மீண்டும் மீண்டும் அஜித்துடன் மோதும் விஷால்

மீண்டும் மீண்டும் அஜித்துடன் மோதும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Vishal getting ready to clash with Ajith movieமிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

பொதுவாக ஒரு படத்தின் பாடல்கள் மட்டுமே முன்பே வெளியாகும். ஆனால் இது முழுக்க ஆக்சன் படம் என்பதால், இதன் ஆக்சன் காட்சிகளை மட்டும் முதலில் வெளியிட இருக்கிறார்களாம்.

மேலும் இப்படத்தில் இடைவேளைக்கு பிறகு பாடல்களே இல்லையாம்.

விஷால், ராகுல் ப்ரீத் சிங், ஆண்ட்ரியா, வினய், பிரசன்னா, பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதே நாளில்தான் அஜித் நடித்த விவேகம் படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டில் ஆழ்வார் மற்றும் தாமிரபரணி ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் மோதின.

அதுபோல் 2013ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஆரம்பம் மற்றும் பாண்டியநாடு படங்கள் மோதியது குறிப்பிடத்தக்கது.

Again Vishal getting ready to clash with Ajith movie

இன்று முதல் சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் சமந்தா

இன்று முதல் சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha romance with Sivakarthikeyan for SK12 movieரெமோ மற்றும் வேலைக்காரன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தையும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் இயக்க, இமான் இசையமைக்கிறார்.

இதில் சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே இதன் சாட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுவிட்டது.

இதில் நாயகியாக நடிக்கும் சமந்தா இன்றுமுதல் சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.

அவரை படக்குழுவினர் வரவேற்றனர்.

Samantha romance with Sivakarthikeyan for SK12 movie

அஜித் ரசிகர்களுக்கு நெக்ஸ்ட் ட்ரீட் ஆன் தி வே

அஜித் ரசிகர்களுக்கு நெக்ஸ்ட் ட்ரீட் ஆன் தி வே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalai Viduthalai next single from Vivegam release on 10th July 2017அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் உள்ள சர்வைவா பாடலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

இது இணையங்களில் ட்ரெண்டாகி பாப்புலர் ஆனது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான தலை விடுதலை என்ற பாடலை வருகிற ஜீலை 10ஆம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.

இப்பாடலை இதன் இயக்குனர் சிவா எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalai Viduthalai next single from Vivegam release on 10th July 2017

சினிமாகாரனுக்கு பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறாங்க.. ஆர்.ஜே.பாலாஜி ஆதங்கம்

சினிமாகாரனுக்கு பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறாங்க.. ஆர்.ஜே.பாலாஜி ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balajiகடந்த வாரங்களில் வெளியான வனமகன் மற்றும் இவன் தந்திரன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால், தியேட்டர்கள் ஸ்டிரைக் காரணத்தால், இப்படங்களை தியேட்டர்களில் ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.

தற்போது ஸ்டிரைக் முடிந்து இன்றுமுதல் திரையரங்குகளில் இப்படங்களை மீண்டும் திரையிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேச பத்திரிகையாளர்களை வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவை சேர்ந்த கலைஞர்கள் சந்தித்தனர்.

அப்போது ஆர்.ஜே. பாலாஜி பேசியதாவது…

நான் இந்த படம் இல்லைனா வேற படத்தில் நடிக்க போய் விடுவேன், ஆனால் இயக்குனர் கண்ணனுக்கு அப்படி இல்லை.

ரொம்ப கஷ்டத்தில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ரங்கூன் ஏதோ ஒரு படம் ஓடிருச்சுனு இல்லாம, அடுத்தடுத்து ஹிட் என்றாகியிருக்க வேண்டியது.

கடவுள் புண்ணியத்தால் நாளை மீண்டும் ரிலீஸாகிறது. தமிழ் சினிமாவில் பல தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களை குறைத்தால் சினிமா இன்னும் சூப்பராக இருக்கும்.

மக்கள் எப்போதுமே கோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்கு என்ன பிரச்சினை என்ற கோணத்திலேயே பார்க்கிறார்கள்.

இங்கும் பல பிரச்சினகள் இருக்கு. திரையரங்குகளின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

டெக்னீசியன்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் லிப்ரா குறும்பட விழா

டெக்னீசியன்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் லிப்ரா குறும்பட விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra Short film fesival coming soonசினிமாவில் நாளுக்கு நாள் குறும்படங்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டுதான் போகிறது. ஒரு காலத்தில் உதவி இயக்குனர் வாய்ப்புக்காக கால்கடுக்க சுற்றியலைந்தவர்கள், பத்து வருடம் உதவி இயக்குனர்களாகவே காலத்தை கழித்துவிட்டு பின் வாய்ப்பு தேடுபவர்கள் என வழக்கமான பாதையில் செல்லாமல் குறும்படம் மூலமாக தனது திறமை இதுதான் என வெளிச்சம்போட்டு காட்டி அதையே தனது விசிட்டிங் கார்டாக மாற்றி படம் பண்ணும் இளைஞர் கூட்டம் ஒன்று சினிமாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்துகொண்டு இருக்கிறது.

