பூசாரி வேலைக்கு ஆகாது.. எனவே கடவுளிடமே ‘வலிமை’ அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்

Valimaiவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைப்பெற்று வருகிறது.

இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் தல. நாயகியாக ஹூமா குரேஷி நடிக்க காமெடியனாக யோகிபாபுவும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

அதர்வா நடித்த 100 பட வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் இப்பட இசையமைப்பாளர் யுவன்.

இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறாராம்.

இந்த தகவல்கள் படிப்படியாக கிடைத்தாலும் முறையான அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழுவினர் தரவில்லை.

எனவே ஒருமுறை தமிழக முதல்வரிடமே ‘வலிமை’ அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்டனர்.

தற்போது ஒரு படி மேலே சென்று கடவுள் முருகனிடம் அப்டேட் கேட்டுள்ளனர்.

வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்றை டிசைன் செய்துள்ளனர்.

அதில், முருகனின் படமும், அஜித்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் ‘வலிமை-க்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா” என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது.

Ajith Fans request Valimai update to God

Overall Rating : Not available

Latest Post