உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் தளபதி…!

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் தளபதி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinமனிதன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் உதயநிதி.

சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கௌரவ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் எழில் இயக்கத்தில் ஒரு படம் என ஒப்புக் கொண்டுள்ளார் உதயநிதி.

இந்நிலையில் இதனையடுத்து இயக்குனர் பொன்ராமின் உதவி இயக்குனர் தளபதி இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கபாலி ரஞ்சித்துக்கு கல்தா..? முத்தையாவுடன் இணையும் சூர்யா..?

கபாலி ரஞ்சித்துக்கு கல்தா..? முத்தையாவுடன் இணையும் சூர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaகபாலி படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்குவார் என செய்திகள் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், புதிதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. கிடைத்த தகவலை இங்கே பகிர்கிறோம்.

அதாவது கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தில் தந்தை-மகன் பாசத்தை ஆக்ஷன் உடன் சொல்லவிருக்கிறாராம் இயக்குனர்.

தந்தையாக ராஜ்கிரண் நடிக்க, முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராக நடிக்கி உள்ளார் சூர்யா.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் வாழ்க்கையை மணல் ஓவியமாக வரைந்த ரசிகர் (வீடியோ)

ரஜினியின் வாழ்க்கையை மணல் ஓவியமாக வரைந்த ரசிகர் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth stillsரஜினிகாந்த்.. 140க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தையும் மீறியும் மற்ற மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ரஜினி ரசிகர் ராகுல் ஆர்யா என்பவர் ரஜினியின் மணல் ஓவியத்தை வரைந்துள்ளார்.

ரஜினியின் ஆரம்ப கால வாழ்க்கை முதல், மணல் ஓவியமாக வரைந்து அதை வீடியோவாக ரெக்கார்டு செய்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ 200 நொடிகள் ஓடக்கூடியது. (3.20 நிமிடம்)

அந்த வீடியோவை இணைத்துள்ளோம் பாருங்கள்….

கமல் – விஜய் – அஜித்…. ஆளுக்கொரு பண்டிகை…!

கமல் – விஜய் – அஜித்…. ஆளுக்கொரு பண்டிகை…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay kamal ajithகடந்த வருடம் தன் ரசிகர்களுக்காக மூன்று படங்களை கொடுத்தார் கமல்.

இவ்வருடம் விஸ்வரூபம் மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்களை கொடுக்கவிருக்கிறார்.

இதில் விஸ்வரூபம் படத்தை தீபாவளி வெளியீடாக கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் மீதமுள்ளதால், விரைவில் அதை முடித்துவிடுவோம் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறாராம்.

இதனை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-60’ படத்தை அடுத்த வருடம் 2017 பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் பின்னணி நெல்லை மாவட்டம் என்பதால் அங்கே சூட்டிங் நடத்தவிருந்தனர்.

தினமும் விஜய் ரசிகர்களின் கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதால், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அதே போன்று செட் போட்டு நடத்தி வருகிறார்களாம்.

இதனையடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பெரும்பாலும் இதன் படப்பிடிப்பை ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலேயே நடத்த இருக்கிறார் இயக்குனர்.

திரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் இந்திய உளவாளியாக நடிக்கிறார் அஜித்.

நாயகிகளாக அனுஷ்கா மற்றும் ‘இறுதிச்சுற்று” ரித்திகா சிங் நடிக்கிறார்கள். ரித்திகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம் என கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 14-ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டு) அன்று திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி.. கபாலியுடன் எப்படி கம்பேர்..?

மணிரத்னம் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி.. கபாலியுடன் எப்படி கம்பேர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mani ratnam and RJ Balajiவானொலி (அட அதாங்க ரேடியோ) என்றாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் ஆர்ஜே பாலாஜி.

இவர் தற்போது சினிமாவில் காமெடி செய்து கலக்கி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் சிறந்த காமெடியன் விருதை நானும் ரௌடிதான் படத்திற்காக பெற்றார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஆர்ஜே. பாலாஜி.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

“முதலில் இதற்கான வாய்ப்பு வந்தபோது நான் நிஜம் என நினைக்கவில்லை. பின்பு சென்னை வந்தபின் மணிரத்னம் சாரை சந்தித்தேன்.

அவர் என்னிடம் அரை மணி நேரம் கதை சொன்னார். பின்பு அவருடன் செல்ஃபி எடுத்துகொண்டேன்.

நாயகன், தளபதி, அஞ்சலி உள்ளிட்ட மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இன்று அவர் படத்தில் நான் நடிக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இது எப்படி இருக்கிறது என்றால் நாம் கபாலி படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போக நினைக்கலாம். ஆனால் கபாலியாக மாற நினைக்க முடியாது.

என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தது அப்படிதான் உள்ளது.

இது கனவு நிஜமானதாக நினைக்கவில்லை. அதுக்கும் மேல இது.” என்றார்.

தம்பி கார்த்திக்காக சிங்கத்திற்கு தடை போட்ட சூர்யா..!

தம்பி கார்த்திக்காக சிங்கத்திற்கு தடை போட்ட சூர்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi and suriyaகோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் காஷ்மோரா.

சமீபத்தில் இதன் சூட்டிங் நிறைவுபெற்றது.

எனவே நேற்று முதல் பூஜையுடன் இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்-3’ படத்தையும் தீபாவளிக்கு வெளியிட இருந்தனர்.

ஆனால் தன் தம்பி கார்த்தியின் படமும் தன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால், லாபம் பாதிக்ககப்படும் என்பதால் ‘சிங்கம்-3’ படத்துக்கு தடை போட்டு விட்டாராம் சூர்யா.

அண்ணன்டா…

More Articles
Follows