தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இதன் டிவி உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது. ஓடிடி டிஜிட்டல் உரிமையை நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
அஜித்தின் ‘துணிவு’ பட தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ரசிகர்கள் மத்தியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தவுள்ளதாகவும் அஜித் அதில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
ஆனால் இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில்… ” நல்ல படத்திற்கு அந்த படமே ப்ரமோஷன் தான்” என அஜித் பெயரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
“A good film is promotion by itself!! – unconditional love!
Ajith