குடும்ப அமைப்பு : உள்ளே வெளியே வாழும் இருவர்.; வெற்றிமாறன் – ஜெயம்ரவி ஆதரவு

குடும்ப அமைப்பு : உள்ளே வெளியே வாழும் இருவர்.; வெற்றிமாறன் – ஜெயம்ரவி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Komala Hari Pictures மற்றும் One Drop Ocean Pictures நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒரு அழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.

கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம்.

பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக சொல்லியுள்ளது இப்படம்.

பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார்.

மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் செய்துள்ளார்.

லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தின் இசை உரிமையினை TIPS MUSIC பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Annapoorni first look launched by Vetrimaran and Jayam Ravi

நடிகர் யோகி பாபுவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

நடிகர் யோகி பாபுவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

இவர் மஞ்சு பார்கவியை பிப்ரவரி 2020 இல் திருமணம் செய்து கொண்டார்.

தம்பதியருக்கு மூத்த மகன் பிஎம் வேஷகன் கடந்த ஆண்டு பிறந்தார்.

இந்நிலையில், தீபாவளி ஆன நேற்று இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் யோகி பாபு.

யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவி தம்பதிக்கு இப்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

actor Yogi Babu’s second child was born

நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்.; பிரபாஸ் தீபிகா அமிதாப் இணைந்த பட போஸ்டர் வெளியானது

நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்.; பிரபாஸ் தீபிகா அமிதாப் இணைந்த பட போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.

திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு 50வது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ‘ புரொஜெக்ட் கே’.

இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் அமிதாப்பச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும் ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க படத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது.

அந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸின் கை காற்றில் தன் சக்தியைக் காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் ‘நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்’ என்ற வாசகத்தை இடம்பெற வைத்து பிரபாஸின் நாயக பிம்பத்தை செறிந்த வீரத்துடன் விவரித்திருக்கிறார்கள்.

ரெபெல் ஸ்டார் பிரபாஸின் பிறந்தநாளுக்கு அவர் நடித்து வரும் ‘ புராஜெக்ட் கே’ படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

 புரொஜெக்ட் கே

Team Project K Wishes Rebel Star Prabhas On His Birthday

‘சர்தார்’ பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்..; சாந்தனு பாராட்டு

‘சர்தார்’ பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்..; சாந்தனு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்த திரைப்படம் ‘சர்தார்’.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி உலகெங்கும் வெளியானது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் கார்த்தி உடன் ராஷி கண்ணா ரஜிஷா விஜயன் லைலா முனீஸ்காந்த் சங்கி பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தண்ணீர் வியாபாரத்தில் பேசப்பட்ட அரசியலை இந்த படம் தோலுரித்துக் காட்டியிருந்தது.

தற்போது இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த படத்தை நடிகர் சாந்தனு பாராட்டி இருக்கிறார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்..

‘சர்தார் பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்” என பாராட்டி இருக்கிறார்.

பிஎஸ் மித்ரன் உங்களின் ஆராய்ச்சியும் உங்களது மேக்கிங்கும் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஜிவி பிரகாஷ் வாழ்த்துக்கள்..” என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

#Sardar Brilliant🤩💥
@Psmithran Bang On research and filmmaking👍🏻👌🏻
@Karthi_Offl What a powerhouse you are brother👌🏻
@AntonyLRuben Your a master when it comes to cuts 👌🏻👌🏻
Semma visuals @george_dop
Loved the film
Best wishes team @gvprakash @Prince_Pictures @dhilipaction

உலகளாவிய ஹாலிவுட் படத்தில் நடிக்கும் உலகநாயகன் மகள்

உலகளாவிய ஹாலிவுட் படத்தில் நடிக்கும் உலகநாயகன் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு ‘தி ஐ’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது.

எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் ‘தி ஐ’ எனும் படத்தினை ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ‘டிரெட்ஸ்டோன்’ எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானார்.

இவர் இசை திறமையால் உலகம் முழுவதிலும் உள்ள இசை ஆர்வலர்களிடத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

இதன் காரணமாக தற்போது திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.

