மீண்டும் பல்கேரியா பறந்தார் அஜித்

மீண்டும் பல்கேரியா பறந்தார் அஜித்

ajith chennai airportதல 57 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி முடித்தனர் அஜித் படக்குழுவினர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை பல்கேரியா நாட்டில் நடத்தியிருந்தனர்.

தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா நாட்டிற்கு இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இதன் சூட்டிங் 60 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், தம்பி ராமையா, கருணாகரன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *