தன் பிறந்த நாளில் ரஜினி-தனுஷுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா

தன் பிறந்த நாளில் ரஜினி-தனுஷுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanush Aishwaryaஇன்று 2017 புத்தாண்டு பிறந்த தினம்.

இதே நாளில்தான் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் நம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஒரு தமிழரின் சாதனையை படமாக்கவிருக்கிறாராம் ஐஸ்வர்யா.

இதுநாள் வரை இதுபோன்ற விளையாட்டு வீர்ர்களின் படங்கள் படமாக்கப்பட்டாலும் தமிழக வீரர்களின் சாதனைகள் படமாகவில்லை.

இதன்மூலம் தமிழகத்திற்கும் தன் குடும்பத்திற்கு பெருமை சேர்க்க உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

அண்மையில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றைத்தான் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ளார்.

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைக்கவுள்ளார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று ஷாரூக்கான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் கேரக்டரில் நடிப்பது யார்? என்ற தகவல் வெளியாகவில்லை.

Aishwarya R. Dhanush’s next a biopic on Mariyappan Thangavelu

mariyappan

மோடிக்கு ஆதரவளித்த ரஜினி இதை கண்டுக் கொள்ளவில்லையே?

மோடிக்கு ஆதரவளித்த ரஜினி இதை கண்டுக் கொள்ளவில்லையே?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஅண்மைகாலமாக ரஜினியும் தன்னுடைய கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

மோடியின் கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்திற்கு ஆதரவளித்த புதிய இந்தியா பிறந்தது என்றார்.

ஆனால் சமீபகாலமாக ஜல்லிக்கட்டு பற்றி, பலரும் விவாதித்து வருகின்றனர்.

ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இதுவரை ரஜினி வாய்திறக்கவில்லை.

இது ஏன்? என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

புத்தாண்டை கொண்டாட மனமில்லை… விரக்தியில் நடிகர் விவேக்

புத்தாண்டை கொண்டாட மனமில்லை… விரக்தியில் நடிகர் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

comedy actor vivek photosநாளை 2017ஆம் புத்தாண்டு பிறக்கிறது.

பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவரும் நிலையில், இதனை கொண்டாட மனம் இல்லை என நடிகர் விவேக் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்…

“முதல்வர் மறைந்ததால் மனப் புழுக்கம்.

முடியவில்லை நடக்கவில்லை பணப் புழக்கம்;

புயல் அடித்து மரம் ஒடித்து வெயில் கொளுத்தும்;

இந்த வேளையில் எங்கிருந்து புத்தாண்டு முழக்கம்?” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர்.

அஜித் ரசிகர்களின் புத்தாண்டு ஆசையை நிறைவேற்றுவாரா சிவா?

அஜித் ரசிகர்களின் புத்தாண்டு ஆசையை நிறைவேற்றுவாரா சிவா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fansநாளை 2017ஆம் ஆண்டின் பிறப்பை முன்னிட்டு, விஜய், தனுஷ், சிம்பு ஆகிய நடிகர்கள் தங்களின் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவைகளை புத்தாண்டு விருந்தை அளித்து வருகின்றனர்.

ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு அஜித்தின் தல 57 படம் தொடர்பாக எந்த ஒரு பர்ஸ்ட் லுக்கோ, டீசரோ எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று தல தல தான் என்று ரசிகர் மன்றத்தினர் இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அதில்…

“வேதாளம் படத்திற்கு பிறகு எங்களை வெகு மாதங்களாக காத்திருக்க வைக்கிறீர்கள்.

ரசிகர்கள் அனைவரும் இந்த நியூ இயர் தல படத்தின் முதல் பார்வையோடு கொண்டாட விரும்புகிறோம்.

தயவு செய்து எங்களின் கோரிக்கையை ஏற்று தல 57 firstlook அல்லது படத்தின் தலைப்பையாவது வெளியிடுங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

அஜித் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா சிவா? என்பதை இன்று வரை காத்திருந்து பார்ப்போம்.

ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் தரும் தனுஷ்-கார்த்தி-ஜிவி பிரகாஷ்

ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் தரும் தனுஷ்-கார்த்தி-ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Karthi GVPrakashநாளை 2017 புத்தாண்டு பிறக்கிறது.

எனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க, உங்கள் அபிமான நடிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

எனை நோக்கி பாயும் தோட்ட படத்தின் ஒரு பாடல் டீசரை தனுஷ் இன்று டிச. 31ஆம் மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படத்தின் டீசரும் வெளியாகிறது.

இது நாளை வெளியாகும் எனத்தெரிகிறது.

இவர்களைத் தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷின் அடங்காதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைரக்டர் அனுராக் காஷ்யாப் அவர்கள் புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் வெளியிடுகிறார்.

‘இன்னைக்கு நைட் மட்டும் நீ…’ மீண்டும் சிம்பு ‘பீப் சாங்’

‘இன்னைக்கு நைட் மட்டும் நீ…’ மீண்டும் சிம்பு ‘பீப் சாங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbuவம்வில் மாட்டிக் கொள்வது ஒரு ரகம். ஆனால் வம்பை விலைக்கு வாங்குவது ரெண்டாவது ரகம்.

இதில் சிம்பு ரெண்டாவது போலவே.

கடந்த ஆண்டு டிசம்பரில் (2015) டிசம்பரில் பீப் சாங் போட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

தற்போது அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, இந்த டிரெண்ட் சாங் தற்போது வெளியாகியுள்ளது.

இன்னைக்கு நைட் மட்டும் நீ காதல் பண்ணினா போதும் என்று இப்பாடல் தொடங்குகிறது.

இப்பாடலுக்கு முன்பே சில வரிகள் வருகின்றன. அதில் பாட தோனுது. ஆனா மியூசிக் வரல, டியூன் வரல.. ஒரு ….. வரல… என்ற வரிகளும் வருகிறது.

இப்பாடலும் சர்ச்சைக்குள்ளாகும் எனத் தெரிகிறது.

More Articles
Follows