இவர் தற்போது நடித்து வரும் ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் திரைப்படம் உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம். கதைப்படி ஒரு விதவை பெண், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்கு பயணிக்கிறார்.

அதன் போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசனுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ மற்றும் ‘ஒன் டே’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் ரௌலி, ‘ட்ரூ ஹாரர்’ படப் புகழ் நடிகை அன்னா சவ்வா, ‘தி டச்சஸ்’ பட புகழ் நடிகை லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் மெலனி டிக்ஸ் பேசுகையில்,…

‘ இயக்குநர் டாப்னே ஷ்மோன் மற்றும் திரைக்கதை ஆசிரியர் எமிலி கார்ல்டன் ஆகியோரின் கூட்டணியில் அற்புதமான படைப்பை உருவாக்குகிறோம். ‘தி ஐ’ நான்காண்டு கால உழைப்பில் உருவானது.

எங்களுடைய குழுவில் திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். மேலும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்கும் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவும் உள்ளது. எங்களுடைய இந்த படைப்பு அசாதாரணமானது. அத்துடன் எங்களின் இலட்சியத்தை எட்டும் உற்சாகத்தையும் பெற்றிருக்கிறோம்.” என்றார்.

நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்…

” இசையாலும், சினிமா எனும் காட்சி ஊடகத்தின் மூலமாகவும் கதைகளை பகிர்ந்து கொள்வது என்பது என்னுடைய கனவு. இந்த கனவினை தற்போது சர்வதேச அளவில் விரிவுப்படுத்தி இருக்கிறேன். ‘தி ஐ’ போன்ற அற்புதமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான பெண்மணிகளால் வழி நடத்தப்படும் அணி என்பது இதன் கூடுதல் சிறப்பு. ‘

தி ஐ’ ஒரு அழகான கதை. இதனை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.” என்றார்.

இதனிடையே WWF எனப்படும் (World Wildlife Fund for Nature) வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான நிதியம் எனும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் இந்திய பிராந்தியத்திற்கான விளம்பர தூதுவராக நடிகை ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிறுவனம் உலக அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் 26 நாடுகளில் 1500 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது.

இந்த திரைப்படத்திலும் பசுமையான இயற்கை சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் படப்பிடிப்பு நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியிருக்கிறது. இதற்காக ஸ்ருதிஹாசனின் பங்களிப்பு அதிகம் என இந்த குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தலைப்பு ‘வீர சிம்ஹா ரெட்டி’

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தலைப்பு ‘வீர சிம்ஹா ரெட்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு ‘NBK 107’ என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர்.

‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் தலைப்பு ஆக்க்ஷன் என்டர்டெய்னர் ஜானருக்கு பொருத்தமானது. பாலகிருஷ்ணாவின் பெரும்பாலான படங்கள் ‘சிம்ஹா’ என இருந்தால், அந்தத் திரைப்படங்கள் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் படத்தின் தலைப்பும், போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த போஸ்டரில் பாலகிருஷ்ணா, உக்ரமான அவதாரத்தில் தோன்றுவது அவரது கதாபாத்திரத்தை சித்தரிக்கிறது. அதிலும் வேட்டி அணிந்த அவரது தோற்றமும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்துடன் மிகப்பெரிய வேட்டைக்காக காத்திருப்பது போல் உணர்த்துவதால், ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது. அதிலும் ‘புலிசேர்லா’ நாலு கிலோ மீட்டர் என்ற மைல் கல் மீது அவர் கால் வைத்து நின்றிருக்கும் தோற்றம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டருக்கும் அவரது ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்து வருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் துனியா விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ. எஸ். பிரகாஷ் பணியாற்றுகிறார். ராம் – லக்ஷ்மன் சண்டைக் காட்சிகளை அமைக்க, சந்து ரவிபதி தயாரிப்பு நிர்வாகத்தை மேற்கொள்கிறார்.

நந்தமுரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ 2023 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.

More Articles
Follows