற லெவல் சாதனை

தர லோக்கலும் தனுஷூம்..; 5 பட பாடல்கள் வேற லெவல் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் அனிருத் இசையில் தனுஷ் நடிப்பில் உருவான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி….’ பாடல் யூட்டியுப்பில் சாதனை படைத்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

இதனால் தனுஷ் பட பாடல்களுக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் தனுஷின் திரைப்படப் பாடல்கள் நிறைய யூட்யூப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

தற்போது மாரி படத்தில் இடம்பெற்ற தர லோக்கல் பாடலும் பெரும் சாதனை படைத்துள்ளது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மாரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தரலோக்கல் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தனுஷின் 100 மில்லியன் கிளப் பட்டியலில் இணைந்துள்ளது

இதற்கு முன்பு ஒய் திஸ் கொலவெறி டி (309 மில்லியன்), டானு டானு (173 மில்லியன்), மறுவார்த்தை பேசாதே (133மில்லியன்) மற்றும் ரவுடி பேபி (1.3 பில்லியன்) ஆகிய பாடல்கள் யூட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 5வது முறையாக தனுஷ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ரசிகர்கள் #MaariTharalocalHits100MViews என ஹாஸ்டாகை பயன்படுத்தி டிரெண்ட் செய்தனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் நடிப்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் மாரி என்பது குறிப்பிடத்தக்கது.

MAARI THARA LOCAL Video Song Crossed 100 MILLION Views On Youtube

விஜய்ஸ்ரீ இயக்கிய ‘POWdER’ தலைப்பே தப்பு.; நிகிலுக்கு நானே PRO.. – பார்த்திபன்

விஜய்ஸ்ரீ இயக்கிய ‘POWdER’ தலைப்பே தப்பு.; நிகிலுக்கு நானே PRO.. – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பிஆர்ஓ நிகில் முருகனை இப்போது சினிமாவில் நாயகனாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

இவர்கள் இணையும் படத்திற்கு பவுடர் என தலைப்பு வைத்துள்ளனர். நாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார்.

பவுடர் படத்தின் கிளிம்ப்ஸை தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். இந்த புரோமோ நேற்று வலிமை படம் ரிலீசான தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பவுடர் கிளிம்ப்ஸ் வெளியிட்டு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கூறியுள்ளதாவது…

இவ்வாறு தன் பாணியில் பார்த்திபன் கலக்கலாக பதிவிட்டுள்ளார்.

Parthiban praises Nikkil’s Powder movie glimpse

சூர்யா – கார்த்தியுடன் ஜோடியாக நடித்த நடிகைக்கு கோல்டன் விசா

சூர்யா – கார்த்தியுடன் ஜோடியாக நடித்த நடிகைக்கு கோல்டன் விசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கார்த்தி உடன் சகுனி, சூர்யாவுடன் மாசு என்ற மாசிலாமணி, அதர்வா உடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ப்ரணிதா.

இந்த நிலையில் நடிகை பிரணிதாவுக்கும் ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

இதுகுறித்த புகைப்படத்தை பிரணிதா வெளியிட்டுள்ளார்.

இவரைப் போன்று பார்த்திபன், சிம்பு, திரிஷா போன்றவர்களுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது.

மலையாள சினிமா பிரபலங்கள் மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், அமலாபால், மீரா ஜாஸ்மின் ஆகியோரும் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

Suriya and Karthi film actress gets golden visa

More Articles
Follows