விக்ரம்-தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

aishwarya rajeshசின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்துக்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

தற்போது முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் தனுஷ் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் உடனும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் தனுஷ் உடனும் நடித்து வருகிறார்.

இந்த இரு நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது…

“எனக்கு வந்த பெரிய படங்களில் முதல்படம் துருவநட்சத்திரம்தான்.

இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ராதிகா மேடம், இன்னொரு ஹீரோயின் ரீது என அனைத்து கேரக்டர்களுமே படத்தில் முக்கியமாக இருக்கும்.

ஒரு காட்சியில் மூன்று பக்க வசனம் பேசி எமோஷனலாக நடிக்க வேண்டும்.

பெரிய டைரக்டர், பெரிய நடிகர் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. பின்னர் இரண்டு டேக்கிலேயே ஓகே பண்ணிவிட்டேன்.

‘சூப்பரா பண்ணீங்க ஐஸ்வர்யா’ என்று விக்ரம் சார் பாராட்டினார்.

வேறு எந்த ஹீரோஸ் இப்படி பாராட்வார் என தெரியாது. அவருடைய பாராட்டு மறக்க முடியாது.

அதுபோல் தனுஷ் உடன் வடசென்னை படத்தில் நடித்து வருகிறேன்.

என் கேரக்டரில் முதலில் சமந்தா நடிக்கவிருந்தார். அதன்பின்னர் அமலாபால் வந்தார். இப்போது நான் நடிக்கிறேன்.

என் கேரக்டர் படு லோக்கலாக இருக்கும். இதற்குமுன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கேரக்டர் வந்திருக்குமா? தெரியாது.

வடசென்னை படம் எனக்கு முக்கியமான படமாக அமையும்.” என்றார்.

Aishwarya Rajesh shares her working experience with Vikram and Dhanush

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த…
...Read More
தனுஷ் தயாரித்து நடித்திருந்த வடசென்னை படத்தை…
...Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…
...Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More

Latest Post