அப்படி நுழைபவர்களுக்கான வாசல் குறுகியதாகவே இருக்கிறது. அந்த வாசலை விரியத்திறந்து வைத்து படைப்பாளிகளுக்கு ஒரு அற்புதமான மேடை அமைத்து கொடுக்கும் வேலையை கையில் எடுத்துள்ளது லிப்ரா புரடக்சன்ஸ்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்.

நளனும் நந்தினியும், சுட்ட கதை, விரைவில் வெளிவர இருக்கும் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

இந்த குறும்பட விருது விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன.?

ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இருந்துகொண்டு இந்த குறும்பட விழாவை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்கிற சந்தேகத்தை, லிப்ரா புரடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரிடமே கேட்டோம்..

பொதுவா குறும்படம் எடுக்கிறவங்க கொஞ்சம் செலவு செஞ்சு, யாரோ ஒரு சில சினிமா பிரபலங்களை கூப்பிட்டு, திரையிட்டு காட்டி அந்த பாராட்டோட சந்தோஷப்பட்டு நின்னுடறாங்க.. இன்னும் சிலர் அதை வைத்து யாரிடமாவது உதவி இயக்குனரா சேர்றாங்க.. அப்படி இல்லைன்னா அதையே படம் இயக்குறதுக்கு அனுபவமா நினைத்து வாய்ப்பு தேட ஆரம்பிச்சிடுறாங்க..

ஆனா சினிமாவுல இருக்குறவங்களுக்கு எப்படி விருதுகள் தான் பாராட்டா அமையுதோ அதேபோல சினிமாவுல நுழையணும் அப்படிங்கிற கனவோட ஒரு வெறியோட குறும்படங்களை இயக்குறவங்களுக்கு நிச்சயம் விருதுகள் தான் பாராட்டும் ஊக்கமுமா அமையும்.. அப்படிப்பட்ட ஒரு களத்தை அவர்களுக்கு அமைச்சு கொடுக்கிறதுக்காகத்தான் இந்த குறும்பட திருவிழாவை நடத்துறோம்” என்கிறார்.

சரி இதை நடத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்.?

குறும்பட விழாக்கள் நடத்துறது ஒரு சேவை மட்டுமல்ல.. இதுக்கு வர்த்தக ரீதியா ஒரு ஓப்பனிங் இருக்குது.. ஆனா நாம் இன்னைக்கு விதை போடுறோம்.. அதோட பலன் கிடைக்க நமக்கு கொஞ்ச நாளாகும் இல்லையா.. அதேசமயம் பணம், லாபம் அப்படிங்கிறத தாண்டி இந்த குறும்பட விழா மூலமா திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துறோம் இல்லையா.. நாளைக்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அங்கே லிப்ரா விருது வாங்கிருக்கேன்னு அவங்க அதை ஒரு அங்கீகாரமா சொல்லுவாங்கள்ல.. அதுதான் நாங்க எதிர்பார்க்கிற பலன்.

ஒரு 20 நிமிட குறும்படம் மூலமா நம்மால பத்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியுதுன்னா, இதே அர்ப்பணிப்பையும் உழைப்பையும் திரைப்படத்துல காட்டுனா அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபத்தை நாம் கொடுக்க முடியும் அப்படிங்கிற உந்துதலை ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த விருது ஏற்படுத்தும்.

என்னால எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது.. ஆனா அவங்களுக்கு படம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பையும் அவங்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தரமுடியும்.. வருங்காலத்துல லிப்ரா அவார்ட்ஸ் அப்படின்னா திரையுலகத்துல மிக மரியாதையான ஒரு விஷயமா மாறனும். இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துறதோட நோக்கம்.” என்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன் தெள்ளத்தெளிவாக..

போட்டியை பற்றி ….

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள வரும் ஜூலை-15 தான் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்பவதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவில் இருக்க கூடாது.. ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் இந்த குறும்படங்களை பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.. அந்த பத்து படங்களும் விழா நடைபெற இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்தமாக திரையிடப்பட்டு அதில் அனைத்து பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. அன்று மாலையே பரிசளிப்பு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உங்கள் குறும்பட சிடிகளை No.14, 1st Cross Street, Lambert Nagar, AlwarThirunagar, Chennai – 87 எனும் முகவரிக்கு அனுப்பலாம். விவரங்களுக்கு Mobile: 97899 16561, Office: 044 – 4208 9658 இந்த எண்களை தொடர்புகொள்ளலாம்.

