தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து, அனிருத் இசையமைத்துள்ள படம் விவேகம்.
இப்படத்தை பிரபல நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளனர்.
நாயகிகளாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் நடிக்க, தம்பி ராமையா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், அப்புக்குட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மே 11ஆம் தேதி தொடங்கும் 12மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியானது.
இதில்…
அஜித்தின் பின்னணி குரல் ஒலிக்கிறது.
அதில் இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு எத்தன தடவை சொன்னாலும்.. நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது.
என்று தன் ரசிகர்களுக்கு அஜித் சொல்வது போல உள்ளது.
மேலும் இடையே அனிருத்தின் பின்னணி இசையும் தெறிக்கவிடும் வகையில் அமைந்துள்ளது.
இறுதியாக இங்கிலீஷில் ஒரு பன்ச் டயலாக்கை வைக்கிறார் அஜித்.
Never. Ever. GIVE UP.
எதற்காகவும் யாருக்காகவும் எப்பவும் உன்னை விட்டுக் கொடுக்காதே என்கிறார்.
மொத்தத்தில்… உன்னை நீ நம்பு. (Believe in Yourself) என்கிறார் தல அஜித்.
Ajith advice to his fans in Vivegam Teaser