இந்த போட்டி குறித்த அடுத்தகட்ட விபரங்களை லிப்ரா புரடக்சன்ஸ் பேஸ்புக் பக்கத்தின் மூலம் அவ்வப்போது போட்டியாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

https://www.facebook.com/LIBRAShortFilmAwards/

Libra Short film festival coming soon

குடிச்சு சாவாதீங்கடா… குறும்படத்தால் கவர்ந்த இளசுகள்

குடிச்சு சாவாதீங்கடா… குறும்படத்தால் கவர்ந்த இளசுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Drinking awareness short film Inbam endra Bodhaiyaalae“ஐயோ வவுத்துக்குள்ள போக வேண்டிய அம்புட்டு சரக்கும், இப்படி வேஸ்ட்டா பூமிக்குப் போகுதே. பின்னே ஏண்டா பூமி சுத்தாது…?” என்று குடிகாரர்கள் நாக்கில் ஜலம் வழிய அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது ஒரே ஒரு காட்சியைதான்.

அது? நாடெங்கிலும் பெண்களே கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் அற்புதமான காட்சி.

ஒவ்வொரு வீடுமே குடியின் விஷத்தன்மை பற்றி நன்கு அறிந்திருக்கிறது. காரணம்… அவரவர் வீட்டு செல்லங்கள்தான்! கணவன் குடித்தால் கூட கண்ணீருடன் மன்னித்துவிடலாம்.

ஸ்கூலுக்கு போற பசங்கள்லாம் குடிக்குதே என்கிற ஆத்திரம்தான் இந்த ஆவேச டாஸ்மாக் தாக்குதலுக்கு காரணம். மக்கள் விழித்துக் கொண்ட இந்த அருமையான நேரத்தில், குடியின் தீவிரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது ஒரு ஷார்ட் பிலிம்.

சுமார் 30 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தின் பெயர் ‘இன்பம் என்ற போதையாலே’.

அப்சல் ஹமீது குடிகார இளைஞனாக நடித்திருக்கிறார். ஒரு நல்ல பையன் எப்படி கூடா நட்பின் காரணமாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். அதன் விளைவாக என்னென்ன நடக்கிறது என்பதை அப்படியே நேரில் பார்ப்பது போல விவரிக்கிறது ‘இன்பம் என்ற போதையாலே’ குறும்படம்.

குறுகிய நேர படமாக இருந்தாலும் அதை பிரச்சார படம் போல எடுக்காமல், படு சுவாரஸ்யமாகவும், திடுக்கிடும் ட்விஸ்ட்டுகளுடனும் இயக்கியிருக்கிறார் அப்துல் கரீம். திரைக்கதை, வசனத்தில் அப்துல் கரீமுக்கு உதவியும் இருக்கிறார் இப்படத்தின் ஹீரோ அப்சல் ஹமீது.

ஷார்ட் பிலிம் மூலம் சினிமாவின் கதவுகளை துணிச்சலாக தட்டிப் பார்க்கும் இளைஞர்கள் கூட்டத்தில் தனியாக கவர்கிறார்கள் இப்படத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவரும். குறிப்பாக இசை. சாந்தன் என்ற இளைஞர் அமைத்திருக்கும் பின்னணி இசை, படத்தை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கிறது.

Drinking awareness short film Inbam endra Bodhaiyaalae

Production banner
PSR FILMS, MAN MADE PICTURES

Starring
Afsal Hameed, Vekkey Simbu, Abdul Karim, Selwyn Tintoo, Ravi Shankar, Jenny Bharathi, Inbasagar, Julliyan, Sandy Senthil, Gopal, Maabu Baasha, Balaji, Pattu, Azar, Thameem, Veera.

Crew.

Producer – Pavithra
Co-producer Ravi Shankar and Varshini sekar.
Director – Abdul Karim.
Story Afsal Hameed.
Screenplay & Dialogues – Abdul Karim and Afsal Hameed. Cinematography – Ameen Associate Cinematographer – Vithagan Suryan
Music Santhan Anebajagane. Sound mixing – Sudharsan Lingam. Editing – Amuthan.
DI – Prakash.
Sfx – Iqbal.
Stills and designs – Gopal.
Subtitles – Sadhana Sruthikeerthi. Production supervisor – Ashik.

Drinking awareness short film Inbam endra Bodhaiyaalae

More Articles
Follows